சீரிஸின் மறைந்துபோகும் நிலக்குழிகள், குழம்பும் விஞ்ஞானிகள்..!

Written By:

சூரியக் குடும்பத்தின் சிறிய குறுங்கோள் மற்றும் சிறுகோள் பட்டையில் உள்ள ஒரே குறுங்கோள் தான் சியரீசு (Ceres). 1801-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதியன்று சூசெப் பியாத்சி என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட இக்குறுங்கோள், விண்வளி வரலாற்றின் அரை நூற்றாண்டிற்கு சூரிய குடும்பத்தின் எட்டாவது கோளாக விளங்கியது.

'சியரீசு' எனும் ரோமானியப் பெண் கடவுளின் பெயரே சூட்டப்பட்டுள்ள இந்த குள்ள கிரகமானது தனது வாழ்நாள் முழுவதும் பல பெரிய எரிகல், விண்கல் தாக்குத்தலுக்கு உள்ளாகியுள்ளது. ஆனால் அந்த தாக்க குழிகள் அனைத்தும் இப்போது காணவில்லை..! எப்படி.?

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

நாஸாவின் டான் :

மார்ச் 2015 முதல் சிரிஸ் கோளை சுற்றி வரும் நாஸாவின் டான் விண்கல தரவை பயன்படுத்தி நிகழ்த்தப்பட்ட புதிய ஆய்வில் சிரிஸின் பெரும் குழிகள் காணாமல் போயுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

வினோதமான கலவை :

புவியியல் கால அளவுகளில் அழிக்கப்பட்டிருக்கின்ற சிரிஸின் தாக்கப் பள்ளங்கள் காணாமல் போக காரணம் சிரிஸின் வினோதமான கலவை மற்றும் உள் பரிணாமம் தான் என்று நம்பப்படுகிறது.

4.5 பில்லியன் ஆண்டு :

சிரிஸ் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியதில் இருந்து பெருமளவு விண்வெளி பொருட்களோடு மோதல் நிகழ்த்தியதில் பல தாக்கப் பள்ளங்களை பெற்றது.

250 மைல்கள் :

அதாவது 60 மைல் அகலமும் விட்டம் கொண்ட 40 தாக்கப் பள்ளங்களும், 250 மைல்கள் அகலமும் விட்டமும் கொண்ட 10 முதல் 15 தாக்கப் பள்ளங்களும் கொண்டிருந்தது.

60 மைல்கள் :

ஆனால் தற்போதைய முடிவுகளோ சிரிஸில் 60 மைல்கள் அகலமும் விட்டமும் கொண்ட 16 தாக்கப் பள்ளங்கள் மட்டுமே உள்ளன, எந்தவொரு தாக்கப் பள்ளமும் 175 மைல்களுக்கு நீளவில்லை என்றே தெரிவிக்கிறது.

குழப்பம் :

சிரிஸ் கோள் சூரிய மண்டலத்தில் வரலாற்றில் சற்றே தாமதமாவே உருவான முக்கிய உடுக்கோள் திணைமண்டலமாக இருப்பினும் கூட அதில் இன்னும் அதிக அளவிலான பெரும் குழிகள் கணிசமான அளவிலாவது இருக்க வேண்டும் என்பது தான் விஞ்ஞானிகளின் குழப்பமாகும்.

துடைத்தழிக்கப்படும் நிகழ்வு :

என்ன செயல்முறையாக இருப்பினும் இப்பெரும் குழிகள் துடைத்தழிக்கப்படும் நிகழ்வு பல நூறு கோடிக்கணக்கான ஆண்டுகள் நிகழ்ந்திருக்க வேண்டும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

புரியவில்லை :

அண்மையில் சீரிஸ் படங்கள் மூலம் கண்டறியப்பட்ட 500 மைல் அகலம் கொண்ட 'ப்ளானிட்யே' நிகழ்வின் தாக்கங்கள் எங்கே போயின என்பதே இப்போது புரியவில்லை.

உள்துறை அமைப்பு :

இதனை தொடர்ந்து இந்த பெரும் தாக்க குழிகளின் பற்றாக்குறைக்கு சிரிஸின் உள்துறை அமைப்பு தான் காரணமாக இருக்க முடியும் என்ற புதிய கோட்பாடும் உருவாகியுள்ளது.

வெப்பநீர்ம நடவடிக்கை :

சிரிஸின் மேற்பரப்பில் உயரும் உப்புக்கள் தோன்றியிருக்கலாம் அதன் கடந்தகால வெப்பநீர்ம நடவடிக்கை கூட பெரிய பள்ளங்களை காணாமல் போக வைத்திருக்க முடியும் என்றொரு கோட்பாடும் உண்டு.

உறுதி :

எப்படியோ, சிரிஸ் அதன் பெரிய தாக்கத்தை ஆற்றி பழைய மேற்பரப்பு நிலைக்கு தன்னை புதுப்பித்து கொள்கிறது என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.

மேலும் படிக்க :

டுன்குஸ்கா : 185 ஹிரோஷிமாவிற்கு சமம், நல்லவேளை 2016-ல் நிகழவில்லை..!


சஹாராவின் மர்மமான 'கண் உருவ' நிலவியல், உருவானது எப்படி..?

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Read more about:
English summary
Scientists Baffled by Vanishing Craters on Dwarf Planet Ceres. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்