சூசைட் வெப்பன்..? கிலி கிளப்பும் ரஷ்யா, என்ன நடக்குமோ..?!

Written By:

உலகின் முக்கிய சக்திகளால் எழுதப்படாத ஒரு விதியை அனைவரும் பின்பற்ற வேண்டியது இருக்கிறது - அது விண்வெளி ஆய்வு என்று வரும்போது, எக்காரணத்தை கொண்டும் சுற்றுப்பாதையில் ஆயுதங்களை செலுத்த கூடாது..!

ஆனால் சமீப காலமாக விண்வெளி தொழில்நுட்ப வளர்ச்சியில் முன்னணி நாடுகளாக திகழும் ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய மூன்று நாடுகளின் நடவடிக்கைகளின் கீழ், உலக நாடுகளின் ஜென்டில்மேன் ஒப்பந்தத்தை புறக்கணித்து விட்டதாக குற்றம் சாட்டப்பட்டடுள்ளது, முக்கியமாக ரஷ்யா மீது..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

#1

விண்வெளியில், சமீப காலமாக ரஷ்யாவின் மூன்று செயற்கைகோள்கள் மிகவும் வித்தியாசமாக செயல்படுவதின் மூலம் அவைகளின் மீது சந்தேகம் எழுந்துள்ளது.

#2

அதாவது, ரஷ்யாவின் குறிப்பிட்ட மூன்று செயற்கைகோள்கள் ஆனது ஒரு தற்கொலை ஆயுதம் (சூசைட் வெப்பன்) அல்லது கருவிகள் என்றும், அவைகள், பிற செயற்கைக்கோள்கள் மீது மோதல் நிகழ்த்தி அழிக்க முடியும் என்ற பீதி கிளம்பியுள்ளது.

#3

வழக்கமாக, விண்வெளி ஆய்வுகளில் ஈடுபடும் எந்தவொரு நாடும் விண்வெளிக்குள் செலுத்தும் தங்களின் செயற்கைகோள்களை பற்றி அறிவிப்பு வெளியிடும், பின்பு தான் ஏவுதல் நிகழ்த்தப்படும்.

#4

ஆனால், ரஷ்யாவோ இந்த குறிப்பிட்ட மூன்று செயற்கைகோள்களை பற்றிய எந்த விதமான அறிவிப்பையும் வழங்காமல் ஏவுதலை நிகழ்த்தி உள்ளதால், அதிக சந்தேகம் வலுத்துள்ளது.

#5

ரஷ்யாவின் செயற்கைகோள்கள் விண்வெளியில் தள்ளாடிக் கொண்டு இருப்பதாகவும், ஒருவேளை அவைகள் வேறொரு செயற்கைகோளுடன் மோதல் நிகழ்த்தி இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

#6

ரஷ்யாவின் செயற்கைகோள்கள் ஒரு விண்வெளி ஆயுதமாக உருவெடுக்கலாம் என்பதும், பிற உலக நாடுகளின் ராணுவ செயற்கைகோளை நெருங்கி மிகபெரிய சேதங்களை நிகழ்த்தலாம் என்பதும் தான் இப்போதைய பெரிய அச்சறுத்தலாக இருக்கிறது.

#7

இந்த மூன்று செயற்கைகோள்களும் கடந்த மார்ச் மாதம் ரஷ்யாவின் வடக்கு மாஸ்கோவில் இருந்து செலுத்தப்பட்டுள்ளது என்பதை ட்ராக் செய்து கண்டுபிடித்துள்ளது அமெரிக்க மூலோபாய கட்டளை கூட்டு விண்வெளி செயல்பாட்டு மையம்.

#8

ஆய்வுகள் மற்றும் பிற செயற்கைகோள்களை சீர் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ள பிற நாட்டு செயற்கைகோள்களுக்கு மத்தியில் ரஷ்யாவின் சூசைட் வெப்பனும் சுற்றுப்பாதையில் உள்ளதென்பது குறிபிடத்தக்கது.

#9

இது ரஷ்யாவின் திட்டமிடப்பட்ட ஒரு ராணுவ செயலாக இருந்தால், அது பிறநாட்டு தொடர்பு, வழிகாட்டுதல் மற்றும் உளவு ஆகியவைகளை குறி வைத்து நிகழ்த்தப்பட்டுருக்கும் என்கிறார்கள் வல்லுனர்கள்.

#11

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
The strange behavior of three Russian satellites is another sign we have an arms race in space. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்