பண்டையை பூமிக்கு 'நேர்ந்த' எதிர்பாராத மாற்றங்கள், எதனால் என்று தெரியுமா..?!

Written By:

4.54 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் சூரிய நெபுலாவிலிருந்து பிரிந்து அடர்வளர்ச்சியின் பயனாக உருவானது தான் பூமி கிரகம். உருவான தொடக்கத்தில் எரிமலை வாயுவால் காற்றுமண்டலம் உருவானது, ஆனால் அதில் உயிர்வாழத்தேவையான பிராணவாயு இல்லாமல் நச்சு வாயுக்களைக் கொண்டிருந்ததால் உயிர்கள் உருவாகவில்லை.

பெரும் எரிமலைச் சிதறலாலும், பிற அண்டவெளிப்பொருட்களின் மீது மோதிக்கொண்டே இருந்ததாலும் புவியின் பெரும்பகுதி உருகிய நிலையிலேயே இருந்தது. பின் பூமி குளிர்ச்சியடைந்து திடநிலையாக பல காலங்கள் ஆனது. புவியில் மோதிய வால்வெள்ளிகள் மற்றும் சிறுகோள்கள் மூலமாக மேகங்கள் உருவாகி பெருங்கடல்கள் உருவாகின. அதன்பின்னரே உயிர்கள் வாழ தகுந்த சூழல் உருவானது அதனை தொடர்ந்து பிராணவாயுவும் அதிகரிக்கத் தொடங்கியது.

இதுதான் மிக சுருக்கமான புவியின் வரலாறு ஆகும்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

#1

புவி வரலாற்றில் இருந்து அனுதினமும் பூமி கிரகத்தை பற்றிய மேலும் பல புரிதல்களை நாம் பெற்றுக்கொண்டே இருக்கிறோம் அதில் ஒரு தான் - பூமியின் காந்த துருவங்கள் பற்றிய சமீபத்தைய கண்டுபிடிப்பு..

#2

முன்னதாக பூமி கிரகத்திற்கு வசதியான முறையில் வட காந்த துருவம் மற்றும் தென் காந்த துருவம் என இரண்டு துருவங்கள் இருந்தன என்று கருதப்பட்டது.

#3

ஒன்று வடக்கில் மற்றொன்று தெற்கில் என பூமி கிரகத்திற்கு தீங்கான காஸ்மிக் கதிர்கள் மற்றும் அதிவேக சூரிய காற்று ஆகியவைகளால் இருந்து நம்மை பாதுகாத்துக் கொண்டிருக்கிறது.

#4

ஆனால், அறிவியல் கார்னெகி பயிலகத்தின் விஞ்ஞானிகள் நடத்திய ஒரு புதிய ஆராய்ச்சிபடி நாம் மேற்கண்ட அனைத்துமே மாற்றங்களுக்கு பின்பு உருவானவைகள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

#5

பண்டைய பூமிக்கு இரண்டல்ல, பல காந்த துருவங்கள் இருந்துள்ளதாம் அவைகள் கடந்த காலத்தில் கொஞ்சம் கூட கணிக்க முடியாத, எதிர்பாராத மாற்றங்களை பூமி மீது ஏற்ப்படுத்திக் கொண்டே இருந்துள்ளதாம்.

#6

சமீபத்திய ஆய்வு கடந்த கால காந்த புலங்களின் அமைப்பு வித்தியாசமாக இருந்ததுள்ளதை காட்டுகிறது, மற்றும் பூமியின் உட்கருவானது எப்போதுமே திடமாக இன்றி சில நேரத்தில் உருகிய நிலையிலும் ,சில நேரத்தில் திடமாகவும் இருந்துள்ளது.

#7

பூமியின் மையமானது திட நிலை அதே சமயம் உருகிய நிலையில் இருந்திருக்க காரணம் அந்த நேரத்தில் நம் கிரகத்திற்கு பல காந்த துருவங்கள் இருந்ததுள்ளதால் தான் என்பது உறுதியாகியுள்ளது.

#8

இந்த வினோதமான காந்த புல திசை ஏற்ற இறக்கங்கள் ஆனது சுமார் 600 - 700 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறாரகள்.

#10

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Not just two, ancient earth had several magnetic poles: Study. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்