சீனாவின் 'மண்ணெண்ணெய்' லாங் மார்ச் 7 : உறைந்துப்போன நாசா..!

|

ஜூலை 2-ஆம் தேதி அன்று சீனா தனது லாங் மார்ச் 7 ராக்கெட்தனை (Long March 7 rocket) நியூ வெண்சாங் சாட்டிலைட் லான்ச் மையத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இந்த ஏவுதல் மூலம் சீனா உலகின் உறுதியான விண்வெளி பயணங்கள் நிகழ்த்தும் நாடுகளில் ஒன்றாக தன்னை முன் நிறுத்திக்கொண்டது..!

சீனாவின் இந்த மலர்ச்சியான விண்வெளி திட்டம் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவை சற்று கவலை அடையச் செய்துள்ளது..!

நவீன சகாப்தம் :

நவீன சகாப்தம் :

"லாங் மார்ச் 7 வெளியீடு மூலம் அவர்கள் (சீனா) நவீன சகாப்தத்திற்க்குள் நுழைகிறார்கள்" என்று முன்னாள் நாசா விண்வெளி வீரர் மற்றும் சர்வதேச விண்வெளி நிலையம் தளபதியான லெராய் சியோ கருத்து தெரிவித்துள்ளார்.

நீண்ட கால திட்டம் :

நீண்ட கால திட்டம் :

அவர்கள் (சீனா) இப்போது களத்தில் நிற்கிறார்கள், அவர்கள் நீண்ட கால திட்டம் மூலம் விண்வெளியில் நீடிக்க மற்றும் தங்கள்இருப்பை விரிவாக்க திட்டமிட்டுகிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

சமீபத்திய முன்னேற்றம் :

சமீபத்திய முன்னேற்றம் :

இந்த வெளியீடு மூலம் சீனா அதன் ராக்கெட் திட்டங்களில் மிக சமீபத்திய முன்னேற்றங்களை காண்பித்தது என்றே கூற வேண்டும்.

நிலைதிறன் :

நிலைதிறன் :

விண்ணில் செலுத்தப்பட்ட ராக்கெட் செயற்கைக்கோள்களை இணைச் சுற்றுவட்டப் பாதையில் அணுக அனுமதிப்பதற்கு ஒரு நிலைதிறன் கொண்டது என்பதும் வெண்சாங் செயற்கைக்கோள் மையத்தில் இருந்த்து வெளியிடப்பட்ட முதல் ராக்கெட் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மண்ணெண்ணெய் :

மண்ணெண்ணெய் :

ஏவப்பட்ட ராக்கெட் ஆனது மண்ணெண்ணெய் மற்றும் திரவ ஆக்ஸிஜன் ஆகிய எரிபொருள்களை கொண்டு பயணித்தது, இது சீனாவால் பயன்படுத்தப்படும் ஹைப்பர்கோலிக் எரிபொருட்களை விடவும் சுற்றுப்புற சூழ்நிலைக்கு நட்பானதாகும்.

விண்வெளி நிலையம் :

விண்வெளி நிலையம் :

லாங் மார்ச் 7 ராக்கெட் ஆனது 2022-ஆம் ஆண்டிற்குள் முடிவடையும் சீனாவின் புதிய விண்வெளி நிலைய உருவாக்க திட்டத்தின் ஒரு பகுதி என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அச்சுறுத்தல் :

அச்சுறுத்தல் :

இந்த ராக்கெட் ஆனது அமெரிக்க விண்வெளி திட்டங்களுக்கான உடனடி அச்சுறுத்தல் இல்லை என்கிற போதிலும் 2030-களில் நிலவில் அதன் சீன விண்வெளி வீரர்களை தரை இறக்கி குடியேற்றம் நிகழ்த்தும் சீனாவின் நீண்ட கால திட்டத்தின் ஒரு பெரிய நடவடிக்கையை இது குறிக்கிறது.

பயம் :

பயம் :

இதன் மூலம் நாசா மற்றும் அமெரிக்கா விண்வெளிப் பயணம் மீதான தங்களின் தலைமையை இழக்க நேரிடலாம் என்று பயம் எங்களுக்கு இருக்கத்தான் செய்கிறது என்று லெராய் சியோ வெளிப்படையாக கூறியுள்ளார்..!

 மேலும் படிக்க :

மேலும் படிக்க :

பைபிளில் சொல்லப்படுவது உண்மை - நாசா சொல்வதை நம்பலாமா..??


பிளாக் நைட்டை கண்காணிக்க கிளம்பிய செயற்கைகோள்..? சர்ச்சையான லோகோ..!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
NASA should be worried about China’s blossoming space program. Read more about thois in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X