அழிவு உறுதி : எச்சரிக்கை விடுத்த ஹாக்கிங்.!!

Written By:

'அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு' என்ற வகையில் ஒட்டு மொத்த மனித இனத்திற்கும் வெளிப்படையான எச்சரிக்கை விடுத்துள்ளார் கோட்பாட்டு இயற்பியலாளரான ஸ்டீபன் ஹாக்கிங்.

இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி மனித இனத்தை மேம்படுத்துவதாக அனைவரும் எண்ணினாலும், அதீத வளர்ச்சி நம்மை ஒரு நாள் அழித்து விடும் என ஸ்டீபன் ஹாக்கிங் தெரிவித்துள்ளார்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

01

சமீபத்தில் ரெடிட் சமூக வலைதளத்தில் நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்வில் ஸ்டீபன் ஹாக்கிங் மனித குலம் அழிவதற்கான காரணங்களை தெரிவித்துள்ளார்.

02

வர இருக்கும் 100 ஆண்டுகளில் மனித இனம் மிகவும் ஆபத்தான காலக்கட்டத்தில் நுழைகின்றது என ஸ்டீபன் ஹாக்கிங் தெரிவித்துள்ளார்.

03

மனிதன் தான் கண்டுபிடித்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், மனித ஆக்கிரமிப்பு மற்றும் வேற்று கிரக வாசம் போன்றவை மனித இனம் அழிய முக்கிய காரணமாக அமையும் என அவர் கூறியுள்ளார்.

04

என்ன தான் நாம் கண்டுபிடித்த தொழில்நுட்பம் நம் வாழ்க்கையை மேம்படுத்த தவறாது என்றாலும், செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்களில் அதிகப்படியான வளர்ச்சி நமக்கு பேராபத்தாக அமையும்.

05

சூப்பர் இன்டெலிஜன்ட் செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்கள் நமது பணிகளை எளிமையாக்கினாலும், அவை சீராக ஒருங்கிணைக்கப்படாத போது நமக்கு பிரச்சனை அதிகம் ஆகும்.

06

இன்று நமக்கு வியப்பை அளிக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், எதிர்காலத்தில் தன்னிச்சையாக முடிவெடுக்கும் போது நம்மை எதிர்க்க அவை தயங்காது என்பதற்கு எவ்வித உத்திரவாதமும் கிடையாது.

07

அவ்வாறு செயற்கை நுண்ணறிவு தன்னிச்சையாக முடிவெடுக்கும் போது அவை நம்மை விட அதிக திறன் கொண்டவையாக இருக்கும் என்பதால் நமக்கு ஆபத்து நிச்சயமே. இதனையே வெளிநாட்டு திரைப்படங்களும், நம்ம ஊர் எந்திரன் படமும் வெளிப்படுத்தின.

08

ஒரு வேலை இயந்திரங்கள் நம்மை அழிக்கவில்லை என்றால் நம்மை நாமே அழித்து கொள்வோம் என்றும் ஸ்டீபன் ஹாக்கிங் தெரிவித்துள்ளார்.

09

சமீபத்தில் லண்டன் நகரின் அறிவியல் அருங்காட்சியகம் சென்ற ஸ்டீபன் அணு ஆயுத போர் பூமியில் மனித இனத்தை முழுமையாக அழிக்கும் என தெரிவித்துள்ளார்.

10

அணு ஆயுதங்கள் ஒருப்பக்கம் மறுப்பக்கம் ஆக்கிரமிப்புகள் மனித இனத்தையே அழிக்கும் வல்லமை கொண்டவை என்றும் அவர் தெரிவித்தார்.

11

செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆக்கிரமிப்பு மூலம் நமக்கு ஆபத்து ஏற்பட்டால், ஏலியன்களாலும் நமக்கு ஆபத்து ஏற்படலாம் என ஸ்டீபன் ஹாக்கிங் முன்னதாக தெரிவித்திருந்தார்.

12

ஒரு வேலை நம்மைவிட அதிநவீன உயிரினங்கள் (வேற்றுகிரக வாசிகள்) வாழ்ந்து வந்தால் அவை நம்மை அழித்து பூமியை ஆக்கிரமிக்க தயங்காது என 2010 ஆம் ஆண்டிலேயே ஸ்டீபன் ஹாக்கிங் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

13

நாம் இன்று வேற்றுகிரக வாசம் குறித்த தேடலில் ஈடுப்பட்டு வருவதை போன்றே வேற்றுகிரக வாசிகளும் நம்மை தேட அதிக வாய்ப்புகள் இருக்கின்றது. இவ்வாறு நடக்கும் பட்சத்தில் ஆபத்து இருப்பக்கமும் நிச்சயமே.

14

அவ்வாறு அதிநவீன வேற்றுகிரக வாசிகள் பூமியை கண்டுபிடித்தால் அவர்கள் பூமியை அழித்து ஆக்கிரமிப்பதோடு, அவர்கள் கண்டுபிடிக்கும் ஒவ்வொரு கிரகத்திலும் இதையே மேற்கொள்ள நேரிடும்.

15

இதே போல் ஸ்டீபன் ஹாக்கிங் பல முறை மனித இனம் சந்திக்க இருக்கும், அல்லது சந்திக்க நேரிடலாம் என்பன போன்ற எச்சரிக்கை சார்ந்த தகவல்களை தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
Stephen Hawking Warns Aliens Will Wipe Out Humanity Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்