இஸ்ரோவின் அடுத்த மிரட்டல் - மீத்திமிசுத்தாரை எஞ்சின்..!

|

ஸ்பேஸ் டெக் (Space Tech) எனப்படும் விண்வெளி தொழில்நுட்பத்தில் பல்வேறு வளர்ச்சிகளையும் சாதனைகளையும் தொடர்ச்சியாக அதே சமயம் வெற்றிகரமாக நிகழ்த்திக்கொண்டு வரும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ மற்றொரு ஸ்பேஸ் டெக் வளர்ச்சியில் களம் குதித்துள்ளது..!

இஸ்ரோவின் மீத்திமிசுத்தாரை எஞ்சின் முயற்சியும் வெற்றியில் முடிவதோடு, பிற உலக நாடுகளுக்கு மத்தியில் அதிரடி கிளப்பும் என்பதில் சந்தேகமே வேண்டாம்..!

மாதிரி :

மாதிரி :

இம்மாதத்தில் மீத்திமிசுத்தாரை அல்லது மீயொலிவேக எரிதல் திமிசுத்தாரை எனப்படும் ஒருவகை திமிசுத்தாரை, காற்றெரி தாரை என்ஜீனான ஸ்க்ராம்ஜெட் என்ஜீன் (Scarmjet Enjine) மாதிரியை உருவாக்கி இஸ்ரோ சோதனை செய்ய இருக்கிறது..!

இந்தியாவின் கனவு ராக்கெட் சக்தி :

இந்தியாவின் கனவு ராக்கெட் சக்தி :

தற்போது அரை மீட்டர் அகலம் மற்றும் 45 கிலோ எடையளவில் உருவாக்கம் பெற்றுள்ள மாதிரியானது பின்னாளில் இரண்டு நிலைகளில் உருவாக்கம் பெற்று இந்தியாவின் கனவு ராக்கெட் சக்தியாக வளர இருக்கிறது.

உந்துவிசை :

உந்துவிசை :

இவ்வகை என்ஜீன்களில் எரிதல், சூப்பர்சோனிக் வேகத்திலேயே நடைபெறுகிறது. அதிவேகத்தில் செல்லும்போது காற்றை அமுக்குதல் மற்றும் எதிர்முடுக்கம் கொடுத்து எரித்து உந்துவிசையை ஏற்படுத்துகிறது..!

அதிகபட்ச வேகம் :

அதிகபட்ச வேகம் :

இதன்மூலம் மீத்திமிசுத்தாரைகள், திமிசுத்தாரைகளைவிட பன்மடங்கு அதிக வேகத்தில் சிறப்பாகச் செயல்புரியக்கூடும். கோட்பாட்டளவில் இவற்றின் அதிகபட்ச வேகம் மாக் 12 (மணிக்கு 9,100 மீட்டர் - மணிக்கு 5,000 கிலோமீட்டர்) முதல் மாக் 24 (மணிக்கு 18,000 மேட்டர் - மணிக்கு 29,000 கிலோமீட்டர்) எனுமளவில் இருக்கும்..!

குறைந்த செலவில் :

குறைந்த செலவில் :

இப்போது இருக்கும் ராக்கெட்களை விட குறைந்த செலவில் அதே சமயம் அதிக திறனுடன் செயற்கைக்கோள்கள் மற்றும் அதை அமைப்புகளை விண்வெளிக்குள் அனுப்ப அவைகள் உதவும்..!

உந்துவிசை விஞ்ஞானிகள் :

உந்துவிசை விஞ்ஞானிகள் :

திரவ அல்லது கடுங்குளிர் அமைப்புகள் கொண்ட வழமையான ராக்கெட் அமைப்புகளை விட இவைகள் மிக நம்பகமானதாக இருக்கும் என்கின்றன உந்துவிசை விஞ்ஞானிகள்.

சோதனை ராக்கெட் :

சோதனை ராக்கெட் :

கடந்த மார்ச் 2010-இல், ஒரு மந்தமான மீத்திமிசுத்தாரை இயந்திர தொகுதியை சோதனை உயர் தொழில்நுட்ப வாகன ( ஏடிவி - டி 01 ) என்ற பெயர்கொண்ட சோதனை ராக்கெட்டில் பொருத்தப்பட்டு சோதனை இஸ்ரோவினால் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐந்து வினாடிகள் :

ஐந்து வினாடிகள் :

இம்முறை நடக்கப் போகும் ஸ்க்ராம்ஜெட் என்ஜீன் சோதனையானது ஐந்து வினாடிகள் அளவிலான தக்க வைக்கும் சக்தி கொண்டிருக்கும் வண்ணம் இஸ்ரோ எதிர்பார்க்கிறது

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

இனி சியாச்சினில் ஒரு உயிர் கூட பலியாகாது : களத்தில் குதிக்கும் இஸ்ரோ..!


ஒன்று கூடும் இஸ்ரோ - நாசா, எதற்கு என்று தெரியுமா.?!


எலான் மஸ்கிற்கு இஸ்ரோவின் சவால்..!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
ISRO soon to test-fly scramjet engine model. Read more about this in Tamil gizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X