எதிர்காலம் இது தான்.!!

By Meganathan
|

நம் கண் முன்னே, வரும் ஆண்டுகளில் உலகத்தில் என்னென்ன நடக்க போகின்றது என்பதை விவரிக்கும் தொகுப்பு தான் இது.

தொழில்நுட்பம் பல சவால்களை கடந்து நாளுக்கு நாள் புதிய எல்லையை கடந்து வருகின்றது. வாழ்க்கை முறையை முற்றிலும் மாற்றும் தொழில்நுட்பம் மூலம் வரும் ஆண்டுகளில் உலகம் எவ்வாறு மாறும் என்பதை ஸ்லைடர்களில் தெரிந்து கொள்ளுங்கள்.!

1

1

பயோமெட்ரிக் முறை. அடுத்த பத்து ஆண்டுகளில், 2026 ஆம் ஆண்டு வாக்கில் எதிர்பார்க்கப்படுகின்றது.

2

2

இன்று நாம் பயன்படுத்தும் பல்வேறு ஸ்மார்ட் கருவிகளுக்கான பாஸ்வேர்டுகள், அதாவது கடவுச்சொல் பயோமெட்ரிக் முறையை பின்பற்றும். இவை கைரேகை லாக், ஐரிஸ் ஸ்கேன், ஃபேஸ் மற்றும் வாய்ஸ் மூலம் அடையாளம் காணும் முறை பயன்படுத்தப்படும்.

3

3

ஏற்கனவே பயோமெட்ரிக் முறையானது பல்வேறு இடங்களில் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் 2026 ஆம் ஆண்டு வாக்கில் இது மிகவும் சகஜமாகி விடும் என கணிக்கப்படுகின்றது.

4

4

3டி ப்ரின்டிங் மூலம் உருவாகும் உடல் உறுப்புகள். அடுத்த பத்து ஆண்டுகளில், 2026 ஆம் ஆண்டு வாக்கில் எதிர்பார்க்கப்படுகின்றது.

5

5

இன்று 3டி ப்ரின்டிங் அனைவருக்கும் நன்கு அறிமுகமாகி விட்டது. தற்சமயம் விளையாட்டு மற்றும் அலங்கார பொருட்கள் அதிகளவு ப்ரின்ட் செய்யப்படும் நிலை முற்றிலுமாக மாறும்.

6

6

இன்று செயற்கை மூட்டுகள், உறுப்புகள், இதய வால்வுகள் 3டி ப்ரின்ட் மூலம் அச்சிடப்படுகின்றது, வரும் ஆண்டுகளில் முழுமையாக இயங்கும் உறுப்புகள் மனித உயிரணுக்களை பயன்படுத்தியே தயாரிக்கப்படலாம். 2025 ஆம் ஆண்டுகளில் 3டி ப்ரின்ட் செய்யப்பட்ட உடல் உறுப்புகள் துவக்க நிலையை அடைந்து விடும் என எதிர்பார்க்கலாம்.

7

7

மஸ்டார் நகரம், அடுத்த பத்து ஆண்டுகளில், 2026 ஆம் ஆண்டு வாக்கில் எதிர்பார்க்கப்படுகின்றது.

2

2

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் துபாயில் தற்சமயம் ப்ரோடோடைப் நிலையில் இருக்கும் மஸ்டர் நகரம் முற்றிலும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சக்தியை பயன்படுத்தும். இத்திட்த்திற்கு அபு தாபி அரசு நிதியுதவி வழங்க இருக்கின்றது.

3

3

அபு தாபி சர்வதேச விமான நிலையத்தின் பின்புறம் சுமார் 17 கிமீ பரப்பளவில் இந்த நகரம் அமைக்கப்பட இருக்கின்றது. இது அபு தாபியின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

10

10

தானியங்கி மகிழுந்து, 2036 அடுத்த 20 ஆண்டுகளில் எதிர்பார்க்கலாம்.

11

11

இன்று உச்சக்கட்ட சோதனைகளில் இருக்கும் தானியங்கி மகிழுந்துகள் வரும் ஆண்டுகளில் அதிகபட்ச மாறுதல்களை கடந்து வாகனங்களில் தானியங்கி முறை சகஜமாகி விடும். இன்று சில விலை உயர்ந்த மகிழுந்துகளில் ரிமோட் மூலம் இயக்கி பாதுகாப்பாக நிறுத்தி வைக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

12

12

கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளில் இந்த தொழில்நுட்பம் நமக்கு நன்கு அறிமுகாகி விடும் என்பதோடு இன்று வியப்பாக பார்க்கப்படும் தானியங்கி மகிழுந்துகள் சகஜமான ஒன்றாக பார்க்கும் நிலை ஏற்படும்.

13

13

பயோனிக் கண்கள், 2036 அடுத்த 20 ஆண்டுகளில் எதிர்பார்க்கலாம்.

14

14

பயோனிக் கண்களை எளிமையாக செயற்கை கண் என்றே கூறலாம். இன்று புழக்கத்தில் இருக்கும் தொழில்நுட்பம் ஒரு சிலருக்கு பார்வை வழங்கி வருகின்றது. இருந்தும் குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டே தான் இருக்கின்றது.

15

15

வரும் ஆண்டுகளில் தற்சமயம் இருப்பதை விட அதிக ரெசல்யூஷன், இன்ஃப்ரா ரெட் பார்வை, புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு மற்றும் ஹெட்ஸ்அப் டிஸ்ப்ளே எனப்படும் கண்களுக்கு முன் பிரதிபலிப்பது போன்ற அம்சங்கள் மேம்படுத்தப்படலாம்.

16

16

புற்று நோய் சிகிச்சையில் நானோ துகள்கள் பயன்படுத்தப்படும். அடுத்த 30 ஆண்டுகளில் அதாவது 2046 ஆண்டு வாக்கில் எதிர்பார்க்கப்படுகின்றது.

17

17

தற்சமயம் இருக்கும் கொடிய சிகிச்சை முறைகளுக்கு பதில் எதிர்காலத்தில் மேம்படுத்தப்பட்ட நானோ தொழில்நுட்பம் மூலம் மிகவும் மென்மையான சிகிச்சை முறைகளை எதிர்பார்க்கலாம்.

18

18

புற்று நோயினை எளிதில், சிறிய காலக்கட்டத்தில் குணப்படுத்த நானோ துகள்கள் உதவி செய்வதோடு குறிப்பிட்ட மருந்தினை சரியான இடத்தில் செலுத்தவும் வழி செய்யும்.

19

19

ரோபோட்டிக்ஸ். அடுத்த 30 ஆண்டுகளில் அதாவது 2046 ஆண்டு வாக்கில் எதிர்பார்க்கப்படுகின்றது.

20

20

இன்று தொழிற்சாலைகள், ராணுவம் மற்றும் வீடுகளில் பயன்படுத்தப்படும் ரோபோட்களில் அதிகளவு மாற்றங்கள் மேற்கொள்ளப்படும். கிட்டத்தட்ட மனிதர்களை போன்ற ரோபோட்கள் அனைவருக்கும் பயன் தரும்.

21

21

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப துறையில் வரும் காலங்களில் ஏற்படும் வளர்ச்சி ரோபோட் தயாரிப்பில் அதிகளவு பயன்படுத்தப்படும். இவை தினசரி அடிப்படையில் பயன் தரும் ஒன்றாகவும் மாறும்.

22

22

செவ்வாய் கிரகத்தில் குடியேறுதல். இன்னும் 40 ஆண்டுகளில் அதாவது 2056 ஆம் ஆண்டு எதிர்பார்க்கலாம்.

23

23

2050 ஆம் ஆண்டு வாக்கில் ஆய்வாளர் குழுவினர் நிரந்திரமாக செவ்வாய் கிரகத்தில் தங்குவதோடு சுற்றுலா பயணிகளும் அங்கு செல்ல முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

24

24

உந்துவிசை தொழில்நுட்பம் மேம்படும் போது செவ்வாய் கிரத்தை சென்றடையும் காலம் ஆறு மாதங்களில் இருந்து வாரக்கணக்கில் குறையும். இதனால் செவ்வாய் கிரகத்திற்கு சுற்றுலா வசதிகள் அதிகரிக்கும் வாய்ப்புகளும் அதிகம்.

25

25

ஏஜ் ஆஃப் சைபார்க்ஸ். 2066 ஆம் ஆண்டு வாக்கில் எதிர்பார்க்கப்படுகின்றது.

26

26

இன்னும் ஐம்பது ஆண்டுகளில் எதிர்காலத்தில் தொழில்நுட்பம் மற்றும் உயிரியல் ஒருங்கிணைக்கப்படலாம். உடலில் செலுத்தப்பட்ட நானோ துகள்கள் உங்களது உடல் நலத்தை கண்கானித்து நோய் வரும் முன் சிறிய கோளாறுகளை சரி செய்திடும்.

27

27

ஒரு சில அணியக்கூடிய கருவிகள் அல்லது உடலில் செலுத்தப்பட்டவைகள் உங்களது உடல் நடவடிக்கைகளை முழுமையாக டிராக் செய்து உடலில் நோய் தாக்காமல் ஆரோக்கியமாக வைத்து கொள்ள வழி செய்யலாம்.

28

28

வியாழனில் வாழ்க்கை. 2086 ஆம் ஆண்டு சாத்தியமாகலாம்.

29

29

இன்று நிலவு மற்றும் செவ்வாய் கிரகத்திற்கு குடியேற நினைக்கும் நம் ஆய்வாளர்கள் அன்று வியாழனில் குடியேற முடியும் என்பதை ஆய்வு செய்து அங்கு செல்லும் அனைத்து சாத்திய கூறுகளையும் ஆய்வு செய்யலாம்.

30

30

ஏற்கனேவே கணித்தப்படி 2050 ஆம் ஆண்டில் செவ்வாய் கிரகத்தை அடைந்து விட்டால் வியாழனில் குடியேறுவது ஓரளவு சாத்தியமாகிவிடும். இன்னும் சொல்ல போனால் வியாழன் உலகம் 2.0 என்றும் அழைக்கப்படலாம்.

Best Mobiles in India

English summary
Things That Will Change Everything In The Next Century Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X