ஃபேஸ்புக் பழக்கம் குழந்தைகளை பாதிக்கும் : ஆய்வில் தகவல்.!!

By Meganathan
|

ஃபேஸ்புக் பயன்பாடு நம் வாழ்வில் அத்தியாவசிமாகிவிட்டது என்றே கூறலாம். சிலர் ஃபேஸ்புக் பயன்பாட்டில் நாட்டம் இல்லாதவராயினும், பணிச் சூழல் மற்றும் வியாபாரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக ஃபேஸ்புக் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது.

உலகளவில் இண்டர்நெட் பயன்பாடு தான் இதற்கு முக்கிய காரணம் என்றாலும், ஃபேஸ்புக் பயன்பாடு மாணவர்களை அதிகம் பாதிக்கின்றது என்கின்றது சமீபத்திய ஆய்வு முடிவு.

பயன்பாடு

பயன்பாடு

சராசரியாக ஒருவரின் மூளை ஒவ்வொரு 31 நொடிகளுக்கும் ஃபேஸ்புக் செக் செய்யத் தூண்டுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

பணி

பணி

ஒருவர் இதர பணிகளில் இருக்கும் போது ஃபேஸ்புக் பார்க்க நேரிட்டால், ஏற்கனவே செய்த பணியினை மீண்டும் துவங்க குறைந்தபட்சம் 15 நிமிடமாவது எடுத்துக் கொள்கின்றனர் என முந்தைய ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டது.

மல்டி டாஸ்கிங்

மல்டி டாஸ்கிங்

நாளுக்கு நாள் மல்டி டாஸ்கிங் செய்வது அதிகரித்துக் கொண்டே இருப்பதால், இப்பிரச்சனைக்குத் தீர்வு காணும் நோக்கில் இது குறித்து ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

டிராக்கர்

டிராக்கர்

மல்டி டாஸ்கிங் முறைகளை அறிந்து கொள்ள பல்கலைக்கழக கணினிகளில் பிரத்தியேக டிராக்கர்களை இன்ஸ்டால் செய்து மாணவர்களின் பயன்பாடுகளை ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர்.

கவனம்

கவனம்

முன்னதாக மாணவர்களால் தொடர்ச்சியாக ஐந்து நொடிகளுக்கு ஒரே விடயத்தில் கவனம் செலுத்த முடிந்தது. மல்டி டாஸ்கிங் டிராக்கர்களின் ஆய்வு முடிவுகளில் மாணவர்களால் ஒரு பணியில் தொடர்ச்சியாக 31 நொடிகள் மட்டுமே கவனம் செலுத்த முடிந்தது.

திரைப்படம்

திரைப்படம்

டாஸ்க் டிராக்கப் ஆய்வில் கண்டறியப்பட்ட ஆய்வு முடிவுகளை விவரிக்கும் வரைபடம் இங்குப் பார்க்கலாம். இதில் சிவப்பு நிற குறியீடுகள் சமூக வலைத்தள பயன்பாட்டைக் குறிக்கும், நீள நிற குறியீடுகள் பள்ளி சார்ந்த அலுவல்களைக் குறிக்கும்.

நல்லது

நல்லது

பள்ளி சார்ந்த அலுவல்களை முடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தும், மாணவர்கள் ஃபேஸ்புக் ஆர்வம் அவர்களை ஃபேஸ்புக் பயன்படுத்த தூண்டுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Best Mobiles in India

English summary
Research Reveals Human Brain Wants To Check Facebook Every 31 Secs Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X