கண்டுபிடிப்புகள் புதுசு தான், ஆனா அது ரொம்ப பழசு!!

By Meganathan
|

இன்னைக்கு நாம பயன்படுத்தும் எல்லாக் கருவிகளும் புதியது தான். காசு கொடுத்து கடையில் இருந்து வாங்கும் எல்லாக் கருவிகளும் யாரோ ஒருவர் கண்டறிந்ததாக இருந்தாலும் அவற்றின் பயன்பாடு பண்டைய காலங்களுக்கு செல்லும் என உங்களுக்குத் தெரியுமா.??

இதையும் பாருங்கள் : கூகுள் மேப்ஸில் மறைக்கப்படும் இடங்கள், உள்ளே இருப்பது இதுதான்..!?

திரைப்பட கதையை திருடி விட்டார்கள் என்ற குற்றச்சாட்டினை பல்வேறு செய்திகளில் நாம் கடந்து வந்திருப்போம். அது போல தான் யாரும் குற்றம்சாட்டாத பண்டைய கால தொழில்நுட்பங்களின் தூசி தட்டப்பட்ட நவீன பதிப்பு கருவிகளை நாம் இன்று பயன்படுத்தி வருகின்றோம்.!!

இதையும் பாருங்கள் : பேராபத்தை 18-ஆம் நூற்றாண்டிலேயே கணித்த தீர்க்கதரிசி..!

தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் பண்டைய காலத்தை சேர்ந்த வழிமுறைகளைக் கொண்டு இன்றைய நவீன முலாம் பூசப்பட்ட புதிய கருவிகள் எவை என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்..

பெர்ஷியாவின் குளிரூட்டிகள்

பெர்ஷியாவின் குளிரூட்டிகள்

பண்டைய காலங்களில் பாலைவன பகுதிகளில் வாழ்ந்த முன்னோர்கள் காற்றின் குறுக்கே குளிர்ந்த நீரை ஓடச்செய்து வெப்பத்தைத் தணித்து கொண்டனர். இதே வழிமுறை பெர்ஷிய ராஜ்ஜியங்களின் போது உருமாறிக் குளிரூட்டும் கோபுரங்களைக் கட்டமைத்தனர்.

பொருள் வழங்கும் இயந்திரம்

பொருள் வழங்கும் இயந்திரம்

வெண்டிங் மெஷின் எனப்படும் பொருள் வழங்கும் இயந்திரம் கிரேக்க கணித மேதை மற்றும் பொறியாளர் உருவாக்கினர். இந்த இயந்திரத்தில் நாணயத்தைப் போட்டால் குறிப்பிட்டளவு நீர் வெளியேறி பின் தானாக நின்று விடும்.

குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

இது எவ்வித கருவியும் கிடையாது மாறாக இன்று பிரபலமாக இருக்கும் கஸ்டமர் கேர் சார்ந்த வழக்கம் 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மெசப்பட்டோமியர்களிடம் இருந்து வந்தது. களிமண் மூலம் எழுதப்பட்ட இந்தக் குறிப்புகள் இன்று அவர்களின் பாரம்பரியத்திற்கு சான்றாக இருக்கின்றது.

பபுள் கம்

பபுள் கம்

இன்று நம்மவர்கள் எந்நேரமும் வாயில் வைத்து மெல்லும் சீவிங் கம் வகைகள் 5000 ஆம் ஆண்டுகள் பழமை வாய்ந்தவையாகும். இதனை தொல்லியல் துறை மாணவர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார். இந்த வகை பபுள் கம்கள் பற்களைச் சுத்தம் செய்யப் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ரோபோட்

ரோபோட்

இன்று உலகளவில் அபார வளர்ச்சியைக் கண்டு வரும் ரோபோட்களை கிரேக்க கணித மேதை ஏற்கனவே கண்டறிந்திருக்கின்றார். இவர் கண்டறிந்த ரோபோட் எடை கல் மற்றும் கப்பிகள் மூலம் வேலை செய்தது.

டெத் ரே

டெத் ரே

கதிர்வீச்சு மூலம் எதிரிகளைத் திணறடிக்கும் வழிமுறைகளைக் கிரேக்கர்கள் 2 ஆம் நூற்றாண்டிலேயே பயன்படுத்தியிருக்கின்றனர். இவர்கள் வெப்பக்காற்றை பீய்ச்சியடித்து எதிரிகளின் கப்பல்களை தாக்கினர்.

ஹார்டு டிஸ்க்

ஹார்டு டிஸ்க்

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கும் என நம்பப்படும் ஃபேத்தியோஸ் டிஸ்க் வகைகள் இன்று நாம் பயன்படுத்தும் சிடி ரோம் போன்று இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். செராமிக் மூலம் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்தத் தட்டு 242 வடிவங்களில் தகவல்களை உள்ளடக்கியுள்ளது.

அறுவை சிகிச்சை

அறுவை சிகிச்சை

18 ஆம் நூற்றாண்டுகளில் அறுவை சிகிச்சை செய்வது மிகவும் சவாலான ஒன்றாக இருந்ததோடு இவ்வாறு செய்யும் போது மரணிப்பவர் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. ஆனால் டிரிப்பானிங் எனும் பண்டைய வழிமுறையில் மிகவும் நுணுக்குமான அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. 1969 ஆம் ஆண்டு இதற்கான ஆதாரங்களை சோவியத் அறிவியல் சங்கம் அறிவித்தது.

இதையும் பாருங்கள்

இதையும் பாருங்கள்

6000 ஆம் ஆண்டு பழைமை வாய்ந்த பறக்கும் தட்டு கண்டுபிடிப்பு.!!

நியூட்டனின் யாரும் அறிந்திராத ஒரு கண்டுபிடிப்பு, மூடி மறைக்கப்படுகிறதா..?

Best Mobiles in India

English summary
Modern Inventions That Actually Came from Ancient Era Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X