நம்மள 'யூஸ்' பண்ணி, நமக்கே துரோகம் பண்ணும் 'மூஞ்சு'புக்கு..!

Written By:

பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் நாம் நமது தோழமைகளுடன் எப்படி ஒன்றாக கூடி, உறவாடிக்கிடப்போமோ அதை அப்படியே 'நீட்டிக்க செய்த' ஒரு சமூக வலைத்தளம் தான் - பேஸ்புக். நமது எண்ணங்கள், கற்பனைகள், வலிகள், தேடல்கள் என கிட்டதட்ட அனைத்தையுமே (பலமான பாதுகாப்பு வசதிகளுடன்) முகநூல் பூர்த்தி செய்தது, பகிர வழிவகுத்தது, துணை செய்தது என்பது தான் நிதர்சனம்..!

வளர்ச்சி நிலையில் இருக்கும் எந்தவொரு நிறுவனமுமே தங்களின் வளர்ச்சிக்கு உதவும் வாடிக்கையாளர்களை முதலில் நன்றாக 'கவனித்துக்கொள்ளும்' தான், பின்பு வியாபாரம் என்ற நிலை வந்துவிட வாடிக்கையாளர்களை எப்படியெல்லாம் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதில் தான் குறியாக இருக்கும். அதற்கு பேஸ்புக்கும் விதிவிலக்கல்ல..!

அப்படியாக, இந்த 2016-ஆம் ஆண்டிலேயே, இன்னும் சொல்லப்போனால் இப்போதிலிருந்தே நீங்கள் உங்கள் பேஸ்புக் பயன்பாட்டை ஏன் குறைத்துக்கொள்ள வேண்டும் என்பதைப்பற்றிய 7 காரணங்களை கொண்ட தொகுப்பே இது..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

காரணம் #7

வீணாகும் நேரம் : முகநூலில் ஒரு நாளைக்கு 17 நிமிடங்கள் நீங்கள் செலவு செய்தால் கூட, 10 வருடங்களுக்கு பின்பு சுமார் 40 நாட்களை லைக் செய்யவும், கமெண்ட் செய்யவும், போஸ்ட் செய்யவும் செலவு செய்து இருக்கிறீர்கள் என்று அர்த்தம்..!

காரணம் #6

வியாபாரம் : 2012-ஆம் ஆண்டு பேஸ்புக் நிறுவனம் சுமார் 689000 அக்கவுண்ட்களில் அனுமதியின்றி நுழைந்து, சேவைகளை மேம்படுத்துவது மற்றும் தங்களின் உள்ளடக்கம் ஆனது முடிந்தவரை மக்களை தொடர்பு கொள்ளும் வகையில் ஆய்வொன்றை செய்தது. இப்படியாக பேஸ்புக் உங்களுக்கே தெரியாமல் உன்களை வைத்து வியாபாரம் செய்து கொண்டிருக்கிறது..!

காரணம் #5

விளம்பரம் : ஒரு பொருளை நீங்கள் ஒருமுறை வாங்கிவிட்டால் கூட 6 மாதங்கள் கழித்து மீண்டும் அந்த பொருள் சார்ந்த விளம்பரத்தை உங்கள் முன் நிறுத்தும் பேஸ்புக், இப்படியாக விளம்பரகளின் இலக்காக நீங்கள் தேர்வு செய்யப்படுவீர்கள்..!

காரணம் #4

கேடு : பேஸ்புக், உறவுகளை இணைப்பது மட்டுமின்றி உறவுகளை அழிக்கவும் செய்கிறது. பேஸ்புக் ஆனது மிகவும் பாதிப்படைய செய்யும் மற்றும் தீங்கு விளைவிக்கும் ஒரு வலைத்தளம் என்பதற்கு ஏகப்பட்ட ஆய்வுகள் சாட்சியாகும்..!

காரணம் #3

போலி மனிதர்கள் : ஒரு சாராசரி வயதுடைய பேஸ்புக் பயனாளிக்கு சுமார் 338 பேஸ்புக் நண்பர்கள் இருக்கிறார்கள் அதில் 10 சதவிகிதம் பேர் யார் என்றே தெரியாத நபர்கள் ஆவார்கள் என்கிறது ஒரு ஆய்வு..!

காரணம் #2

பாதுகாப்பின்மை : சமூக வலைத்தளத்தில் தனக்கொன்றும் பாதுகாப்பு தேவையில்லை என்பதற்காக பிறரின் பாதுகாப்புக்கு சிக்கல் ஏற்படுத்தும் பேஸ்புக் பயனாளிகள் மிக அதிகம். முகநூலை நீங்கள் தெளிவாக பயன்படுத்தினால் மட்டும் போதாது அனைவரும் அதை செய்ய வேண்டும். அனால் அது சாத்தியமே இல்லை.

காரணம் #1

பெரும்பாலான பேஸ்புக் பயனாளிகள் தாங்கள் மிகவும் சிறந்த முறையில் முகநூலை பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்று நினைத்துக் கொண்டிருகிரரார்கள். ஆனால் உண்மை எதுவென்றால், நீங்கள் செய்யும் போஸ்ட் ஆனது சிறிது நாட்கள் களைத்து உங்களுக்கே சிறப்பானதாக தெரியாது என்பது தான் நிதர்சனம். இன்டர்நெட்டை பொறுத்த மட்டில்.. எல்லாமுமே கொஞ்சம் நேரம் தான்..!

மேலும் படிக்க :

உங்கள் 'ரெஸ்யூம்' நிராகரிக்கப்பட 10 வாய்ப்புகள் இருக்கின்றன..!!


'அன்ஃப்ரெண்ட்' செய்ய வேண்டிய 7 வகையான மக்கள்..!!

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
7 Reasons You Should Quit Facebook. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்