Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English हिन्दी ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

கலாமுக்காக மீண்டும் ஃபேஸ்புக்கில் இணைந்த மம்தா!

Updated: Monday, March 25, 2013, 17:22 [IST]

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீண்டும் ஃபேஸ்புக்கில் இணைந்துள்ளார்.  அப்துல் கலாமுக்கு ஆதரவு திரட்டுவதற்காகவே அவர் மீண்டும் ஃபேஸ்புக்கில் தற்போது இணைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் பல பிரமுகர்களாலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. முக்கியமான தங்களது கருத்துக்களை இதில் உடனுக்குடன் வெளியிட்டு கொண்டு வருகிறார்கள்.

புதிதாக ஃபேஸ்புக் அக்கவுன்ட் ஒன்றை ஆரம்பித்துள்ளார் மேற்கு வங்க முதல்மந்திரி மம்தா பானர்ஜி. அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், அப்துல் கலாம் ஜனாதிபதியாக வரவேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

mamata banerjee launches facebook page

இதுவே பல கோடி இந்திய மக்களின் விருப்பம் என்றும் தெரிவித்துள்ளார்

ஃபேஸ்புக் பக்கத்தினை உருவாக்கியுள்ள மம்தா பேனர்ஜி முதலில் தனது ஃபேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளும் செய்தி இது தான்.

சமீபத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரான மம்தா பேனர்ஜி பற்றிய கேலி சித்திரம் வெளியானது. இது பெரும் சர்ச்சையை ஏற்பத்தியது. அதன் பிறகு இந்த கேலி சித்திரங்களை ஃபேஸ்புக்கில் இருந்து நீக்க வேண்டும் என்று உயர் அதிகாரிகள் மூலம் ஃபேஸ்புக்கிற்கு நேரடியாக கடிதம் எழுதப்பட்டது.

அதன் பிறகு மம்தா பேனர்ஜியின் கேலி சித்திரங்களை ஃபேஸ்புக்கில் இருந்து நீக்குவதாகவும், ஃபேஸ்புக்கிடம் இருந்து பதில்கள்வெளியானது.  இதன் பிறகு ஃபேஸ்புக்கில் புதிதாக அக்கவுன்ட் ஆரம்பித்து இருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவி மமதா பேனர்ஜி அப்துல் கலாம் ஜனாதிபதி பதிவிக்கு வர வேண்டும் என்பது பல லட்சம் மக்களின்

விருப்பம் என்று தனது முதல் கருத்தை ஃபேஸ்புக்கில் வெளியிட்டு இருக்கிறார்.

சராசரி மக்களை பேச வைப்பது மட்டும் அல்லாமல், பிரபலங்களையும் மற்றும் தலைவர்களின் கருத்துக்களையும் மக்களுக்கு கூறுவதில் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் முதல் இடத்தில் வருகிறது.

மம்தாவின் பேஸ்புக் பக்கம்

Story first published:  Saturday, June 16, 2012, 13:32 [IST]
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil

Also Read

Opinion Poll