காலவெளியில் உள்ள சுரங்கப்பாதை : நம்மை எங்கு கொண்டு செல்லும்..?!

Written By:

விண்வெளியும் அதை கொண்டுள்ள அண்டமும் எதைக்காட்டிலும் மிகவும் விசித்திரமானது, அதனால் தான் விண்வெளி சார்ந்த கேள்விகளும், கோட்பாடுகளும், சந்தேகங்களும் எப்போதும் எழுந்து கொண்டே இருக்கும்.

அப்படியாக, சமீபத்தில் காலவெளியில் உள்ள சுரங்கப்பாதைகள் (Tunnels in spacetime) சார்ந்த ஒரு கோட்பாடு உருவாக்கம் பெற்றுள்ளது. மறுபக்கம் இந்த அண்ட நுழைவாயில்கள் உறுதியற்ற ஒன்றாகவே கருதப்படுகின்றன, இருப்பினும் அவைகள் எங்கு முடியும் என்ற கேள்வியும் அதற்கான விளக்கமும் மிக சுவாரசியம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

#1

காலவெளி சுரங்கப்பாதைகள் சாத்தியம் என்றால் விஞ்ஞானிகளின் கருத்துப்படி ஒரு துகள் ஆனது பரவெளியில் நுழையும் போது ஆபத்தான ஏற்ற இறக்கங்கள் உண்டாகி அது சிதைக்கப்ட்டு உருவமே மாற்றப்படும் என்கிறார்கள்.

#2

சமீபத்தில் இயற்பியல் குழு ஒன்றின் மூலம் முன்மொழியப்பட்ட ஒரு புதிய கோட்பாடானது ஒரு நபர் அல்லது விண்கலமானது கருப்பு ஓட்டையின் மையத்தில் உள்ள ஒரு பரவெளியின் அனுமான இணைப்பின் வழியாக குறைந்தபட்சம் கோட்பாட்டளவிலாவது செல்ல முடியும் என்கிறது.

#3

இதன் மூலம் பரவெளிக்குள் நுழைபவர்கள் அதன் மறுபுறம் உள்ள வேறொரு பிரபஞ்சத்தை அடைவார்கள் என்கிறது இந்த கோட்பாடு.

#4

ஆராய்ச்சியாளர்கள் கூற்றுப்படி, பரவெளியானது காலவெளியில் குறுக்குவழிகளாக செயல்படும் ஒரு தத்துவார்த்த சுரங்கங்கள் என்று நம்பப்படுகிறது.

#5

அப்படியாக பரவெளி அனுமானங்கள் உண்மையில் இருக்கிறது என்றால், அண்ட குறுக்குவழிகளாய் அவைகள் செயல்பட்டால் மிகச்சிறிய நேரத்தில் பிரபஞ்சத்தின் தொலைதூர மூலைகளையும் அடைய அவைகள் உதவும் என்பது உறுதி.

#6

1915-இல் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனால் முன்மொழியப்பட்ட பொது சார்பியல் கோட்பாடின்படி, கருந்துளைக்குள் நுழையும் உடல் ஆனது ஒரு திசையில் நசுக்கப்படும் மற்றும் மறுதிசையில் அது நீடிக்கப்படும்.

#7

பரவெளியின் அனுமான இணைப்பின் ஆரம் வரையறுக்கப்பட்ட ஒன்று என நம்பப்படுவதால், பரவெளியின் அனுமான இணைப்பின் அளவு எவ்வளவு உள்ளதோ அந்த அளவிற்கு உட்புகும் உடலில் நசுக்கப்படும் என்று நம்பப்படுகிறது.

#8

எப்படியான அனுமானங்கள் வகுக்கப்பெற்றாலும், பிளாக் ஹோல்கள் எனப்படும் கருந்துளைகளை நாம் முதலில் கண்டறிந்தால் தான் அவைகளுக்குள்ளான பரவெளி, அது சார்த்த பயணம், மறுபுறம் உள்ள பிரபஞ்சம் ஆகியவைகளைப் பற்றி யோசிக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

#10

மேலும் இதுபோன்ற அறிவியல் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Tunnels in spacetime could take us to another universe claims new theory. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்