அடையாளம் தெரியாத பறக்கும் தட்டுகளின் கட்டுப்பாட்டில் பெர்முடா முக்கோணம்??

Written By:

பல காலமாக தொடர்ந்து வரும் சர்ச்சைகளில் முக்கியமானதாகவும், விசித்திரம் நிறைந்ததாகவும் இருப்பது பெர்முடா முக்கோணம் குறித்த சர்ச்சை தான். ஃபுளோரிடாவின் மியாமி கடல் பகுதியில் துவங்கி போர்டோ ரிகோ மற்றும் கரீபியன் கடலில் பெர்முடா பகுதிகளை இணைக்கும் இந்த முக்கோணம் அமைந்துள்ளது.

அதிநவீன தொழில்நுட்பங்களாலேயே கண்டறிய முடியாத மர்மமாக இருக்கும் பெர்முடா முக்கோணம் சார்ந்த புதிய தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

இணையம்

ஏலியன் ஆதாரங்கள் சார்ந்த தகவல்களை வழங்கி வரும் ப்ரூஃப்ஆஃப்ஏலியன்.காம் (proofofalien.com) இணையதளத்தில் வெளியாகியிருக்கும் தகவல்கள் பெர்முடா முக்கோண பகுதிகளில் ஏலியன் நடமாட்டம் மற்றும் யுஎஃப்ஒ எனப்படும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் வந்து செல்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆதாரம்

அதன் படி ப்ரூஃப் ஆஃப் ஏலியன் தளத்தில் வெளியாகியிருக்கும் தகவல்கள் பெர்முடா முக்கோணம் சார்ந்த சர்ச்சைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் ஆதாரங்களாக இருப்பதாக யுஎஃப்ஒ ஆர்வலர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கொலம்பஸ்

அமெரிக்காவைக் கண்டறிந்ததாக கூறப்படும் கொலம்பஸ் தனது தினசரி கையேட்டில் பெர்முடா முக்கோணம் குறித்த சில வரிகளை எழுதியிருக்கின்றார். அதில் மிகப்பெரிய நெருப்பு பந்து வானத்தில் இருந்து கடலில் விழுந்தது.

யுஎஃப்ஒ

கடலில் விழுந்த எரிபந்து யுஎஃப்ஒ தான் என்றும் இதனாலேயே கொலம்பஸ் பயன்படுத்திய திசைக்காட்டிகள் தவறாக இயங்கியது. திசைக்காட்டிகள் தவறாக இயங்கியதற்கான காரணம் கொலம்பஸ் கடைசி வரை அறிந்து கொள்ளவில்லை.

புரூஸ் கெர்னான்

1970 ஆம் ஆண்டு பெர்முடா முக்கோண பாதையில் பறந்து கொண்டிருந்த அமெரிக்க விமானி புரூஸ் கெர்னான் மர்மமான மேகங்களைக் கண்டதாகவும் அவை திடீரென வட்ட வடிவில் மாறி மேகங்களில் சுரங்கம் ஒன்றை ஏற்படுத்தியது. மேலும் அதிக பிரகாசமான மின்விளக்குகள் நிறைந்த மின்னணு மூடுபனி ஏற்பட்டு விமான திசைக்காட்டிகள் தவறாக இயங்கியது.

வேகம்

பஹாமஸ்'இல் இருந்து மியாமி வரை செல்லும் விமானம் வழக்கமாக 60 நிமிடங்களுக்கும் அதிகமாக எடுத்துக் கொள்ளும், அன்று 35 நிமிடங்களில் சென்றடைந்தது. இந்தச் சம்பவத்தை தொடர்ந்து இப்பகுதியானது வேற்றுக்கிரக வாசிகள் பூமிக்கு வந்து செல்லும் பாதையாக இருக்கலாம் என யுஎஃப்ஒ ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஃபிளைட் 19

டோர்படோ போர்கப்பலில் இருந்து ஃபிளைட் 19 விமானம் தனது வழக்கமான பயிற்சியின் போது பெர்முடா முக்கோண பகுதியில் திடீரென மாயமானது. 'கடல் நீர் உட்பட எல்லாமே மர்மமாக இருக்கின்றது, நாங்கள் கடலினுள் செல்கின்றோம் இங்கு எதுவும் சரியாக இல்லை' என விமானத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற கடைசி ரேடியோ தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆய்வு

பின் இது குறித்து கடற்படை நடத்திய ஆய்வில் ஃபிளோரிடா கடற்கரை வானத்தில் பச்சை நிற விளக்குகள் பிரகாசமான தெரிந்தது, அவை எந்த ரேடாரிலும் பதிவாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

யுஎஃப்ஒ

எல்லை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலில் இருந்து பார்த்த போது பெர்முடா முக்கோணத்தின் மேல் பிரகாசமான ஆரஞ்சு நிற விளக்குகள் எரிந்து பின் சில நிமிடங்களில் அது மாயமாகி விட்டது.

ரேடார்

இந்தச் சம்பவமும் எவ்வித ரேடாரிலும் பதிவாகவில்லை. இம்முறை பதிவு செய்யப்பட்ட விளக்குகள் யுஎஃப்ஒ ஆர்வலர்கள் மத்தியில் யுஎஃப்ஒ வந்து சென்றதற்கு ஆதாரமாகவே பார்க்கப்படுகின்றது.

கேமரா

2009 ஆம் ஆண்டு மார்ச் 12 ஆம் தேதி பெர்முடா முக்கோணத்தின் அருகே மர்மமான விளக்குகள் காணப்பட்டது. ஒரு மணி நேரத்திற்குக் காணப்பட்ட இந்த விளக்குகள் பின் மாயமானது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

காரணம்

கடற்படை கேமராக்களிலும் பதிவான மர்மமான விளக்குகள் கடலில் ஏற்படும் சுழல் போல் காட்சியளித்தது. வானத்தில் காணப்பட்ட பறக்கும் தட்டின் மூலம் வானத்தில் சுழல் ஏற்பட்டிருக்கும் என யுஎஃப்ஒ ஆர்வலர்கள் மத்தியில் நம்பப்படுகின்றது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Top Evidences To Prove The Bermuda Triangle UFO Theory Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்