டிரோன்களை சாதாரணமாக நினைக்காதீங்க.!!

Written By:

டிரோன் என்றால் நம்மவர்கள் பெரும்பாலும் நினைப்பது அது ஒரு விளையாட்டு அல்லது பொழுதுபோக்கு கருவியாகவே நினைக்கின்றனர். துவக்கத்தில் இருந்ததை விட இன்று டிரோன்களின் பயன்பாடு அனைத்துத் துறைகளிலும் மெல்ல அதிகரித்துக் கொண்டே தான் இருக்கின்றது.

சில காலம் முன் துவங்கி இன்று வரை வித்தியாசமான அல்லது கடினமான காணொளிகளை பதிவு செய்யப் பயன்படுத்தப்பட்ட டிரோன்கள் இன்று நம் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்டது என்று சொல்லும் அளவு அதிகமாகவே மாறிவிட்டது.

இதனை நிரூபிக்கும் வகையில் டிரோன்கள் எவ்வாறு எல்லாம் மாறி இருக்கின்றது என்பதை ஸ்லைடர்களில் பாருங்கள்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

01

இன்று பெரும்பாலானோரும் இணையத்தில் பொருட்களை வாங்கவே அதிகம் விரும்புகின்றனர். ஆப் மூலம் முன்பதிவு செய்யப்படும் பொருட்களை விநியோகம் செய்ய டோமினோஸ் மற்றும் அமேசான் போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே டிரோன்களை பயன்படுத்த துவங்கி விட்டன. நமது ஊர்களில் இதே நிலை விரைவில் எதிர்பார்க்கலாம்.

02

நவீன கால செய்து சேகரிப்பு முறை அதிகளவு மாற்றங்களைக் கண்டு வருகின்றது. பாதுகாப்பற்ற பகுதிகளில் டிரோன் மூலம் செய்தி சேகரிக்கும் வழி முறைகள் உலகின் பல்வேறு இதழியல் பள்ளிகள் மூலம் மாணவர்கள் பயிற்சியளிக்கப்படுகின்றது.

03

மனித இனம் உயிர்வாழத் தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களில் எண்ணெய் முக்கிய பங்கு வகிக்கின்றது. பொதுவாக எண்ணெய் கிணறுகள் மிகவும் ஆபத்தான பகுதிகள் என்பதால் இவற்றை ஆய்வு செய்ய டிரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன.

04

ஆபத்துக் காலங்களில் மருந்து வகைகளை வேகமாக வழங்க டிரோன்கள் பயன்பாடு மிகச்சிறப்பான ஒன்றாக இருக்கும். ஏற்கனவே மேட்டர்நெட் என்ற நிறுவனம் இதற்கான நிறுவனம் ஒன்றை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றது.

05

ஆஸ்த்ரியாவை சேர்ந்த மாணவர் ஒருவர் இதய நோயாளிகளின் உயிர் காக்கும் நோக்கில் டீஃபேப்ரிலேட்டர் கருவிகளை டிரோன் மூலம் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்குக் கொண்டு சேர்க்க டிரோன்களை பயன்படுத்த முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
Ways that drones are changing the world Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்