நாசாவை 'வேடிக்கை' பார்க்க வைத்து கலக்கும் ஸ்பேஸ்எக்ஸ்..!

Written By:

மீண்டும் ஒருமுறை சாதித்தது - ஸ்பேஸ் எக்ஸ் என்று அறியப்படும், விண்வெளி ஆய்வு டெக்னாலஜிஸ் கார்ப்பரேஷன் ஒரு அமெரிக்க தனியார் விண்வெளி உற்பத்தியாளர் மற்றும் விண்வெளி போக்குவரத்து சேவைகள் நிறுவனம்.

நாசாவை 'வேடிக்கை' பார்க்க வைத்து கலக்கும் ஸ்பேஸ்எக்ஸ்..!

இந்த தனியார் விண்வெளிப் பயண நிறுவனம் கடந்த எட்டு மாதங்களில் ஆறாவது முறையாக பால்கான் 9 ராக்கெட்டை வெற்றிகரமாக தரை இறக்கியுள்ளது.

நாசாவை 'வேடிக்கை' பார்க்க வைத்து கலக்கும் ஸ்பேஸ்எக்ஸ்..!

ஜேசிசாட்-16 என்ற வணிக தகவல் தொடர்பு செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய கையோடு இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இரண்டு கட்ட பால்கான்-9 ராக்கெட் ஆனது புளோரிடா கேப் கார்னிவல் விமானப்படை நிலையத்தில் இருந்து ஒரு தொலைதூர ஜியோ ட்ரான்ஸ்பர் ஆர்பிட்டை (geosynchronous transfer orbit - GTO) நோக்கி ஜேசி-16 செயற்கைகோளை சுமந்துகொண்டு விண்ணில் பாய்ந்தது.

நாசாவை 'வேடிக்கை' பார்க்க வைத்து கலக்கும் ஸ்பேஸ்எக்ஸ்..!

தொடங்கப்பட்ட 9 நிமிடங்களுக்குள்ளாகவே ராக்கெட்டின் முதல் நிலையானது அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்து ஒரு சில நூறு மைல்கள் தொலைவில் புளோரிடா கடற்பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 'நிச்சயமாக நான் இன்னும் உன்னை நேசிக்கிறேன்' (Of Course I Still Love You) என்ற ஒரு ரோபோ கப்பல் தளத்தில் ஒரு குறிக்கப்பட்ட இடத்தில் வந்து இறங்கியது. இதன் மூலம் மறுபயன்பாட்டு ராக்கெட்களின் உறுதியான நிலையை எட்டியுள்ளது ஸ்பேஸ்எக்ஸ்..!

நாசாவை 'வேடிக்கை' பார்க்க வைத்து கலக்கும் ஸ்பேஸ்எக்ஸ்..!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவை தவிர்த்து பிற உலக நாட்டு விண்வெளி ஆராய்ச்சி நிலையங்கள் அனைத்தும் நாசா உட்பட, ரீயூசபிள் எனப்படும் மறுபயன்பாட்டு ராக்கெட் திட்டங்களை வகுக்க நீண்ட கால தயக்கத்திலேயே தான் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க :

மீப்பெரும் கருந்துளை ஒன்று பூமி கிரகத்தை விழுங்கும் - வல்லுநர் எச்சரிக்கை..!
ரஷ்யாவின் ஐஎஸ்ஐஎஸ் : மாஃபியக்கள் வெளியிட்ட பகீர் தகவல்கள்.!!
மாயன் காலத்து வானியலாளர் குறிப்பு, என்ன சொல்கிறது..?!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
SpaceX Lands 6th Rocket, Moves Closer to Reusability. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்