சீனாவில் 'காலப்பயண' குகைப்பாதையா.??

Written By:

காலப்பயணம் சாத்தியமே இல்லை என்றும், காலப்பயணம் சாத்தியமான ஒன்று தான் இதனை நிரூபிக்க பல்வேறு வரலாற்றுச் சம்பவங்கள் இருக்கின்றன என்றும் பல்வேறு தகவல்கள் நம்மை இன்றும் குழப்பத்தில் ஆழ்த்தவே செய்கின்றன. உண்மையில் காலப்பயணம் சாத்தியம் தானா என்ற கேள்வியை தவிர்த்து விடலாம்.

சீனாவில் காலப்பயண குகைப்பாதை இருப்பதாக இணையத்தில் பல்வேறு வீடியோ மற்றும் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. உண்மையில் இது காலப்பயண குகைப்பாதை தானா, என்பது குறித்த விரிவான தகவல்கள் ஸ்லைடர்களில்...

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

01

சீனாவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள குயிசு மாகாணத்தில் அமைந்துள்ளது இந்தச் சர்ச்சைக்குரிய குகைப்பாதை.

02

சுமார் 400 மீட்டர் நீளம் கொண்ட இந்த குகைப்பாதையை கடக்கும் போது கைப்பேசியில் நேரம் ஒரு மணி நேரம் பின்னோக்கி செல்வதாகக் கூறப்படுகின்றது.

03

இணையத்தில் வெளியான தொகுப்புகளில் நேரம் பின்னோக்கி செல்வதைக் கவனித்த செய்தியாளர் குறிப்பிட்ட குகைப்பாதையில் சில முறை கடந்து சென்று இதனை உறுதி செய்துள்ளார்.

04

அப்பகுதி மக்கள் இந்த குகைப்பாதையை டைம் டன்னெல் என அழைக்கின்றனர். உண்மையில் இந்த குகைப்பாதையில் என்ன தான் ஏற்படுகின்றது.

05

இந்தக் குகையை கடக்க ஐந்து நிமிடங்கள் ஆகும். ஒரு வேலை நீங்கள் இந்த குகைப்பாதையை 9.00 மணிக்கு நுழைந்து 9.05க்கு வெளியேறினால், உங்களது கைப்பேசியின் நேரம் 8.05 ஆக மாறியிருக்கும்.

06

குகைப்பாதையை கடந்து சில தூரம் சென்ற பின் கைப்பேசியில் நேரம் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பி விடுகின்றது.

07

உண்மையில் இந்த குகைப்பாதையை கடக்கும் போது என்ன நடக்கின்றது என்றும் நேரம் திடீரென மாறும் காரணம் எதுவும் கண்டறியப்படவில்லை.

08

இது குறித்து இணையத்தில் வெளியான காணொளிகளில் ஒன்று.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Time Travel Tunnel Discovered in China Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்