பிளாக் நைட்டை கண்காணிக்க கிளம்பிய செயற்கைகோள்..? சர்ச்சையான லோகோ..!

Written By:

சமீபத்தில் அமெரிக்காவின் மிகப்பெரிய ராக்கெட் ஆன டெல்டா 4 ஹெவி ராக்கெட் ஒரு மர்மமான செயற்கைக்கோளை சுற்றுப்பாதைக்குள் செலுத்தியது. மிக அரிதாக பயன்படுத்தப்படும் மற்றும் அமெரிக்காவின் 100% ஏவுதல் வெற்றியை தரும் டெல்டா 4 எதை விண்வெளிக்குள் கொண்டு சேர்த்தது என்ற விவரம் இல்லை.

அமெரிக்க தேசிய புலனாய்வு அலுவலகால் மூலம் ஏவப்பட்ட இந்த இரகசிய பேலோடின் அசாதாரண லோகோ ஒரு புது சர்ச்சையை சந்தேகத்தை கிளப்பியுள்ளது..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

நினைவு :

டெல்டா 4 மிஷன் லோகோவானது (Mission Logo) மறைமுகமாக மர்மமான பிளாக் நைட் செயற்கைகோளை (The Black Knight Satellite - கருப்பு போர் வீரன் செயற்கைகோள்) நினைவுப்படுத்துகிறது.

துண்டிக்கப்பட்டது :

மிக சுவாரஸ்யமாக, இரகசிய பேலோடு சுமந்து கேப் கார்னிவரலில் கிளம்பிய இருந்து டெல்டா 4-ன் நேரடி தரவுகள் ஏவப்பட்ட ஆறு நிமிடங்களுக்கு பிறகு இரகசியமாக இருக்கும் பொருட்டு துண்டிக்கப்பட்டது.

ஆழமான மர்மம் :

இதன் மூலம் இந்த ஏவுதலின் உண்மையான நோக்கத்தில் ஒரு ஆழமான மர்மம் உள்ளது மட்டுமின்றி இதுவாக இருக்குமோ என்ற யூகத்தை மட்டுமே நம்மால் வகுக்க முடியும் வண்ணம் ரகசியாக செயல்படுகிறது.

அடையாளம் :

இருப்பினும் பிளாக் நைட் செயற்கைக்கோளை ஆய்வு செய்யும் நோக்கம் கொண்டதால் தான் தேசிய புலனாய்வு அலுவலகம் இந்த புதிரான லோகோவை தேர்வு செய்துள்ளது என்று பெரும்பாலானோர்கள் அடையாளம் காண தொடங்கிவிட்டனர்.

வழிகாட்டி செயற்கைக்கோள் :

ஆதாரங்களின் படி, தேசிய புலனாய்வு அலுவலகத்தை சேர்ந்த இந்த இரகசிய பேலோடு உண்மையில் மின்னணு சிக்னல்களைசேகரிக்கும் ஒரு மென்டர் (வழிகாட்டி) செயற்கைக்கோள் என்பது தெரிய வருகிறது.

ஆதரவு :

ஐக்கிய வெளியீடு கூட்டணியின் படி இந்த ஏவுதல் ஆனது தேசிய பாதுகாப்பிற்கு ஆதரவாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

மின்னணு சிக்னல் :

ஏவப்பட்ட சக்திவாய்ந்த செயற்கைக்கோளில் ஸ்பேஸ் ஷிப்கள், விமானங்கள், தரை நிலையங்கள் மற்றும் பிற செயற்கைக் மின்னணு சிக்னல் கண்காணிக்கும் வண்ணம் பெரிய ஆண்டெனாக்கள் பொருத்தப்பட்டிருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொடர்பு இல்லை :

லோகோவில் இருக்கும் போர்வீரன் ஒரு பாதுகாப்பை உணர்த்துகிறது போர்வீரனின் மார்பு மீது உள்ள கழுகானது அமெரிக்கா சின்னம் என்று பிளாக் நைட்டிற்கும் இதற்கும் தொடர்பு இல்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டிருந்தாலும் சந்தேகம் நீடிக்கிறது.

மேலும் படிக்க :

பிளாக் நைட் - ஒரு விலகாத மர்மம்..!


நிக்கோலா டெஸ்லா : 1899-ஆம் ஆண்டின் ஒரு நாள் இரவில் என்ன நடந்தது..?

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
The Black Knight Satellite finally under surveillance? The military launches Top-Secret satellite into orbit. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்