ஜப்பானை 'குறி' வைத்த வடகொரிய ஏவுகணை, மிரண்டது ஐ.நா..!

Written By:

"நீ என்ன சொல்றது..? நான் என்ன கேக்குறது..??" என்ற தான்தோன்றி மனப்பான்மையுடன் திரியும் நாடுகள் என்ற பட்டியலில் முதல் இடம் வடகொரியாவிற்கு தான், அதுவும் எப்போதுமே..!

பியொங்யாங்கை தலைநகரமாக கொண்ட வடகொரியாவின் வடக்கில் சீனாவும் ரஷ்யாவும் அமைந்துள்ளன. தெற்கே தென் கொரியா அமைந்துள்ளது. 1948-ல் கொரியா நாட்டில் இருந்து பிரிந்து இந்நாடு உருவானது, இரண்டாம் உலகப்போருக்கு பின்பு 1945, ஆகஸ்டு-15 இல் ஜப்பான் நாட்டிடம் இருந்து இது சுதந்திரம் பெற்றாலும் இன்றும் அவ்விரு நாடுகளுக்கிடையே எல்லை பிரச்சனை நிலவுகிறது. அண்டை நாடுகள் மத்தியில் வடகொரியா இதுவரை கிளப்பிய எல்லா போர் பீதிகளையும் விட பெரிய பீதி ஒன்று இப்போது கிளப்பி உள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

ஏவுகணை சோதனை :

வடகொரியா புதனன்று (நேற்று) ஜப்பானிய நீர்நிலைகளை அடையக்கூடிய ஒரு ஏவுகணை சோதனையை நிகழ்த்தியுள்ளது.

கண்டனம் :

அமெரிக்கா, ஜப்பான் மற்றும் அதன் நட்பு நாடுகள், ஆஸ்திரேலியா உட்பட, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை கண்டனம் தெரிவித்துள்ளது. உடன் இந்த சோதனை மூலம் சீனாவின் எதிர்ப்பையும் வடகொரியா சந்தித்துள்ளது.

ஜப்பானுக்கு நெருக்கமாக :

"வடகொரியாவின் ஏவுகணையானது நம்பமுடியாத அளவிற்கு ஜப்பானுக்கு நெருக்கமாக தரையிறங்கியது. இந்த திட்டம் ஏதாவது ஒரு குறிப்பிட்ட நாடுக்கு அப்பால் செல்லும் என்ற பீதியையும் சேர்த்து கிளப்பியுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரண்டு இடைநிலை தூர ஏவுகணை :

அமெரிக்க இராணுவ தகவல்களின்படி ,வட கொரியா புதன்கிழமை அன்று இரண்டு இடைநிலை தூர ஏவுகணைகளை ஒரே நேரத்தில் ஏவி பரிசோதனை செய்துள்ளது.

ஜப்பான் கடல் :

அதன் இரண்டாவது ஏவுகணையானது ஜப்பான் கடல் அல்லது கிழக்கு கடலில் இறங்கியுள்ளது, அதாவது ஜப்பான் நாட்டின் வடக்கு கடற்பகுதியில் மற்றும் அதன் பிரத்தியேக பொருளாதார மண்டலத்தில் இருந்து 250 கிலோமீட்டர் தொலைவில்.

முதல்முறை

ஒரு வடகொரியா ஏவுகணை ஜப்பானிய கடலில் இறங்கியுள்ளது இதுவே முதல்முறையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க தூதர் சமந்தா பவர் :

இந்த வடகொரியா சோதனையானது சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிறகு மேலோமொரு அச்சுறுத்தல் என்று அமெரிக்க தூதரான சமந்தா பவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஐ.நா :

அணு சார்ந்த சோதனைகளுக்கு பின்னர் கடந்த 2006-ஆம் ஆண்டில் இருந்து வடகொரியாவிற்கு ஐந்துமுறை ஐ.நா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

மேலும் படிக்க :

தீர்ப்பு வந்ததும் முகமூடியை கழட்டிய சீனா, நேரடியாக மிரட்டுகிறது..!


அமெரிக்காவை அப்பட்டமாக காப்பியடிக்கும் ரஷ்யா..!

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
North Korea test fired a missile into Japanese waters for the first time. Read more about this in Tamiol GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்