கண்மூடித்தனமாக 'லைக்' செய்ய வேண்டாம், பின்விளைவு உறுதி..!

Written By:

எந்நேரமும்... எவ்வளவு லைக்ஸ் வந்துள்ளது, இன்னும் எவ்வளவு லைக்ஸ் வரும், யாரெல்லாம் லைக்ஸ் போட்டு இருக்கிறார்கள் என்பதை கண்காணித்துக் கொண்டே இருப்பவர்ளை 'மரியாதையாக' லைக்காஃபோபியா (Likeaphobia)நோய் கொண்டவர்கள் என்றும் கூறலாம், கொஞ்சம் 'கேவலாமாக' - பேஸ்புக் பைத்தியம் என்றும் கூறலாம்.

கண்மூடித்தனமாக 'லைக்' செய்ய வேண்டாம், பின்விளைவு உறுதி..!

அந்த அளவிற்கு பேஸ்புக்கில் மூழ்கி திளைக்கும் நாம் அனைவரும், தெரிந்தோ தெரியாமலோ ஒரு தவறை செய்து கொண்டே இருக்கிறோம். அது என்ன தவறு, அதனால் வரும் விளைவுகள் என்ன என்பதை பற்றிய தொகுப்பே இது..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

லைக் :

பேஸ்புக் போஸ்ட்கள் மற்றும் பக்கங்கள் ஆகியவைகளை லைக் செய்வதென்பது நிர்பந்தமான ஒரு காரியமாகி விட்டது என்றே கூறலாம். லைக் என்பது மிகவும் எளிமையான, வேகமான காரியம் என்று பலர் நினைகிறார்கள் அவ்வளவு ஏன் லைக்குகளை பதிவு செய்வதை ஒரு கடமையாக செய்பவர்கள் கூட இருகிறார்கள்.

ஸ்கேம்மர் :

பேஸ்புக்கில் நாம் பதிவு செய்யும் லைக்குகள், நம்மையும் நம் விருப்பங்களையும் காட்டிக் கொடுத்து, நாம் ஸ்கேம்மர்களிடம் (Scammers) மாட்டிக்கொள்ளும்படியாக செய்யும் வாய்ப்புகள் மிகவும் அதிகம் என்பதை பலரும் அறிந்திருக்கவில்லை.

வைரஸ் :

ஸ்கேம்மர் - என்பதற்கு மோசமான வணிக திட்டங்களை வகுப்பவர்கள் என்று பொருள், அதாவது இவர்கள் மக்களின் தகவல்களை திருடுவது, வைரஸ்களை பரப்புவது மற்றும் தவறான அல்லது போலியான தகவல்களை பரப்பி விடுவது போன்ற வேலைகளை செய்பவர்கள் ஆவார்கள்.

வெற்றி :

பேஸ்புக்கில் இருக்கும் ஸக்கேமர்கள் முதலில் சற்றும் தீங்கிழைக்காத போஸ்ட்களை பதிவு செய்வர், அது மிகவும் கவனத்தை ஈர்க்கக் கூடிய மற்றும் அதிகம் ஷேர் ஆகக்கூடியதாக இருக்கும் வகையில் பார்த்துக் கொள்வர். அந்த போஸ்ட் பெரிய அளவிலான வெற்றியை பெரும் வரை காத்திருப்பார்.

தீங்கிழைக்கும் உள்ளடக்கம் :

மிகவும் எளிமையானதாக மற்றும் வசீகரமானதாக தோன்றும் களின் போஸ்ட்கள் மிகவும் பிரபலம் அடைந்த பின்பு அதனுள் தீங்கிழைக்கும் உள்ளடக்கம் (malicious content)திணிக்கப்படும்.

பேவால் :

அவ்வகையான உள்ளடக்கங்கள் மூலம் உங்களைப் பற்றிய சுய விவரங்களை திருடிக்கொள்ள முடியும். உதரணமாக, குறிப்பிட்ட பொருள்களை வாங்க சொல்லி விளம்பரம் செய்வார்கள் அல்லது பணம் செலுத்தும் வாகியிலான 'பேவால்' (Paywall) போன்றவைகளை உருவாக்கி உங்கள் கிரெடிட் கார்ட் தகவல்களை திருடிக்கொள்ளவார்கள்.

பேஸ்புக் லைக் பேஜ் :

இதுபோன்ற திருட்டு வேலைகள் போஸ்ட்களை பதிவு செய்து மட்டும் நடத்தப்படுவதில்லை, பேஸ்புக் லைக் பேஜ்கள் மூலமும் நடத்தப்படுகிறது என்பதும் குறிபிடத்தக்கது.

நியூஸ் பீட் :

பூனைக்குட்டி, நாய்க்குட்டிகள், அழகான கருத்துக்கள் என நிரம்பி வழியும் லைக் பேஜ்களை நீங்கள் லைக் செய்தவுடன் ஸ்கேம்மர்கள் தீங்கு விளைவிக்கும் போஸ்ட்களை பதிவு செய்து, அது உங்கள் நியூஸ் பீட்டில் வருபடியாக செய்து விடுவார்கள். கண்மூடித்தனமாக லைக்குளை செய்ய வேண்டாம். உஷராக இருங்கள்..!

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Here is why you should not like that Facebook post. Read more about this is in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்