போட்டோஷாப் மூலம் அழிக்கப்பட்ட யுஎஃப்ஒ'கள் : உண்மை வெளிச்சத்திற்கு வந்தது!

By Meganathan
|

விண்வெளி ஆய்வு குறித்து அமெரிக்கா பல்வேறு தகவல்களை மறைத்து வருவதாகப் பல காலமாகக் குற்றச்சாட்டு இருந்து வருகின்றது. இந்நிலையில் அமெரிக்காவின் நாசா மறைத்த சில உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் முன்னாள் ஆசோலசகர்களின் படி பல்வேறு அறிக்கைகளில் அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளியாகியுள்ளன. அந்த வகையில் நாசா விண்வெளி வீரர்கள் நிலவிற்குப் பயணம் மேற்கொண்ட போது எடுத்த புகைப்படங்களை நாசா திருத்தியிருப்பது தெரிய வந்திருக்கின்றது.

வெளியீடு

வெளியீடு

நிலவு பயணத்தின் போது எடுக்கப்பட்ட அனைத்துப் புகைப்படங்களும் பொது மக்கள் பார்வைக்கு வெளியிடும் முன் நாசா அவற்றைத் திருத்தியதாக தகவல் தெரிவிப்பாளர் தெரிவித்துள்ளார்.

கென் ஜான்ஸ்டன்

கென் ஜான்ஸ்டன்

1971 ஆம் ஆண்டு டாக்டர் கென் ஜான்ஸ்டன் என்பவர் நாசாவின் ஜான்சன் நிலையத்தின் பிரவுன் & ரூட் என்ற நிலவு ஆய்வகத்தில் பணியாற்றியுள்ளார்.

பணி

பணி

இவரது பணியானது விண்வெளி வீரர்கள் நிலவில் எடுத்த புகைப்படங்களை தேர்வு செய்து அவற்றை அட்டவணையிட்டு பல்வேறு அறிவியல் ஆய்வகங்களுக்கு அனுப்ப வேண்டும்.

திருத்தம்

திருத்தம்

நிலவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பொது மக்கள் பார்வைக்கு வழங்கும் முன் அவற்றை நாசா ஊழியர்கள் திருத்தியதை நேரில் கண்டதாக கென் ஜான்ஸ்டன் தெரிவித்துள்ளார்.

முரண்பாடு

முரண்பாடு

புகைப்படங்கள் மற்றும் திரைப்படச்சுருள்களை முதல் முறையில் கையில் எடுக்கும் போதே அவை உண்மையா அல்லது போலியானவையா என்பதைத் தான் நன்கு அறிந்ததாக டாக்டர் ஜான்ஸ்டன் தெரிவித்துள்ளார்.

தானம்

தானம்

டாக்டர் ஜான்ஸடன் பல்வேறு புகைப்படங்கள் மற்றும் இதர ஆய்வு பொருள்களை ரோஸ்வெல் சர்வதேச அருங்காட்சியகம் மற்றும் ஆய்வு மையத்திற்குத் தானமாக வழங்கியுள்ளார்.

ஆதாரம்

ஆதாரம்

ரோஸ்வெல் சர்வதேச யுஎஃப்ஒ அருங்காட்சியகத்தில் யுஎஃப்ஒ குறித்த பல்வேறு தகவல்கள் இருக்கின்றது. இந்த அருங்காட்சியகமானது 1947 ஆம் ஆண்டு நடைபெற்ற யுஎஃப்ஒ விபத்தின் நினைவாக அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பார்வை

பார்வை

ரோஸ்வெல் அருங்காட்சியகமாத்தை ஆண்டிற்கு சுமார் 180,000 பேர் பார்வையிடுகின்றனர். இதோடு இந்த அருங்காட்சியகமானது ஏலியன் அல்லது யுஎஃப்ஒ சார்ந்த விடயங்களுக்கான ஸ்மித்சோனியன் முதலீட்டகமாகவும் விளங்குகின்றது.

புத்தகம்

புத்தகம்

பல்வேறு நிலவு பயணங்களின் போது எடுக்கப்பட்ட ஐந்தடுக்கு புகைப்படங்களை முழுமையாக அழிக்க நாசாவின் மூத்த அதிகாரிகள் உத்தரவிட்டதாக மூன்று புத்தகங்களை எழுதியிருக்கும் டாக்டர் ஜான்ஸ்டன் தெரிவித்துள்ளார்.

ஆதாரம்

ஆதாரம்

ஆனால் நிலவில் முரண்பாடான கட்டமைப்புகள் இருப்பதை நிரூபிக்கும் ஆதாரமாக விளங்கும் சில புகைப்படங்களை டாக்டர் ஜான்ஸ்டன் அழிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

சர்ச்சை

சர்ச்சை

நாசா அதிகாரிகள் மறைக்கக்கோரிய சில புகைப்படங்களை ஜான்ஸ்டன் பொது மக்களுக்காக வெளியிட்டார், பின் இவரை ஆதரிக்கும் விதமாகத் தொண்டு நிறுவனமும் களத்தில் இறங்க புதிய சர்ச்சை கிளம்பியது.

குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

ஜான்ஸ்டன் சார்பில் வெளியான புகைப்படங்கள் உண்மையானதாக இல்லாததால் இவர் கூறிய தகவல்களை நம்ப இயலாது என நாத்திகவாதிகள் குற்றம்சாட்டினர். மேலும் ஜான்ஸ்டன் எவ்வித புகைப்படங்களையும் அழிக்கவில்லை என்றும் கூறுகின்றனர்.

மறுப்பு

மறுப்பு

நிலவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எதையும் திருத்தவில்லை, மேலும் வேற்றுக்கிரக வாசம் குறித்த ஆதாரம் எதையும் நாங்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்றே நாசா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து

கருத்து

இதோடு ஜான்ஸ்டன் தவிர பல்வேறு விண்வெளி வீரர்களும் ஏலியன் வாழ்க்கை குறித்து நாசா பல்வேறு தகவல்களை மறைத்து வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.

உண்மை

உண்மை

பல ஆண்டுகளாகவே ஏலியன்கள் இருப்பதை நாசா மறைத்து வருவதும், பல்வேறு நாட்டு அரசாங்கங்களும் விதவிதமான ஏலியன் ஜீவராசிகளுடன் இணைந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாக, பல்வேறு ஆய்வாளர்களும், முன்னாள் நாசா ஊழியர்களும் தெரிவித்துள்ளனர்.

Best Mobiles in India

English summary
NASA Employee claims Space Agency Edited UFO’s out of Moon images Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X