ஒரு கிலோ மனித சாம்பலை நிலவிற்கு அனுப்ப எவ்வளவு தெரியுமா..?

Written By:

நாளுக்கு நாள் நிலவு சர்ச்சைகளும், நிலவின் மீதான சதியாலயோசனை கோட்பாடுகளும் அதிகரித்துக் கொண்டே போகின்ற நிலையில், நிலவிற்கு ஏன் மீண்டும் போகவில்லை.? மீண்டும் ஏன் போக வேண்டும் என்று இங்கே விவாதங்கள் கிளம்பி கொண்டிருக்கையில் ஒரு இந்திய - அமெரிக்க தனியார் நிறுவனத்தின் இணை நிறுவனமான மூன் எக்ஸ்பிரஸ், நிலவுக்கு போக கூறும் காரணம் என்ன என்பதை நீங்களே பாருங்கள்..!

அதாவது மனித சாம்பலை சந்திரனுக்கு கொண்டு செல்லும் திட்டத்தில் குதித்துள்ளது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

கிலோ ஒன்றுக்கு :

அதாவது கிலோ ஒன்றுக்கு 3 மில்லியன் டாலர்கள் வசூலித்து மனிதனின் எஞ்சியுள்ள பகுதிகளை சந்திரனுக்கு விண்கலம் ஏற்றி அனுப்ப திட்டமிட்டுள்ளது.

உரிமம் :

மூன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் நவீன் ஜெயின், தங்கள் நிறுவனத்திற்கு 2017-ல் நிலவிற்கு விண்கலம் செலுத்த மத்திய விமான போக்குவரத்து நிர்வாகத்தின் (FAA) உரிமம் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

அமெரிக்க கொள்கை :

இதன் மூலம் நிலவில் தரையிறங்க உரிமம் பெற்றுள்ள முதல் தனியார் நிறுவனம் என்ற பெருமையையும் மூன் எக்ஸ்பிரஸ் பெற்றுள்ளது. உடன் அமெரிக்க கொள்கை முடிவின் கீழ் நிலவின் மேற்பரப்பிற்கு இயந்திர விண்வெளிக்கலம் அனுப்ப அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

வணிக சரக்கு :

இதனை தொடர்ந்து மனித சாம்பல் உட்பட நிலவிற்கு வணிக சரக்குகளை நிகழ்த்த மூன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

போஸ்ட் சேவை :

பெரியவர்கள் எஞ்சியுள்ள தகன மிச்சங்கள் பொதுவாக 4 மற்றும் 6 பவுண்டு எடை கொண்டிருக்கும் என்பதால் 5.4 மில்லியன் டாலர் முதல் 8.1 மில்லியன் டாலர் என்ற விலை வரம்பில் "போஸ்ட் போன்ற" ஒரு சேவையை மூன் எக்ஸ்பிரஸ் நிகழ்த்த உள்ளது.

வரம்பற்ற எதிர்காலம் :

'மூன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்திற்கு வானம் கூட எல்லை அல்ல, அது ஒரு ஏவுதளம் தான். விண்வெளி பயணங்கள் நம் குழந்தைகளின் ஒரு வரம்பற்ற எதிர்காலத்தை உருவாக்கும் முனைப்பில் முன்னோக்கி நடத்தப்பட வேண்டும்' என்றும் ஜெயின் கருத்து கூறியுள்ளார்.

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Moon Express is an Indian-American company that wants to send human ashes to the moon. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்