மர்மமான பொருள் தோன்றியதும் நேரடி ஒளிபரப்பை 'கட்' செய்த நாசா..!

Written By:

நாசா மீது ஏகப்பட்ட ''கவர்-அப்' (அதாவது உண்மைகளை மூடிமறைக்கும்) குற்றச்சாட்டுகள் உள்ளன. தற்போது சர்வதேச விண்வெளி மையத்தில் நேரடியாக ஒளிபரப்பான வீடியோவில் ஒரு விசித்திரமான பொருள் காட்சிப்படவும் உடனே நேரடி ஒளிபரப்பை 'கட்' செய்துள்ளது என்று நாசா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது..!

இதனை தொடர்ந்து யுஎஃப்ஒ தேடலார்கள் இதே போன்ற மர்ம பொருள் முன்பு பதிவாகி இருக்கிறதா என்ற ஆய்வில் குதிக்க மறுபக்கம் கான்ஸ்ப்பிரசி எனப்படும் சதியாலோசனை கோட்பாடுகள் கிளம்பிய வண்ணம் உள்ளன..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

விண்கல் ?

அது வெறுமனே ஒரு விண்கல்லாக இருக்க முடியும் என்று சிலர் கருத்துக்கூற ஏலியன் ஆர்வலர்களோ இதை சாதாரணமாக எடுத்துக் கொள்வதாக தெரியவில்லை.

ஜூலை 9 :

ஜூலை 9-ஆம் தேதி ஏற்பட்டுள்ள இந்த சமீபத்திய சம்பவத்தின் வீடியோ யுஎஃப் ஹன்டர் ஸ்ட்ரீட்கேப் 1-ல் பதிவேற்றப்பட்டது.

யுஎஃப்ஒ ?

வெளியான வீடியோவில் பதிவான மர்ம பொருள் ஆனது யுஎஃப்ஒ எனப்படும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருளை நினைவுப்படுத்துகிறது என்று கூறப்பட்டுள்ளது.

நடவடிக்கை :

சிலரின் கருத்துக்கு ஏற்ப அதுவொரு விண்கல்லாக இருக்கலாம், பார்க்கவும் அப்படித்தான் இருக்கிறது ஆனால் அதன் நடவடிக்கை விசித்திரமாக இருக்கிறது என்பதால் சந்தேகம் நீடிக்கிறது.

நின்றது ?

இந்த சம்பவத்தில் மிக சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால் பதிவான மர்ம பொருள் ஆனது நிற்பது போல் தோன்றியதும் நேரடி பதிவு துண்டிக்கப்பட்டுள்ளது.

சீன விண்வெளி சரக்கு கப்பல் :

பிற விண்வெளி ஆர்வலர்கள் இது சீன விண்வெளி சரக்கு கப்பலான டியோகோங்-1 ஆக இருக்கலாம் என்று பரிந்துரைப்பதோடு, இது சார்ந்த கோட்பாடுகளையும் முன் வைத்துள்ளனர்.

6 ஆண்டு :

கடந்த 6 ஆண்டுகளாக சர்வதேச விண்வெளி நிலையத்தை கண்காணிக்கும் யுஎஃப்ஒ ஹன்டர் ஸ்ட்ரீட்கேப்1, இந்த மர்ம பொருள் ஆனது நிலவோ அல்லது ஒரு விண்கல்லோ இல்லை என்று கூறுகிறது.

கட்டுப்பாடற்ற நிலை :

சமீபத்தில் கூற்றுக்களின்படி சீனா தனது முதல் விண்வெளி நிலையத்தின் கட்டுப்பாடை இழந்து விட்டதாகவும் அது கட்டுப்பாடற்ற ஒரு நிலையில் பூமிக்குள் மறு நுழைவு செலுத்தலாம் என்ற அச்சத்திலும் உள்ளது என்று கூறப்படுகிறது.

பேரழிவு :

ஒருவேளை பதிவான மர்ம பொருள் சீனாவினுடையதாக இருப்பின் அதுவொரு வெப்ப உலோகமாக வெடித்து சிதறி மக்கள் வசிக்கும் பகுதிகளின் மீது பேரழிவை ஏற்படுத்த முடியும்.

தடை :

இந்த சம்பவம் குறித்து நாசா விளக்கமளித்த போது "நாசா ஒருபோதும் வேண்டுமென்றே யுஎஃப்ஒக்கள் மறைக்க நேரடி ஒலிபரப்பு தடைப்படுத்தியதில்லை. இந்த வீடியோ இழப்பு ஐஎஸ்எஸ்-ன் சிக்னல் இழப்பு போன்ற வழக்கமான காரணமாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

குதிரை குளம்பு :

கடந்த நவம்பர் மாதம் நாசா யுஎஃப்ஒ ஆர்வலர்கள் படி சர்வதேச விண்வெளி நிலையத்தின் நேரடி வீடியோவில் ஒரு வினோதமான குதிரை குளம்பு வடிவிலான பறக்கும் பொருள் கைப்பற்றப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

புகைப்படங்கள் : நாசா, ராய்ட்டர்ஸ், யூட்யூப்.

English summary
Nasa cuts live feed from space station as mysterious object appears. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்