செயற்கை பிரளயம் உருவாக்கும் அதிபயங்கர ஆய்வு : சுவாரஸ்ய தகவல்கள்.!!

Written By:

1980களில் பெரிய ஆட்ரான் மோதுவி தயாரிப்பது குறித்த பணிகளைத் துவங்கிய ஆய்வாளர்கள் இத்திட்டத்தினை வடிவமைப்பு குறித்த அறிக்கையை 1995 ஆம் ஆண்டு வெளியிட்டனர். இந்தியா, ஜப்பான், மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளின் உதவியோடு 1996 மற்றும் 1998 ஆம் ஆண்டு இத்திட்டத்திற்கான பணிகள் துவங்கின. மேலும் இத்தட்டத்தின் நான்கு ஆய்வுகளுக்கான அனுமதியும் வழங்கப்பட்டது.

இந்தத் திட்டத்திற்கான முழு பணிகளும் 2008 ஆம் ஆண்டு நிறைவடைந்தது. இதனை முழுமையாக முடிக்க சுமார் 626.9 கோடி அமெரிக்க டாலர்கள் செலவு செய்யப்பட்டது.

இத்தகையை செலவில் தயாரிக்கப்பட்ட இந்த செய்களக்கருவி குறித்த சில சுவாரஸ்ய தகவல்களை ஸ்லைடர்களில் பாருங்கள்..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

மோதுவி

பெரிய ஆட்ரான் மோதுவி (Large Hadron Collider, அல்லது LHC) எனப்படுவது சுவிட்சர்லாந்து செனீவாவில் அமைந்துள்ள ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனத்தின் (CERN) பரிசோதனைக்கூடங்களில் நிறுவப்பட்டுள்ள இயற்பியல்சார் செய்களக் கருவி ஆகும்.

துகள் முடுக்கி

இந்தக் கருவி இன்று வரை உலகின் மிகப்பெரிய துகள் முடுக்கியாக (particle accelerator) இருக்கின்றது. இத்திட்டத்தில் 100 நாடுகளைச் சேர்ந்த 10,000க்கும் அதிகமான இயற்பியலாளர்கள், பொறியியலாளர்களும் சேர்ந்து பணியாற்றி வருகின்றனர்.

மிகப்பெரியது

பெரிய ஆட்ரான் மோதுவி தன்னுள் நான்கு பெரிய ஆய்வகங்களைக் கொண்டுள்ளது. பிரான்சு-சுவிட்சர்லாந்து எல்லையில் அமைந்துள்ள இந்தக் கருவி வட்ட வடிவில் இருப்பதோடு 27 கிமீ அளவு நீளமாகப் பூமியின் கீழ் சுமார் 568 அடி ஆழத்தில் இருக்கின்றது.

ஹைட்ரோஜன்

இச்சாதனமானது அதிகளவு ஆற்றலைக் கொண்ட நேர்மின்னிகளை 99.9999 சதவீதம் துல்லியமாக ஒளியின் வேகத்தில் எதிர் எதிர்த் திசைகளில் முடுக்கி அவற்றை மோதச்செய்யும் திறன் கொண்டுள்ளது.

வெப்பம்

இவ்வாறு செய்யும் போது சூரியனை விட சுமார் 100,000 மடங்கு அதிகமான வெப்பம் உருவாகும். இது அண்டம் தோன்றியதை விளக்கும் கோட்பாடான பெரு வெடிப்புக் கோட்பாட்டுக்கு நகலி போன்றதாகும் என்றும் கூற முடியும்.

ஈர்ப்பு விசை

பெரிய ஆட்ரான் மோதுவியில் மொத்தம் 9,600 சூப்பர் காந்தம் பொருத்தப்பட்டுள்ளது. இது பூமியின் ஈர்ப்பு விசையை விட சுமார் 100,000 முறை அதிக சக்தி வாய்ந்ததாகும்.

அணுக்கரு

இந்தக் கருவியை கொண்டு அணுக்கருவினுள் இருப்பதாகக் கருதப்படும் துகள்கள் மற்றும் அவற்றின் அடிப்படை இயக்கப்பாடுகளையும் அறிய முடியும். இதன் மூலம் பூமி எவ்வாறு உருவானது என்பதையும் விரிவாக அறிந்து கொள்ள முடியும்.

பரிசோதனை

இந்தக் கருவியானது 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 10 ஆம் தேதி முதல் முறையாகப் பரிசோதனை செய்யப்பட்டது. அக்டோபர் 21 ஆம் தேதி முதல் மோதல் ஏற்படும் எனக் கூறப்பட்டது, இருப்பினும் காந்தங்கள் பழுதானதால் பெரும் ஆற்றலுடன் கூடிய முதல் இரண்டு மாதங்கள் தடைப்பட்டது.

மறு பரிசோதனை

2010 ஆம் ஆண்டு மார்ச் 30 ஆம் தேதி மறு பரிசோதனைக்கு திட்டமிடப்பட்டது. இந்த ஆய்வில் 7 டெரா எலக்ட்ரான்வோல்ட் மோதல் ஏற்படுத்தப்பட்டது. பெரிய ஆட்ரான மோதுவி தொடர்ச்சியான இயக்கத்தில் இருக்கும் போது பூமியின் தொடக்கத்தில் இருந்த சூழலை மீண்டும் ஏற்படுத்தும் வாய்ப்புகள் இருப்பதாக ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

பங்கு

புதிய இயற்பியலைத் துவக்க வழி செய்யும் இந்த ஆய்வில் இந்தியாவைச் சேர்ந்த 50 இயற்பியலாளர்களின் பங்கும் குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
mind blowing facts about the CERN Large Collider Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்