ஐயன் மேன் கதை நிஜமானது, நிரூபித்துக் காட்டிய புதின்.!!

By Meganathan
|

ரஷ்யாவின் ரகசிய ஐயன் மேன் திட்டம் வெற்றி பெற்றிருப்பதாக அந்நாட்டு ராணுவ தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இவான் தி டர்மினேட்டர் (Ivan the Terminator) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோட் போர்க்களத்தில் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

போர்க்களத்தில் ராணுவ வீரர்களுக்கு ஆபத்தான சூழ்நிலைகளில் இந்த ரோபோட்கள் பயன்படுத்தப்பட இருக்கின்றது குறிப்பிடத்தக்கது.

01

01

இது குறித்து தி டெய்லி மெயில் செய்தியில் ரஷ்யா ராணுவத்தின் ஐயன் மேன் திட்டத்தின் கீழ் ரோபோ-ராணுவ வீரர் உருவாக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

02

02

ரஷ்ய ராணுவத்தைத் தொழில்நுட்ப ரீதியாகப் பலப்படுத்தும் நோக்கில் ரோபோட்டிக் ராணுவ வீரர்களை உருவாக்கும் திட்டம் துவங்கப்பட்டது.

03

03

அமெரிக்கா மற்றும் சீனா போன்ற நாடுகள் ராணுவ தொழில்நுட்பங்களில் அதிகநவீன முறைகளைக் கண்டுபிடிப்பதோடு அவர்களுக்கான ராணுவ டிரோன் மற்றும் ராணுவ ரோபோக்களை அவர்களே தயாரித்து வருவது ரஷ்யாவை அச்சத்தில் ஆழ்த்தியதைத் தொடர்ந்து ராணுவ பயன்பாட்டு ரோபோக்களை உருவாக்கியுள்ளது.

04

04

ரஷ்யாவின் இவான் தி டெர்மினேட்டர் மனிதர்கள் கட்டுப்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கென உருவாக்கப்பட்ட விசேஷ சென்சார் ஆடையை அணிந்து கொண்டு மனிதன் செய்யும் செயல்களை ரோபோ செய்யும்.

05

05

தற்சமயம் வரை கழுத்து, கைகள் மற்றும் தோள் பகுதிளில் பொருத்தப்பட்ட விசேஷ சென்சார் ஆடை அணிந்து கொண்டு மனிதர்கள் செய்யும் அனைத்தையும் அப்படியே செய்யும் படி இவான் வடிவமைக்கப்பட்டுள்ளது.

06

06

விசேஷ ஆடை அணிந்து இவான் டெர்மினேட்டரை கட்டுப்படுத்துபவர் பல மைல் தூரத்தில் இருந்து இயக்க முடியும். மேலும் போர்க்களம் செல்லாமலேயே தேடல்கள் மற்றும் வாகனத்தை ஓட்டுவது போன்றவற்றை மேற்கொள்ள முடியும்.

07

07

தற்சமயம் மனிதன் இயக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ள இவான் டெர்மினேட்டர் எதிர்காலத்தில் தானியங்கி முறையில் இயங்கும் படி வடிவமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

08

08

ராணுவ ரோபோ மட்டுமில்லாமல் ரஷ்யா ராணுவம் அதிநவீன டிரோன், டேன்க் டிரோன், ராணுவ வாகனங்கள் மற்றும் ரோபோட் இயக்கும் தொழில்நுட்பம் போன்றவற்றைத் தயாரிக்கும் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது.

09

09

போர்க் களத்தில் டிரோன் மற்றும் ரோபோட்கள் அறிமுகம் செய்யப்படுவது முதல் முறையில்லை என்பதோடு இவை சில காலமாகச் சோதனை செய்யப்பட்டுப் பயன்படுத்த தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

10

10

மேலும் மத்திய கிழக்குப் பகுதிகளில் ராணுவ தாக்குதல்களுக்கு ஃபிளைட் டிரோன்கள் அதிகளவு பயன்படுத்தப்பட்டுள்ளன. இதோடு பாகிஸ்தானில் மட்டும் இதுவரை சுமார் 424 வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன எனத் துப்பறியும் பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

11

11

வானியல் டிரோன் வகைகள் அமெரிக்க ராணுவத்தில் அதிகளவு பயன்படுத்தப்படுவதைத் தொடர்ந்து ரஷ்யாவும் தன் பங்கிற்கு ரோபோட்டிக் ராணுவ முறைகளை அதிகரித்து வருகின்றது.

12

12

மத்திய கிழக்குப் பகுதிகளில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக வானியல் டிரோன் பயன்படுத்தப்படுவது ரஷ்யாவின் வானியல் டிரோன் தொழில்நுட்ப திறன்களை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

13

13

சிரியா தாக்குதல்களில் அதிகளவு வான்வழி டிரோன்கள் பயன்படுத்தப்பட்டது ரஷ்யா வரலாற்றிலேயே அதகம் எனத் தெரியவந்துள்ளது. மேலும் இதன் மூலம் அந்நாடு டிரோன் தொழில்நுட்ப பயன்பாடுகளில் சிறந்த விளங்குகின்றது.

14

14

தி ஸ்காட் (The Skat)என்ற பெயரில் ரஷ்யா டிரோன் ஒன்றைத் தயாரித்து வருகின்றது. இதன் சிறப்பம்சம் இதில் தானியங்கி ஏவுகணை முறை இருப்பது ஆகும். இந்த டிரோன்கள் சுமார் 40,000 அடி உயரத்தில் மணிக்குக் கிட்டத்தட்ட 500 மீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டுள்ளது.

15

15

மற்றொரு ராணுவ தொழில்நுட்பமாக ரஷ்யா தயாரித்து வரும் டிரோன் தான் பிரேக்த்ரூ (Breakthrough). இந்த டிரோன் சுமார் 65,000 அடி உயரத்தில் பறக்க முடியும்.

16

16

தி ஸ்காட் விமானம் மூலம் சுமார் 40,000 அடி உயரத்தில் இருந்து தானியங்கி ஏவுகணை முறை மற்றும் வெடி குண்டுகளைச் சுமார் 2,500 மைல் தூரம் வரை தாக்கி அழிக்கும் திறன் கொண்டுள்ளது.

17

17

பிரேக்த்ரூ டிரோன் அதிகக் கச்சிதமானதாக இருந்தாலும் ஸ்காட் டிரோனை விட அதிக உயரமாகப் பறக்கும் திறன் கொண்டுள்ளது.

18

18

தானியங்கி ராணுவ தொழில்நுட்ப முறைகளில் ரஷ்யா அதிகக் கவனம் செலுத்தி வருவது அமெரிக்காவிற்கு அச்சுறுத்தலாக அமையும் எனக் கூறப்படுகின்றது.

Best Mobiles in India

English summary
Putin Showcases Iron Man Military Hardware Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X