வீ சாட் சலுகை ஸ்டிக்கர் அனுப்பி ரீ-சார்ஜ் பெறுங்கள்

Posted by:

ரக்ஷா பந்தனை சிறப்பாக கொண்டாட, வீ சாட் நண்பர்களுக்கு வெகுமதி என்ற சலுகையை அறிவித்துள்ளது. இதன் மூலம் வீ சாட்டில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருக்கு அன்பை பரிமாறினால் பரிசாக 60 ரூபாய்க்கு ரீ-சார்ஜை இலவசமாக பெறலாம்.

நண்பர்களுக்கு வெகுமதி திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் வீ சாட்டின் பிரெத்யேக ஸ்டிக்கர்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டால் இலவச ரீ-சார்ஜை பரிசாக பெறலாம். ஆகஸ்டு 4 முதல் 13 வரை நடைபெறும் போட்டி குறித்த தகவல்களை வீ சாட்டில் அறிந்து கொள்ளலாம்.

வீ சாட்  அனுப்பினால் ரீ-சார்ஜ் சலுகை

டென்சென்ட் மூலம் சீனாவில் ஜனவரி 2011ல் வெளியான வீ சாட் இன்று வரை வாட்ஸ் அப்புக்கு சிறந்த போட்டியாக விளங்கி வருகிறது.வீ சாட்டில் மெசெஜ், வாய்ஸ் என்ற வசதிகளோடு தகவல் தொடர்பு அப்ளிகேஷனாக பயன்பாட்டாளர்களுக்கு சிறந்த சேவையை அளித்து வருகிறது.

ஆட்ராய்டு,ஐ போன், விண்டோஸ்,பிளாக்பெரி,சிம்பயான் மென்பொருள்களை சப்போர்ட் செய்யும் போன்களில் வீ சாட் பயன்படுத்தமுடியும் என்பதோடு 2013 ஆண்டு வரையிலான தகவலின் படி 300 மில்லியன் பயன்பாட்டாளர்கள் வீ சாட்டில் இருக்கின்றனர்.

கடந்த மாதம் ஆட்ராய்டு வீ சாட்டில் ரீ கால் வசதி மேம்படுத்தப்பட்டது, இதன் மூலம் 2 நிமிடங்களுக்கு முன் அனுப்பப்பட்ட மெசெஜை பார்க்கமுடியும் என்பதையும் தாண்டி கிராஸ் பிளாட்பார்ம் மூலம் 1 ஜி.பி வரை தகவல்களையும் சேமிக்க முடியும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்