நூல் இழையில் மிஸ் ஆன அமெரிக்க - சோவியத் பேரழிவு..!

Written By:

பனிப்போர் (Cold War) என்பது இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்னர் 1990-வரை அமெரிக்காவுக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையே நடந்த ஒரு வளர்ச்சி போட்டியாகும். அந்த போரின் போது இந்த இரண்டு வல்லரசு நாடுகளும் தமது இராணுவம், தொழில்நுட்பம், மற்றும் விண்வெளி திட்டங்களை வளர்த்துக் கொண்டன. பிற உலக நாடுகளுடன் ஒப்பந்தம் செய்து உலகில் தனது செல்வாக்கத்தை மேம்படுத்தியது.

இந்த காலகட்டத்தின் இடையே அமெரிக்கா மற்றும் சோவியத் ஒன்றித்திற்க்கும் இடையே ஒரு குறிப்பிட்ட காரணத்திற்க்காக நிஜமாகவே யுத்தம் நிகழ பார்த்தது. யுத்தம் நிகழ தூண்டுதலாய் அமைந்த அந்த காரணம் என்னெவென்று தெரியுமா..?

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

போருக்கு தயாராகியது :

1967, மே 23 அன்று, அமெரிக்க விமானப்படை துருவ பகுதிகளில் நாட்டின் கண்காணிப்பு ரேடார்களை சோவியத் ஒன்றியம் முடக்கி விட்டது என்று நினைத்து, போருக்கு தயாராகியது.

சூரிய புயல் :

அதற்கு சற்று முன் நேரத்தில், இராணுவ விண்வெளி வானிலை ரேடார் மற்றும் வானொலி தகவல் தொடர்புகளை செயலிழக்க திறன் மிக்க சூரிய புயல் தான் காரணம் என்று கண்டறியப்பட்டது.

பேரழிவு :

பனிப்போரின் உச்சக்கட்ட காலத்தில் அமெரிக்காவின் ரேடார் மற்றும் ரேடியோ தகவல் தொடர்புகள் ஒரு சூரிய புயலால் 'ஜாம்' ஆகிவிட சோவியத் யூனியன் உடன் ஆன ஒரு பேரழிவு இராணுவ மோதலுக்கு அமெரிக்கா வழிவகுக்கப் பார்த்தது.

காரணமே இல்லாமல் :

சூரியனின் செயல்பாட்டை கண்காணிக்கும் முயற்சிகளை அமெரிக்க விமானப் படை செய்ததால் மட்டும் தான் இந்த யுத்தம் தடுக்கப்பட்டது, இல்லையெனில் காரணமே இல்லாமல் ஒரு யுத்தம் நிகழ்ந்திருக்கும்.

அணு ஆயுத தாக்குத்தல் :

இந்த போர் முயற்சியின் போது அமெரிக்க விமானங்கள் தரையில் இருந்தது, அதனால் சோவியத் ஒன்றியத்துடன் ஒரு சாத்தியமான அணு ஆயுத தாக்குத்தல் தவிர்க்கப்பட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அவதானிப்புகள் :

சூரிய மற்றும் மண்ணியல் புயல் போன்ற ஆபத்தான தாக்கங்கள் மிக குறைவான அளவில் இருந்ததால் அவைகள் சார்ந்த அவதானிப்புகள் மற்றும் முன்னறிவிப்புகளும் மிகவும் குறைவாகவே அக்காலத்தில் நிகழ்த்தப்பட்டன.

சூரிய நடவடிக்கை :

பூமியின் காந்தப் புலம் மற்றும் மேல் வளிமண்டலத்தில் தொந்தரவுகள் போன்றவைகளை 1950-களின் பிற்பகுதியில் தான் அமெரிக்க இராணுவமானது சூரிய நடவடிக்கை மற்றும் விண்வெளி வானிலை கண்காணிப்பு தொடங்கியது.

1960 :

சூரியனின் வளிமண்டலத்தில் இருந்து கதிர்வீச்சின் சுருக்கமான தீவிர வெடிப்புகளை 1960-ல் தான் அமெரிக்க விமானப்படை ஏர் வானிலை சேவை சூரிய எரிப்பை வாடிக்கையாக கண்காணிக்க ஆரம்பித்தது.

மண்ணியல் புயல் :

சூரிய எரிப்பு அடிக்கடி ரேடியோ தகவல் தொடர்பு மற்றும் மின் வரி பரிமாற்றங்களை தகர்க்கும் அவைகள் பூமியில் மின்காந்த தொந்தரவுகள், மண்ணியல் புயல்கள் என அழைக்கப்படும்.

தீவிரமான காந்த விசை :

குறிப்பிட்ட அந்த நாளில் (மே 18 , 1967) சூரியனில் அசாதாரணமான பெரும் குழுவிலான தீவிரமான காந்த விசைகள் வெளியாகியுள்ளது.

எச்சரிக்கை அமைப்பு :

மே 23 அன்று வெளிப்பட்ட அந்த சூரிய கிளர்ச்சி நிகழ்வு அமெரிக்க வட கோளத்தில் உள்ள மூன்று அணு ஆயுத ஏவுகணை ஆரம்ப எச்சரிக்கை அமைப்பு (BMEWS) தளங்களின் ராடார்களை பாதித்துள்ளது.

சோவியத் ஏவுகணை :

உள்வரும் சோவியத் ஏவுகணைகளை கண்டறிய வடிவமைக்கப்பட்ட அந்த ரேடார்கள், முடக்கப்படவும் அந்த நிலையங்களில் மீதான தாக்குதல் நிகழ்த்தப்பட இருக்கிறது இது ஒரு போர் நடவடிக்கை என்று கருதப்பட்டது.

அணு ஆயுத எச்சரிக்கை :

1960-களின் போது, விமானப்படைகள் தொடர்ந்து அணு ஆயுத எச்சரிக்கை விடுத்தன, ஆகையால் அமெரிக்க தளபதிகள் சூரிய வெடிப்பு பற்றிய தெளிவை பெறாமல் ராடார்களை ரஷ்யர்கள் தான் முடக்கியுள்ளார் என்று கணித்துள்ளனர்.

மாபெரும் யுத்தம் :

உடன் அமெரிக்க படை பதிலடி கொடுக்கும் வண்ணம் தயார் நிலையில் இருக்க அமெரிக்க தளபதிகள் கட்டளையும் விடுத்துள்ளனர், பின்னர் நிஜமான ரேடார் முடங்கிய காரணம் அறியப்பட்ட பின்பு கட்டளைகள் உடன் சேர்த்து நிகழ் இருந்த மாபெரும் யுத்தமும் தளர்த்தப்பட்டது.

மேலும் படிக்க :

கில்லாடி சீனா : உயர்தர புகைப்படம், வானிலையுடன் சேர்த்து கடலோர பாதுகாப்பு..!


'பென்னு' : பூமியோடு மோதல் நிகழ்த்த 0.037% வாய்ப்பு உள்ளது..!


சூரிய மேற்பரப்பில் பொழிந்த குருதி அணுத்திரவ மழை (வீடியோ)..!

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
Massive Solar Storm In 1967 Nearly Took US To Brink Of War: Study. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்