ஃபேஸ்புக் சந்தித்த தோல்விகள்.!!

By Meganathan
|

ஃபேஸ்புக் என்றால் மிகப்பெரிய சமூக வலைதள நிறுவனம், ஒவ்வொரு மாதமும் கோடி கோடியாய் சம்பாதிக்கும் அதன் நிறுவனர் மார்க் சூக்கர்பர்க் என நினைப்பவர்கள் மனதில் இந்த தொகுப்பு மாற்று கருத்தை விதைக்கும்.


இண்டர்நெட் உலகில் ஃபேஸ்புக் நிறுவனம் பல்வேறு சாதனைகளை தனது சேவை மூலம் புரிந்து வரும் அதே வேலையில் அந்நிறுவனம் பல்வேறு தோல்விகளையும் சந்தித்து இருப்பது உங்களுக்கு தெரியுமா.??

 ஃபேஸ்புக் சந்தித்த தோல்விகள்.!!

ஃபேஸ்புக் இல்லாமல் அந்நிறுவனம் பல்வேறு நிறுவனங்களை கைப்பற்றி வியாபாரம் செய்ய நினைத்து வெற்றி பெற்றவை மட்டும் இன்று உலக பிரபலமாக பார்க்கப்படுகின்றது. ஆனால் அந்நிறுவனம் சந்தித்த தோல்விகளும் ஏராளாமே. இங்கு ஃபேஸ்புக் நிறுவனம் சந்தித்த தோல்விகளை தெரிந்து கொள்ளுங்கள்..

பார்ஸி

பார்ஸி

2013 ஆம் ஆண்டு ஃபேஸ்புக் மார்ஸி மொபைல் டெவலப்மென்ட் தளத்தை கைப்பற்றியது. பின் இதைவிட அதிக முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களில் கவனம் செலுத்த இத்திட்டத்தை கைவிட்டது.

ஃபேஸ்புக் டீல்ஸ்

ஃபேஸ்புக் டீல்ஸ்

2011 ஆம் ஆண்டு ஃபேஸ்புக் டீல்ஸ் துவங்கப்பட்டு பின் நான்கே மாதங்களில் மூடப்பட்டது.

ஃபேஸ்புக் கிஃப்ட்ஸ்

ஃபேஸ்புக் கிஃப்ட்ஸ்

ஆன்லைனில் பரிசுகளை வாங்கி அதனினை ஃபேஸ்புக் மூலம் அனுப்ப ஃபேஸ்புக் கிஃப்ட்ஸ் சேவை வழி செய்தது. இந்த சேவை செப்டம்பர் 2012 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு ஒரே ஆண்டில் நிறுத்தப்பட்டது.

ஃபேஸ்புக் கிரெடிட்ஸ்

ஃபேஸ்புக் கிரெடிட்ஸ்

ஃபேஸ்புக் கேம்களில் கைப்பற்றிய கிரெடிட்களை பயன்படுத்தி பொருட்களை வாங்கும் திட்டம் தான் ஃபேஸ்புக் கிரெடிட்ஸ், அதிக குழப்பம் வாய்ந்ததாக இருந்ததால் இந்த திட்டத்தை ஃபேஸ்புக் நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.

ஆட்டோஃபில் வித் ஃபேஸ்புக்

ஆட்டோஃபில் வித் ஃபேஸ்புக்

வாடிக்கையாளர்களின் கிரெடிட் கார்டு தகவல்களை பதிவு செய்து கொள்ள வழி செய்யும் திட்டம் தான் ஆட்டோஃபில் வித் ஃபேஸ்புக். 2013 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த திட்டம் எதிர்பார்த்த அளவு பிரபலமாகவில்லை.

ஃபேஸ்புக் இன்பாக்ஸ்

ஃபேஸ்புக் இன்பாக்ஸ்

ஃபேஸ்புக் நிறுவனத்தின் மின்னஞ்சல் சேவை தான் இந்த ஃபேஸ்புக் இன்பாக்ஸ், மின்ஞ்சல் முகவரி @facebook.com என்ற பெயர் கொண்டிருக்கும். ஆனால் இந்த சேவையை யாரும் பயன்படுத்தவில்லை.

ஃபேஸ்புக் FBML

ஃபேஸ்புக் FBML

தனது இணையதளத்தில் HTML தவிர்த்து FBML பயன்படுத்த ஃபேஸ்புக் திட்டமிட்டது, ஆனால் உடனடியாக இந்த திட்டம் கைவிடப்பட்டது.

ஃபேஸ்புக் பிளேசஸ்

ஃபேஸ்புக் பிளேசஸ்

ஃபோர் ஸ்கோயர் போன்ற ஒரு சேவை தான் ஃபேஸ்புக் பிளேசஸ், ஆனால் அதிகப்படியான குற்றச்சாட்டு மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக 2011 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த திட்டம் கைவிடப்பட்டது.

 ஃபேஸ்புக் பீகான்

ஃபேஸ்புக் பீகான்

ஃபேஸ்புக் விளம்பர பிரிவை சேர்ந்தது தான் ஃபேஸ்புக் பீகான். இதன் மூலம் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் சேமிக்கப்பட்டு அவர்களுக்கு ஏற்ற விளம்பரங்களை வழங்க பயன்படுத்தப்பட்டது. ஆனால் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை பயன்படுத்தியதால் ஃபேஸ்புக் பீகான் 2009 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது.

Best Mobiles in India

English summary
Facebook Products that Failed big time Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X