நமது விண்மீன் பால்வெளி மையத்தில் என்ன இருக்கிறதென்று தெரியுமா..?

Written By:

ஒரு சர்வதேச வானியல் குழுவின் புதிய ஆராய்ச்சியின் படி நமது பால்வெளி மையம் காலியாக உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. அதாவது பால்வெளி மையத்தில் இருந்து சுமார் 8000 ஒளி ஆண்டுகள் தூரம் வரையிலாக எந்த நட்சத்திரங்களும் இல்லை. இதன் மூலம் இந்த மகத்தான நட்சத்திர வெற்றிடமானது நூற்றுக்கணக்கான மில்லியன் ஆண்டுகளாக எந்த நட்சத்திரங்களையும் உற்பத்தி செய்யவில்லை.

நமது விண்மீன் பால்வெளி மையத்தில் என்ன இருக்கிறதென்று தெரியுமா..?

ஜப்பான், தென் ஆப்பிரிக்கா, இத்தாலி போன்ற நாடுகளை சேர்ந்த வானியல் ஆய்வாளர்கள் நட்சத்திரங்கள் கவனிப்பதன் மூலம் நமது விண்மீன் பரிணாம வளர்ச்சி படிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். விண்மீன் தூசிகள் காரணமாக மண்டல மையத்தை கண்காணிப்பது மிகவும் கடினமாக இருப்பதால் ஆய்வில் தென் ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய தொலைநோக்கியை (South African Large Telescope - SALT) பயன்படுத்தியுள்ளனர்.

நமது விண்மீன் பால்வெளி மையத்தில் என்ன இருக்கிறதென்று தெரியுமா..?

அந்த ஆய்வில் இருந்து 10 இருந்து 300 மில்லியன் ஆண்டுகள் வயதுகொண்ட நட்சத்திரங்கள், விண்மீனின் மத்திய இதய பகுதியில் உள்ளன. அவைகள் சுமார் 150 ஒளி ஆண்டுகள் ஆரம் அளவிற்கு விரிவடைந்து கிடக்கின்றன என்பதும், மையத்தின் வெளியே சுமார் 8000 ஒளி ஆண்டுகள் விரிவாக்கத்தில் ஒரு பெரிய 'செப்ஹெய்ட் பாலைவனம்' (Cepheid desert) உள்ளது என்பதும் கண்டறியபட்டுள்ளது.

நமது விண்மீன் பால்வெளி மையத்தில் என்ன இருக்கிறதென்று தெரியுமா..?

தற்போது இந்த மாபெரும் வெற்றிடம் மற்றும் அதன் இயக்கம் ஆகியவைகளை புரிந்து கொள்வதின் மூலம் பால்வெளி மண்டல பரிணாமம் சார்ந்த தெளிவை பெற முடியுமா என்ற கோணத்தில் விண்வெளி ஆராய்ச்சிகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.

மேலும் படிக்க :

பூமியின் நிலவு போல் அல்ல இது நிலையில்லாத 'எரிமலை' நிலவு..!
சூரிய வெடிப்பின் அருகே பூமி இருந்தால் என்னவாகும்..? நீங்களே பாருங்கள்..!
பருவத்திற்கு முந்தின பூமி, வேற்றுகிரக உயிர்கள் கிடைக்காது, ஏன்...?

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
No stars in the centre of our galaxy Milky Way; Is it becoming a stellar desert.? Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்