டைம் டிராவல் : யாரும் அறிந்திராத அரிய தகவல்கள்.!!

|

டைம் டிராவல் அதாவது காலப்பயணம் இன்று வரை கனவாகவே இருக்கின்றது. உண்மையில் இது எந்தளவு சாத்தியம் அல்லது காலப்பயணம் மேற்கொள்ள முடியுமா என பல்வேறு சந்தேகங்கள் மனதில் எழுகின்றன. ஆனால் இவை எதற்கும் இன்று வரை பதில் இல்லை.

கற்பனையில் காலப்பயணம் சுவார்ஸ்யமான விடயமாக தெரிந்தாலும், இதனை வெற்றிகரமாக மேற்கொள்வது என்பது இன்றைய தொழில்நுட்ப யுகத்திலும் மிகவும் கடினமான ஒன்றாகும். இதோடு இதில் பல்வேறு சிக்கல்களும் இருக்கின்றது.

<strong>இந்தியா: விரைவில் ஒன்பிளஸ் 6டி மற்றும் ஒன்பிளஸ் டிவி அறிமுகம்.! </strong>இந்தியா: விரைவில் ஒன்பிளஸ் 6டி மற்றும் ஒன்பிளஸ் டிவி அறிமுகம்.!

காலப்பயணம் சாத்தியமா, அல்லது சாத்தியமற்றதா என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். காலப்பயணம் குறித்து யாரும் அறிந்திராத சில அரிய தகவல்களை தான் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்..!

01

01

காலப்பயணம் குறித்து கேட்ட போது உண்மையில் காலப்பயணம் மேற்கொள்வது என்பது சாத்தியமற்றது என பிரபல கோட்பாட்டு இயற்பியலாளரான ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் தெரிவித்திருந்தார்.

02

02

டைம் டிராவல் குறித்த பல்வேறு கோட்பாடுகளில் டைம் டிராவல் மூலம் ஏர்படும் பிரச்சனைகளில் இருந்து இந்த பிரபஞ்சம் தன்னை தானே காத்து கொள்ளும் என்பதை தெரிவிக்கின்றன.

03

03

காலப்பயணம் மேற்கொள்ள செய்யும் இயந்திரங்கள் குறிப்பிட்ட நேரம் குறித்த பயணிக்க ஆரம்பிக்கும் போதே அழிந்து விடும் என பிரபல இயற்பியலாளரான கிப் த்ரோன் தெரிவித்துள்ளார்.

04

04

இயற்பியில் மூலம் முற்றிலும் காலப்பயணம் இயந்திரங்கள் தயாரிப்பது சாத்தியமற்றது என்பதை உணர்ந்த ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் டைம் டிராவல் குறித்த ஆய்வுகளுக்கு தடை செய்ய சட்டம் இயற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

05

05

டைம் டிராவல் வழிமுறைக்கு தடை கோரும் வகையில் 'க்ரோனோலாஜி ப்ரோடெக்ஷன் கான்ஜெச்சர்' என்ற பெயரில் சட்டம் இயற்ற வேண்டும் என கூறி வந்த ஸ்டீபன் ஹாக்கிங் கோரிக்கை விடுத்த போதும் இன்று வரை இச்சட்டம் இயற்றப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

06

06

சட்டம் இயற்றப்படாததை தொடர்ந்து ஹாக்கிங் 'காலப்பயணம் மேற்கொள்வது சாத்தியமாகலாம், ஆனால் இது நடைமுறை இல்லை' என தெரிவித்தார்.

07

07

காலப்பயணம் மேற்கொள்ளும் போது பிரபஞ்சம் மாறாது, இதனால் காலப்பயணத்தினை உண்மையில் உணரவே முடியாது.

08

08

டைம் டிராவல் மேற்கொள்வதில் பல்வேறு முரண்பாடுகள் இருக்கின்றது, இதனால் ஹாக்கிங் டைம் டிராவல் மேற்கொள்ள முடியாது என கூறியதில் வியப்பு ஏதேும் இல்லை.

09

09

இதனை அமோதிக்கும் வகையில் தி கிராண்ட்பாதர் பாரடாக்ஸ் (தாத்தா முரண்பாடு) அமைந்துள்ளது. இதில் ஒரு வேலை காலப்பயணம் மேற்கொண்டு உங்களது தாத்தவை கொல்வீர்களானால், நீங்களும் மரணித்து விடுவீர்கள்.

10

10

தி கிராண்ட்பாதர் கோட்பாட்டின் விளக்கம் பல்வேறு முயற்சிகளை கடந்தும், தொடர்ந்து குழப்பம் நிறைந்ததாகவே இருக்கின்றது குறிப்பிடத்தக்கது.

11

11

தி கிராண்ட்பாதர் கோட்பாட்டிற்கு சிறந்த விளக்கம்தனை அமெரிக்க இயற்பியளாலரான ஹக் எவரெட் III என்பவர் மெனி-வேல்டுஸ் இன்டர்பிரடேஷன் many-worlds interpretation (MWI) என்ற கோட்பாட்டை முன்வைத்து விளக்கினார்.

12

12

இந்த கோட்பாடானது பல்வேறு பிரபஞ்சங்கள் இருப்பதால் ஒரு குறிப்பிட்ட நிகழ்வில் இருந்து ஒருவர் வெளியேறிவிட முடியும் என்பதை கோருகின்றது.

13

13

ஒரு வேலை பழைய பிரபஞ்சத்தில் இருந்து பயணித்து உங்களது தாத்தாவை கொன்றால், நீங்கள் கடந்து வந்த பிரபஞ்சமானது மாறாமல் அப்படியே இருக்கும். இதனால் நீங்கள் மீண்டும் அந்த பிரபஞ்சத்திற்கு செல்ல முடியும்.

14

14

MWI கோட்பாடானது சக்திச் சொட்டுப் பொறியியல் சார்ந்து எழுத்துறுவில் ஒரு வகையில் சாத்தியம் என்பதை பரைசாற்றினாலும் இதற்கான சந்தேககங்களும் அதிகளவு எழத்தான் செய்கின்றது.

15

15

இயற்பியளாலர்களான கிரீன்பெர்கர் மற்றும் கால் சுவோசில் கோட்பாடானது தி கிராண்ட்பாதர் பாராடக்ஸ் கோட்பாடுகளை கடந்து குவாண்டம் ஒற்றை டைம்லைன் மூலம் மெக்கானிக்கல் டைம் டிராவல்தனை அனுமதிக்கின்றது.

16

16

கிரீன்பெர்கர் மற்றும் சுவோசில் கோட்பாட்டின் படி குவாண்டம் பொருட்களை பல கூறு அலைகளாக இருக்கும் என்றும் கால நேரத்தில் இவை ஒருமித்த பாதையை பின்பற்றும் என்றும் கூறுகின்றது. காலப்பயணம் ஏற்கனவே நடைபெற்றிருக்கலாம் என்பதால் இதற்கான இயந்திரங்கள் தேவையில்லை.

17

17

இந்த அலைகள் மீண்டும் காலப்பயணம் மேற்கொள்ளும் என்றும் இந்த பயணத்தின் போது ஏற்கனவே அரங்கேறியவைகளை பாதிக்காது என 2005 ஆம் ஆண்டு கிரீன்பெர்கர் மற்றும் சுவோசில் கண்டுபிடித்தனர்.

18

18

இதனால் உங்களுக்கு நிகழ்காலம் தெரிந்தால், கடந்த காலம் சென்று உங்களது தாத்தாவை கொலை செய்ய முடியும், ஆனால் திரும்பி வரும் போது அவர் அறையை விட்டு வெளியேறிய பின் நீங்கள் வருவீர்கள் என கிரீன்பெர்கர் தெரிவித்துள்ளார்.

19

19

நாம் ஏற்கனவே காலப்பயணி ஒருவரால் பார்க்கப்பட்டுள்ளோம். 2000 ஆண்டு வாக்கில் அறிவியல் சார்ந்த இணைய விவாதங்களில் தான் ஒரு காலப்பயணி என கூறிக்கொண்டு தான் 2036 ஆம் ஆண்டில் இருந்து வருவதாக கூறினார்.

20

20

2036 ஆம் ஆண்டில் இருந்து வருவதாக கூறிய ஜான் டைட்டர் தான் ஒரு மிலிட்டரி டைம் டிராவலர் என தெரிவித்ததோடு, தடையமே இல்லாமல் அடிக்கடி மறைந்து விட்டதோடு சில கணிப்புகளை தெரிவித்து இணைய வாசிகளை மகிழ்வித்து வந்ததாக கூறப்படுகின்றது.

21

21

டைம் டிராவலின் பொருள் விளக்கமான பல்வேறு பிரபஞ்சங்கள் இருப்பது உண்மை என்றும் தான் கடந்து வந்த காலத்தின் டைம்லைன் முற்றிலும் வித்தியாசமானது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

22

22

காலப்பயணம் மேற்கொள்ள டைம் மெஷின் ஏதும் தேவையில்லை. ஆனால் காலப்பயணம் குறித்து வெளியாகும் பல்வேறு கோட்பாடுகளிலும் இயந்திரம் அதாவது டைம் மெஷின் நிச்சயம் தேவை என்பதோடு அவை எதிர்மறை அடர்த்தி போன்று வித்தியாசமான ஒன்றை தயாரிக்கும் திறன் கொண்டிருக்கும் என்பதையே கூறுகின்றது.

23

23

உண்மையில் வித்தியாசமான விடயம் இருக்கின்றது என்றால் எதிர்மறை அடர்த்தியை பிளாக் ஹோல் என்றே கூற வேண்டும்.

24

24

பிளாக் ஹோல்களானது அதிக திடமான ஈர்ப்பு துறைகளை உற்பத்தி செய்யும். இவைக ஸ்பேஸ்-டைமினை வளைக்குமளவு உறுதியாக இருக்கும்.

25

25

இயற்பியலாளரான ராய் கெர் கோட்பாடுகளின் படி டைம் டிராவல் மேற்கொள்ள பிளாக் ஹோலினுள் சென்று மறுமுனை அதாவது வைட் ஹோல் மூலம் வெளியே வர வேண்டும் என கூறுகின்றது.

26

26

பிளாக் ஹோல் ஆனது அனைத்தையும் தன்னுள் ஈர்த்து கொள்ளும், இதுவே வைட் ஹோல் ஆனது அனைத்தையும் வெளியே தள்ளும், இதற்கு எதிர்மறை அடர்த்தி பொருள் தேவைப்படும்.

27

27

குவாண்டம் துறை கோட்பாட்டாளர்கள் கணிப்பு படி விசித்திர விடயம் உள்ளது , ஆனால் சிறிய நேர டைம் டிராவல் மேற்கொள்ள அதிகளவு விசித்திர விடயம் தேவை.

28

28

புதிய ஆராய்ச்சி ஒன்றில் டைம் டிராவல் விசித்திர விடயம் இல்லாமலே சாத்தியம் என்கின்றது.

29

29

உலகில் மிகவும் சர்ச்சைக்குரிய விடயமாக இருக்கும் இந்த டைம் டிராவல் குறித்த ஆய்வுகளும், கோட்பாடுகளும் இன்று வரை தொடர்ந்து கொண்டே இருப்பது மட்டுமே உண்மை.

30

30

உண்மையில் காலப்பயணம் மேற்கொள்ள முடியுமா என்ற கேள்வி மட்டும் நிலையாய் இருக்க டைம் டிராவல் குறித்த ஆராய்ச்சிகளும் அவ்வப்போது கோட்பாடுகளும் வெளியாகி கொண்டே தான் இருக்கும்.

Best Mobiles in India

English summary
Things You Didn't Know about Time Travel Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X