பூமியே பிடிக்கலையா, இங்க போலாம்.!!

Written By:

பூமியை தவிற மனிதர்கள் வாழ தகுந்த இடத்தை தேடுவதில் உலக நாடுகளுள் போட்டி பலமாக இருக்கின்றது. தேடல் ஒரு பக்கம் இருந்தாலும், மறுப்பக்கம் வேற்றுகரிகத்தில் யார் முதலில் கால் பதிப்பது என்ற போட்டியும் இருக்க தான் செய்கின்றது.

நிலமை இப்படி இருக்க பூமியை தவிற மனித இனம் வாழ தகுந்த கிரகம் இது தான் என ஆய்வாளர்கள் புதிய கிரகம் ஒன்றை கண்டுபிடித்து தெரிவித்துள்ளனர். இது குறித்த விரிவான தகவல்கள் ஸ்லைடர்களில்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

1

கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் மனிதர்கள் வாழ தகுதியான கிரகம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.

2

பூமியில் இருந்து சுமார் 1,200 ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருக்கின்றது. இங்கு மனிதர்கள் வாழ தகுதியான சூழல் நிலவுவதோடு தண்ணீர் இருப்பதற்கான சாத்தியமும் அதிகம் என தெரிவித்துள்ளனர்.

3

கெப்ளர்-62எஃப் என பெயரிடப்பட்டுள்ள இந்த கிரகமானது கான்ஸ்டெல்லேஷன் லைரா திசையில் இருப்பதோடு பூமியை விட 40 சதவீதம் பெரியதாகும்.

4

கெப்ளர்-62எஃப் இருக்கும் அளவிற்கு அதனுள் பாறைகளும், சமுத்திரங்களும் நிச்சயம் இருக்கும் என ஔமவா ஷீல்ட்ஸ் தெரிவித்துள்ளார். இவர் மூத்த ஆய்வாளர் மற்றும் இயற்பியல் துறையில் ஆய்வு மாணவரும் ஆவார்.

5

முன்னதாக 2013 ஆம் ஆண்டு, நாசாவின் கெப்ளர் திட்டத்தில் இந்த கிரகம் சூரியனை விட சிறிய மற்றும் குளிர்ந்த கிரகத்தினை ஐந்து கிரகங்கள் சுற்று வருவது மற்றும் இந்த கிரகம் வெளிப்புறமாக இருப்பது மட்டும் கண்டறியப்பட்டது.

6

மற்றப்படி இந்த கிரகத்தின் சூழல், அளவு, மற்றும் வடிவம் போன்ற தகவல்கள் எதுவும் வழங்கப்படவில்லை.

7

கண்டுபிடிக்கப்பட்ட கிரகத்தின் சூழல் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அங்கு நீர் இருப்பதற்கு தேவையான அளவு வெப்பம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது, இதனால் அங்கு நிச்சயம் வாழ முடியும் என ஷீல்ட்ஸ் தெரிவித்துள்ளார்.

8

கெப்ளர்-62எஃப் பூமி மற்றும் சூரியனை விட வெகு தொலைவில் இருப்பதால் கிரகத்தினை போதுமான அளவு வெப்பமாக வைத்து நீர் அளவை நிலை நிறுத்த கெப்ளர்-62எஃப் சூழலில் அதிகப்படியான கார்பன் டை ஆக்சைடு தேவைப்படும்.

9

,பூமியை தவிற வாழும் திறன் கொண்ட கிரகமானது பூமியை விட மூன்று மடங்கு திடமாக இருப்பதோடு அங்கு அதிகப்படியான கார்பன் டை ஆக்சைடு இருக்க வேண்டும்,' என ஷீல்ட்ஸ் தெரிவித்துள்ளார். பூமியின் சூழலில் கார்பன் டை ஆக்சைடு சுமார் 0.04 சதவீதம் இருக்கின்றது.

10

இதுவரை மொத்தம் 2,300 வெளி கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, இதில் மனிதர் வாழ தகுதியானதாக குறைந்த அளவு கோள்களே இருக்கின்றன.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
Researchers Found A Planet That May Have Active Life Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்