'பென்னு' : பூமியோடு மோதல் நிகழ்த்த 0.037% வாய்ப்பு உள்ளது..!

|

ஒசைரிஸ் ரெக்ஸ் (OSIRIS-Rex) - பூமியின் அருகாமை சிறுகோள் ஆன 'பென்னு' நோக்கிய ஒரு பயணம் மற்றும் பூமிக்கு அருகில் உள்ள உடுகோளுக்கு செல்லும் நாசாவின் முதல் விண்கலம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. கேப் கார்னிவலில் இருந்து செப்டம்பர் 8 ஆம் தேதி செலுத்தப்பட இருக்கும் ஒசைரிஸ் ரெக்ஸ்-ன் விண்வெளி பயணத்திற்கான இறுதி ஏற்பாடுகள் மேற்க்கொள்ளப்பட்டு, கிட்டத்தட்ட தயாராக உள்ளது என்றே கூறலாம்.

இது ஒரு சாதாரணமான, வழக்கமான விண்வெளி ஆய்வல்ல ஒரு விண்வெளி வரலாற்று நிகழ்வாகும் அது ஏன் என்று தெரியுமா ? ஏனெனில், கிட்டத்தட்ட பூமியின் நெருக்கமான சிறுகோள் ஆன பென்னு 22-ஆம் நூற்றாண்டில் மோதல் நிகழ்த்தலாம்.!

செப்டம்பர் 8 :

செப்டம்பர் 8 :

அதுசார்ந்த மேலும் பல ஆய்வுகளை நிகழ்த்தவே ஒசைரிஸ் ரெக்ஸ் விண்கலம் செப்டம்பர் 8-ம் தேதி , புளோரிடாவின் கேப் கார்னிவல் விமானப்படை நிலையத்தில் இருந்து அட்லஸ் வி ராக்கெட் மீதேறி விண்ணுக்குள் நுழைய இருக்கிறது.

பென்னு :

பென்னு :

ஒசைரிஸ் ரெக்ஸ் - ஒரு ஆளில்லா விண்கலமாகும். ஒரு கார்பன் வளமிக்க, பூமிகு நெருக்கமான பென்னுவை ஆய்வு செய்வதின் மூலம் சூரிய குடும்பம் பற்றிய முந்தைய வரலாற்றை புரிந்துக்கொள்ள முடியும்.

நாசாவின் முதல் முயற்சி :

நாசாவின் முதல் முயற்சி :

ஒசைரிஸ் ரெக்ஸ் தான் உடுகோள் மாதிரி மீட்டெடுத்து பூமிக்கு திரும்பும் நாசாவின் முதல் முயற்சியாகும்.

ஆகஸ்ட் 2018 :

ஆகஸ்ட் 2018 :

இந்த விண்கலம் இரண்டு ஆண்டுகள் பென்னு உடுகோளை துரத்தி, இறுதியாக ஆகஸ்ட் 2018-ல் தான் பென்னு உடுகோளை சந்திக்கும்.

உடுகோள் மாதிரி :

உடுகோள் மாதிரி :

சுற்றுப்பாதையில் இருந்தபடியே பென்னு பற்றிய ஒரு விரிவான ஆய்வை மேற்கொண்ட பின்னர், ஒசைரிஸ் ரெக்ஸ் விண்கலம் சேகரித்த உடுகோள் மாதிரியுடன் 2023-ல் பூமிக்கு திரும்பும்.

இலக்கு :

இலக்கு :

இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு கிடைக்கப்பெறும் மாதிரியை வைத்து அறிவியல் அணி கிடைக்க முடிந்த அளவிலான அறிவியல் இலக்குகளை சந்திக்க தேவையான ஆய்வுகளை நடத்த வேண்டும்.

உயிர் தோற்றம் :

உயிர் தோற்றம் :

இந்த 'அழகிய மாதிரி'யானது பூமியில் உயிர் தோற்றம் சார்ந்த முக்கிய துப்புகளை வழங்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

வருங்கால ஆராய்ச்சி :

வருங்கால ஆராய்ச்சி :

உடன் கிடைக்கப்பெறும் மாதிரியில் குறைந்தது 75%, நாசாவின் ஜான்சன் விண்வெளி மையத்தில் மேலும் பல வருங்கால ஆராய்ச்சிகளுக்காக பாதுகாப்பாக சேமிக்கப்படும்

 ஆபத்தான உடுக்கோள் வகை :

ஆபத்தான உடுக்கோள் வகை :

இவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்பட காரணம் பென்னு உடுகோள் ஆனது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட ஒரு ஆபத்தான உடுக்கோள் வகை என்பதால் தான்.

0.037 சதவீதம் :

0.037 சதவீதம் :

நாசா விஞ்ஞானிகள் கணிப்பு படி, 2135-ல் பென்னு உடுகோள் நிலவு மற்றும் பூமிக்கு இடையே கடக்கும் போது பூமியோடு மோதல் நிகழ்த்த ஒரு 0.037 சதவீதம் (2700-ல் ஒன்று) வாய்ப்பு உள்ளது.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

அதிர்ச்சி : ரகசிய விண்வெளி திட்டம் அம்பலம்!


இஸ்ரோவின் அடுத்த பாய்ச்சல், வளிமண்டலவியலுக்குள்..!!


பூமி கிரக வாசிகளுக்கு ஒரு 'மினி சர்ப்ரைஸ்'..!

தமிழ் கிஸ்பாட்  :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
NASA's sample return mission to earth-bound asteroid 'Bennu'. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X