நிஜமாகவே டெஸ்லாதான் பறக்கும் தட்டை உருவாக்கினாரா..?!

Written By:

நம் எல்லோருக்குமே தெரியும் 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் நிகோலா டெஸ்லா நிகழ்த்திய கண்டுபிடிப்புகளும், அவரின் படைப்பாற்றலும், யோசனைகளும் மிகவும் அசாத்தியமானவைகளாய் இருந்தன.

மின்னியல், காந்தவியல் ஆகிய துறைகளில் நிக்கோலா டெஸ்லா செய்த புரட்சிகரமான பங்களிப்பை இன்றுவரை உலகம் போற்றிக் கொண்டே தான் இருக்கிறது. எவ்வளவுக்கு எவ்வளவு புதுமையான மனிதராக டெஸ்லா திகழ்ந்தாரோ அவ்வளவு மர்மங்களையும் தன்னுள் கொண்டு வாழ்ந்தார் என்பதும் நிதர்சனமே..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

#1

டெஸ்லா - இந்த நாகரீகத்தின் மிக அற்புதமான கண்டுபிடிப்பாளராய் திகழ்ந்தார் அதற்கு காரணம் அவரின் தற்காலம்-எதிர்காலம் ஆகியவைகளையும் தாண்டிய சிந்தனைகளும், ஆராய்ச்சிகளும் தான்..!

#2

வருங்காலம் தாண்டிய நிகோலா டெஸ்லாவின் எண்ணங்கள் அவருக்கு சாத்தியம்தானா..? அல்லது அவர் செய்தவை யாவும், உண்மையில் பூமி கிரகம் இன்றி வேறு கிரகத்தில் வாழும் மிக முன்னேறிய ஜீவராசிகளிடம் இருந்து கிடைக்கப்பெற்ற செய்திகளா என்ற குழப்பமும் சந்தேகமும் உள்ளன.

#3

அதற்கு மிகவும் பலமான ஒரு ஆதாரம் தான் அவர் உருவாக்கிய மிகவும் மர்மமான கண்டுபிடிப்பான ப்ளையிங் சாசர் (Flying Saucer) இன்னும் தெளிவாக சொன்னால் அடையாளம் காணப்படும் பறக்கும் தட்டு (IFO - ‘Identified' flying object).

#4

நூற்றுக்கும் அதிகமான ஆண்டுகளுக்கு முன்பு , இருபதாம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில் டெஸ்லா ஒரு விசித்திரமான விமான காப்புரிமையை விண்ணப்பித்தார், அது "மனிதனால் உருவாக்கப்படும் உலகத்தின் முதல் பறக்கும் தட்டு'..!

#5

மிகவும் சுவாரசியமான முறையில் பறக்கும் தட்டுகளை நேரில் கண்ட சாட்சிகளின் கருத்தின்கீழ் இந்த டெஸ்லாவின் ப்ளையிங் சாசர் டிசைன் உருவானது.

#6

அந்த வடிவமைப்பில், தட்டுக்கு உந்துதல் வழங்க மற்றும் பறக்க போதுமான அளவு மின்தேக்கி, பின்பு பறக்கும் தட்டின் திசையை கட்டுப்படுத்த சிறிய மின்தேக்கிகள், உடன் கைரோஸ்கோப் உறுதிப்படுத்துதல் அமைப்பு மற்றும் மின்சார இயக்கி கட்டுப்பாடு ஆகியவைகளும் அடக்கம்.

#7

உட்புறம் மிகபெரிய பிளாட் திரைகள் மற்றும் விமானிகள் காண முடியாத திசைகளான ப்ளைண்ட் ஸ்பாட்ஸ்களுக்காக வெளிப்புற வீடியோ கேமராக்கள் என அந்த ப்ளையிங் சாசர் வடிவமைப்பு கிட்டத்தட்ட அதிநவீன வருங்கால விமானத்தின் ஒரு முன் மாதிரியாக இருந்தது என்றே கூறலாம்.

#8

டெஸ்லாவின் பறக்கும் தட்டிற்கு கண்கள் உண்டு என்றே கூறலாம் ஏனெனில் அதில், மின் ஆப்டிகல் லென்ஸ்கள் அதன் கால்பகுதிகளில் பொருத்தப்பட்டு இருந்தன ஆகையால் விமானிகளால் உள்ளிருந்தபடி எல்லாவற்றையும் பார்க்க முடியும்.

#9

டெஸ்லாவின் இந்த அதிநவீன வடிவமைப்பிற்கு வேற்று கிரகவாசிகளின் உதவி கிடைக்கப்பெற்றது என்ற சதியாலோசனை கோட்பாடுகளும் உண்டு. 1899-ஆம் ஆண்டின் ஒரு நாள் இரவில், நிக்கோலா டெஸ்லா நிகழ்த்திய மிக மர்மமான வயர்லெஸ் ஆற்றல் ஒலிபரப்பு சோதனை பற்றி படிக்க இங்கே கிளிக் செய்யவும்..!

#11

மேலும் இதுபோன்ற அறிவியல் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Tesla’s UFO: What you should know about Tesla’s incredible flying saucer. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்