புதிய சர்ச்சை : 2000 ஆண்டு பழைய மண்டை ஓடு கண்டெடுப்பு!

Written By:

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய் மணலில் புதையுண்டு கிடந்த, அல்லது கண்டெடுக்கப்படாமல் நீண்ட காலம் மறைந்திருந்த தெளிவில்லா பொருள்கள் மற்றும் எலும்புகள் இன்று நம்மைக் குழப்பத்தில் ஆழ்த்தி வருகின்றது.

தொல்லியல் துறையினருக்கு பழைமை வாய்ந்த தேடல்கள் ஆர்வத்தைத் தூண்டும் அதே வேலையில் வரலாற்று கோட்பாட்டாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகளை புதிய சர்ச்சையில் சிக்க வைக்கின்றன. இந்தப் பட்டியலில் 2000 ஆண்டுகளுக்கு முன் மரணித்த பெண் மண்டை ஓடு சமீபத்தில் இணைந்திருக்கின்றது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

கோட்பாடு

விசித்திர வடிவம் கொண்ட பண்டைய கால பெண் ஒருவரின் மண்டை ஓடு ஏலியன் சார்ந்த புதிய கோட்பாடுகளுக்கு வழி செய்துள்ளது.

ரஷ்யா

பண்டைய கால பெண்மணியின் மண்டை ஓடு ரஷ்யாவின் செல்யாபின்சுக் மாகாணத்தில் தொல்லியல் துறையினர் மேற்கொண்ட ஆய்வில் கண்டெடுக்கப்பட்டது.

பழமை

கண்டெடுக்கப்பட்ட பெண் மண்டை ஓடு கிட்டத்தட்ட 2000 ஆண்டு பழமை வாய்ந்ததாக இருக்கும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

ஏலியன்

இந்நிலையில் கண்டெடுக்கப்பட்ட மண்டை ஓடு விசித்திர வடிவம் கொண்டிருப்பதால் இது நிச்சம் ஏலியன் இனத்தின் மண்டை ஓடாக இருக்க வேண்டும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

வருகை

மேலும் இந்த எலும்புக் கூடு ஏலியன்கள் பூமிக்கு வந்து சென்றதை உறுதி செய்யும் ஆதாரமாக இருக்கலாம் என ஏலியன் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

முடிச்சு

ஆனால் ஏலியன் ஆர்வலர்களின் கருத்து முற்றிலும் பொய் என்றும், கண்டெடுக்கப்பட்ட மண்டை ஓடு 'குறிப்பிட்ட பெண் மரணித்ததும் அவரது மண்டையில் கட்டப்பட்ட முடிச்சு காரணமாக விசித்திர வடிவம் கொண்டிருக்கலாம்' என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கருத்து

'பெண் மரணித்ததும், அவரத தலை பகுதியில் பெண்ணின் குழந்தையும் இணைத்துக் கட்டப்பட்டதால் அவரது மண்டை ஓடு விசித்திர வடிவத்திற்கு மாறியிருக்கலாம்' என தொல்லியல் அருங்காட்சியகத்தின் தலைவர் மியா மகுரோவா தெரிவித்துள்ளார்.

பழங்குடி

கண்டெடுக்கப்பட்ட மண்டை ஓடு நிச்சயம் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும், மேலும் இது கிட்டத்தட்ட 1800 முதல் 2000 ஆம் ஆண்டுகள் பழையதாக இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

ஆய்வு

கண்டெடுக்கப்பட்ட மண்டை ஓடுகளை வைத்து மேற்படி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு இந்தப் பெண் குறித்த பல்வேறு தகவல்கள் கண்டறியும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் மியா மகுரோவா தெரிவித்தார்.

மண்டை ஓடு

விசித்திர வடிவம் கொண்ட மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்படுவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது என்பதோடு, ஏற்கனவே முட்டை வடிவம் கொண்ட மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
Mystery surrounding ancient extra long skull Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்