
லிங்க்டு இன், ட்விட்டர், ஃபேஸ்புக், கூகுள் ப்ளஸ் போன்ற சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது.
ஒருவர் எந்த மூலையில் இருந்தாலும் சரி, அவரது அன்றாட நிகழ்வுகளையும் இந்த சமூக வலைத்தளங்கள் மூலம் எளிதாக பதிவு செய்ய முடியும்.
மேலும், தற்போது ஸ்மார்ட்போன்களில் சமூக வலைதளங்களை எளிதாக பயன்படுத்தும் பிரத்யேக வசதிகளுடன் வருகிறது. எனவே, ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் மூலமாகவே 93 சதவிகிதம் பேர் சமூக வலைத்தங்களை பயன்படுத்தப்படுவதாக நீல்சன் இன்ஃபர்மேட் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சமூக வலைத்தளங்கள் பயன்படுத்தப்படும் சதவிகிதத்தினை தனித்தனியாக பிரித்து கூற வேண்டும் என்றால் ஃபேஸ்புக் 88 சதவிகிதமும், கூகுள் ப்ளஸ் 17% சதவிகிதமும், ட்விட்டர் 13 சதவிகிதமும், லின்க்டு இன் 5 சதவிகிதமும், ஆர்குட் குறைந்ததாக 4 சதவிகிதமும், இபிபோ 4 சதிவிகிதமும் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






























