நம்மையெல்லாம் 'முட்டாள்' ஆக்கிய 'புத்திசாலிகள்'..!

ஒருவேளை இதையெல்லாம் நீங்கள் நம்பி இருந்தா.. நீங்கள் ரொம்ப அப்பாவியா இருந்துருக்கீங்கனு அர்த்தம்.!

Written By:

இண்டெர்நெட்டும், சமூக வலைதளங்களும் எதற்கு பயன்படுகிறதோ இல்லையோ.. 'ஒன்னுமே இல்லாத விஷயத்தை ஊதி ஊதி பெருசாக்க' ரொம்பவே பயன்பட்டு கொண்டிருகிறது. அப்படியாக, இன்டர்நெட்டில் நம் குசும்புக்கார மக்கள் செய்யும் வேலைககளும் கிளப்பி விடும் பொய் கதைகளும் கொஞ்சம் நஞ்சமில்லை...!

அப்படியாக, நம்ம ஆட்கள் கிளப்பி விட்டு, நம்மையெல்லாம் முட்டாளாய் ஆக்கிய சில 'கொடுமையான' புரளிகளை பற்றி தான் பின் வரும் ஸ்லைடர்களில் பார்க்க இருக்கின்றோம். இன்றும் வரைக்கும் அந்த புரளிகளை எல்லாம் உண்மை என்று நம்பிக்கொண்டிருக்கும் 'பாவப்பட்ட' மக்களுக்கு இது சமர்ப்பணம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
புரளி நம்பர் 1 :

புரளி நம்பர் 1 :

சமீபத்தில் இமாலயம் வரை தெரியும் இந்திய தேசத்தின் செயற்கைகோள் புகைப்படம் ஒன்று வெளியானது, அது நிஜமான ஒன்றாகும். ஆனால் பல ஆண்டுகளாக தீபாவளி அன்று எடுக்கப்பட்ட இந்தியாவின் செயற்கைகோள் புகைப்படம் என்று பேஸ்புக்கில் இன்றும் ஷேர் ஆகும் இந்த புகைப்படம் முற்றிலும் போலியானதாகும்.!

புரளி நம்பர் 2 :

புரளி நம்பர் 2 :

10 தலை நாகம் உள்ளதா இல்லையா என்பது உறுதியற்ற ஒரு விடயமாகும். ஆனால் அவ்வப்போது இவ்வகை பாம்புகளை கண்டதாக புகைப்படங்கள் வெளியாகும். அப்படியாக வெளியான ஒன்றில் ஒரு சிறப்பான போலி பாம்பு தான் இது - இலங்கையில் சிக்கியது என்றும் கேரள எல்லையில் சிக்கியது என்றும் செய்திதாள்கள் வரை பரவிய பத்து தலை நாகம்..!

புரளி நம்பர் 3 :

புரளி நம்பர் 3 :

சமீபத்தில் ஒரே பிரவசத்தில் 4 குழந்தைகள் பிறந்த செய்தியை பார்த்தோம். அது உண்மைதான். ஆனால் இது டூபாக்கூர் மேட்டர் - ஒரே பிரசவத்தில் 11 குழந்தைகள்..!

புரளி நம்பர் 4 :

புரளி நம்பர் 4 :

இன்றும் பல இந்தியர்கள் நம்பும் ஒரு கட்டுக்கதை இது - உலகின் சிறந்த தேசிய கீதமாக இந்திய தேசிய கீதம் என்று யூனஸ்க்கோ (UNESCO) அறிவித்துள்ளது..!

புரளி நம்பர் 5 :

புரளி நம்பர் 5 :

ஐபோன் கருவிகளின் விற்பனையை சரிக்க கிளப்பி விடப்பட்ட வியாபாரத்தந்திரமா.?? அல்லது ஐபோனை பிடிக்காதவர் பார்த்த வேலையா தெரியவில்லை அனால் செம்மையான ஒரு புரளி இது. அதாவது - எபோலா வைரசால் பாதிக்கப்பட்ட ஐபோன் 6..!

புரளி நம்பர் 6 :

புரளி நம்பர் 6 :

வெப்பத்தில் காண்டாக்ட் லென்ஸ்கள் (Contact Lens) உருகும்..! (இது இன்றும் நம்பப்பட்டு கொண்டிருக்கிறது)

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
The worst Internet hoaxes ever. Read more this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்