செவ்வாய் அரிப்பள்ளங்களுக்கு காரணம் நீர் இல்லையாம். பின் எதனால்.?

Written By:

செவ்வாய் கிரகத்தில் காணப்படும் அழகான அரிப்பு பள்ளங்கள் நாம் எண்ணுவது போல் ஒருவேளை தண்ணீர் பாய்ந்ததால் உருவாகியதல்ல என்று நாசா அறிவித்துள்ளது.

இப்போது வரையிலாக சிவப்பு கிரகத்தின் மேற்பரப்பில் உள்ள தனித்துவமான செதுக்கல்களுக்கு காரணம் அங்கு வழிந்தோடிய நீர்தான் காரணம் என்று நம்பப்படுகிறது, ஆனால் சமீபத்திய ஆய்வு தரவுகளின் மூலம் அந்த தடங்கள் நீரால் உருவானவைகளாக இருக்க சாத்தியமில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

ஒழுகல் :

ரிக்கரிங் ஸ்லோப் லினே (recurring slope lineae - RSL) என்பது சூடான செவ்வாய் சரிவுகளின் பருவகால பாய்ச்சல் அல்லது ஒழுகல் ஆகும்.

அவசியம் :

கடந்த ஆண்டு செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த செவ்வாய் அரிப்பள்ளங்களானது தனித்துவமான ஒன்று என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியதும் அவசியம்.

ஆர்எஸ்எல் :

வெப்பமான மாதங்களில் இந்த ஆர்எஸ்எல்-கள் (RSL) இருண்ட கோடுகளாகவும் மற்றும் குளிர்காலத்தில் மங்கிப்போயும் விடுகின்றன.

நீரேற்றிய உப்பு :

இதன்மூலம் நீரேற்றிய உப்பு மூலம் அவைகள் உருவாகி இருக்கலாம் என்று விஞ்ஞானிகளால் வலுவாக நம்பப்பட்டது.

இரசாயன செய்முறை :

சமீபத்தில் செவ்வாய் ரெகனைசன்ஸ் ஆர்பிட்டர் (Mars Reconnaissance Orbiter) மூலம் மின்காந்த கதிர்வீச்சு அலைகளில் அளவிடும் பகுத்தாயும் இரசாயன செய்முறையான கிரிஸ்ம் (CRISM) தரவுகள் ஆராயப்பட்டது.

தடயம் :

அதன் அடிப்படையில் அந்த பள்ளங்களில் தண்ணீர் அலல்து தண்ணீர் மூல பொருட்கள் மூலம் உருவானதற்கு எந்த விதமான தடயமும் இல்லை என்பதால் அவைகள் உருவானதிற்கும் தண்ணீருக்கும் இருக்கும் தொடர்பானது மேலும் குறைந்துள்ளது.

நிச்சயமான காரணம் :

சமீபத்திய ஆய்வு தரவை மட்டுமே முன்னிலைப்படுத்தி அங்கு நீர் இல்லை என்று அர்த்தம்கொள்ளக்கூடாது என்றும் இந்த அரிப்பள்ளங்கள் உருவாக்கப்பட்டது எப்படி என்ற நிச்சயமான காரணம் அறியப்படவில்லை.

மண்ணியல் செயல்முறை :

இது வெறும் நிராகரிக்கப்பட முடியாத ஒரு கருதுகோள் தான் வரும் காலங்களில் கிடைக்கும் தரவுகள் மூலம் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு வடிவமைப்பு, நடப்பு மண்ணியல் செயல்முறைகள் பற்றிய நல்ல யோசனைகள் கிடைக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கருத்துக்கூறியுள்ளார்.

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Mars's gullies probably aren't being formed by flowing water. Read more about this in tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்