மனைவி சமையலை போட்டோ எடுத்தால் ருசியாக மாறிடும்.!!

By Meganathan
|

எங்கு சென்றாலும் போட்டோ எடுத்து பதிவு செய்பவர்கள் அதிகப்படியான கிண்டல்களுக்கு ஆளாக்கப்படுவதை பெரும்பாலானோர் சமூக வலைதளங்களில் பார்த்தும், அனுபவப்பட்டும் இருப்பீர்கள். அந்த வகையில் உணவை உண்ணும் முன் அதனை புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவு செய்வோருக்கு சாதகமாக ஓர் ஆய்வு முடிவு அமைந்துள்ளது.

மனைவி சமையலை போட்டோ எடுத்தால் ருசியாக மாறிடும்.!!

நுகர்வோர் மார்க்கெட்டிங் பிரிவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், உணவை உண்ணும் முன் புகைப்படம் எடுத்தால் உணவின் ருசி அதிகரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 120 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இரு பிரிவினருக்கும் ஒரே உணவு வழங்கப்பட்டது. இதில் ஒரு பிரிவினர் உணவை புகைப்படம் எடுத்து அதன் பின் உண்டனர், மற்றொரு பிரிவினர் உணவை புகைப்படம் எடுக்காமல் உண்டனர். பின் உணவை புகைப்படம் எடுத்து அதன் பின் உண்டவர்கள் உணவு அதிக ருசியாக இருந்ததாக தெரிவித்துள்ளனர்.

மனைவி சமையலை போட்டோ எடுத்தால் ருசியாக மாறிடும்.!!

உணவை புகைப்படம் எடுக்கும் போது நம்மை அறியாமல் உணவுடன் அதிக உறையாடல் ஏற்படுகின்றது. அதாவது புகைப்படம் எடுக்க சரியான கோணம், ஃபிரேம் கம்போசிஷன், சரியான வெளிச்சம் உள்ளிட்டவைகளை பார்த்து படம் எடுக்கின்றோம். அதன் பின் உணவு சார்ந்த ஓர் நேர்மறை எண்ணம் மனதில் எழுகின்றது. பின் உணவை ருசிக்கும் போது உணவின் ருசி அதிகமாக நம் மனதில் உணரப்படுகின்றது.

மனைவி சமையலை போட்டோ எடுத்தால் ருசியாக மாறிடும்.!!

உணவை உட்கொள்ளும் முன் உணவு குறித்த எதிர்பார்ப்பு நேர்மறை எண்ணமாக மனதில் பதிவு செய்யப்படுவதால் உணவின் ருசி அதிகமாகின்றது. பொதுவாக உணவு புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பதிவு செய்வோர் இந்த அனுபவத்தை பெற்றிருக்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றது.

Best Mobiles in India

English summary
Taking Pictures Of Food And sharing it On Instagram Make It more Tasty Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X