ஐந்து சாதனைகள் : 'சொல்லி அடித்த கில்லி' இஸ்ரோ.!!

By Meganathan
|

இஸ்ரோ : இந்திய விண்வெளி ஆய்வு மையம் ஆகும். விண்வெளி சார்ந்த ஆய்வுகளில் மட்டுமின்றி அவைகளை வெற்றிகரமாக செய்து முடித்து வெளிநாட்டினரை வாய்ப்பிளக்க செய்வதில் பெயர் பெற்றது இஸ்ரோ. விண்வெளியில் இதுவரை இஸ்ரோ செய்திருக்கும் ஆய்வுகளில் இந்தியாவிற்கு என தனி அங்கீகாரம் எப்பவும் உண்டு.

அந்த வகையில் இந்தியாவின் இஸ்ரோ அசால்ட்டாக செய்து முடித்த சில விண்வெளி சார்ந்த திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்..

1

1

இஸ்ரோ சார்பில் செவ்வாய் கோளுக்கு வெற்றிகரமாக செலுத்தபட்ட ஆளில்லா விண்கலம் தான் மங்கள்யான் ஆகும்.

2

2

இந்திய விண்வெளி ஆய்வு மையம் 2013 ஆம் ஆண்டு நவம்பர் 5 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. இந்நிண்கலம் 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதி செவ்வாய் கோளின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக இணைந்தது.

3

3

இந்த திட்டத்தின் மூலம் முதல் முயற்சியிலேயே செவ்வாய்க்கு செயற்கைக்கோள் அனுப்பிய உலகின் முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.

4

4

பி.எஸ்.எல்.வி என்பது போலார் சாட்டிலைட் லான்ச் வெயிக்கல் அதாவது செயற்கைக்கோள்களை ஏவும் ஊர்தி எனலாம்.

5

5

பிரிட்டனைச் சேர்ந்த "டிஎம்சி.3-1", "டிஎம்சி.3-2", "டிஎம்சி.3-3" என மொத்தம் 5 செயற்கைகோள்களை சுமந்து கொண்டு பி.எஸ்.எல்வி,சி-28 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் சீறி பாய்ந்தது.

6

6

சுமார் 1440 கிலோ எடை கொண்ட வெளிநாட்டு செயற்கைகோள்களை இஸ்ரோ அனுப்பியது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

7

7

2008 ஆம் ஆண்டு இந்திய விண்வெளி மையத்தின் மூலம் விண்வெளிக்கு செலுத்தப்பட்ட ஆளில்லா நிலவு பயணம் தான் சந்திராயன் திட்டம் ஆகும்.

8

8

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் துருவ செயற்கைக்கோள் ஏவும் வாகனமான பி.எஸ்.எல்.வி.சி சந்திராயன் கலத்தை புவி சுற்றுப்பாதையில் செலுத்தும். அதன் பின் விண்கலத்தில் உள்ள முன்னுந்து அமைப்பினை கொண்டு நிலவைச்சுற்றிய 100 கி.மீ துருவச் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும்.

9

9

நிலவை ஆய்வு செய்ய இருக்கும் சந்திராயன் 2 செயற்கைக்கோள் 2017 ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட இருப்பதாக எதிர்பார்க்கப்படுகின்றது.

10

10

விண்வெளி வீரர்களை ஏறஅற செல்லும் திறன் கொண்ட ஜிஎஸ்எல்வி ராக்கெட் 2014 ஆம் ஆண்டு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

11

11

மறுபடியும் பயன்படுத்தக்கூடிய திறன் கொண்ட ஏவுவாகனத்தை தயாரிக்கவும் இஸ்ரோ திட்டமிட்டு வருகின்றது.

12

12

இதோடு இஸ்ரோ ஜிஎஸ்எல்வி மார்க்4 ஏவுகணையை தயாரிக்கவும் திட்டமிட்டு வருகின்றது. இதன் மூலம் சுமார் 6.5டன் வரை கொண்டு செல்ல முடியும். ஜிஎஸ்எல்வி மார்க் 3 மூலம் 4 டன் வரை மட்டுமே சுமக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

13

13

இந்திய பகுத்திக்கான இடஞ்சுட்டு செயற்கைக்கோள் அமைப்பான ஐஆர்என்எஸ்எஸ் திட்டமானது ஏழு செயற்கைக்கோள்களை புவி ஒத்திணைவு வட்டப்பாதையில் செலுத்தும் திட்டம் ஆகும்.

14

14

புவி சார்ந்த ஊடுருவல், வான்வழி மற்றும் கடல் ஊடுருவல், பேரழிவு மேலாண்மை, வாகன கண்கானிப்பு மற்றும் கப்பற்படை மேலாண்மை, மொபைல் போன்களுடன் ஒருங்கிணைப்பு என பல்வேறு பணிகளை இந்தியாவின் புவியிடங்காட்டி அமைப்பு வழங்கும்.

15

15

இஸ்ரோ அதிகாரிகள் அளித்த தகவலின் படி 12 ஆண்டு கால ஆயுள் கொண்ட இந்த ஏழு செயற்கைகோள்களின் மொத்த செலவு ரூ.1,420 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

16

16

சத்தமில்லாது சாதிக்கும் இஸ்ரோ : கூடிக்கொண்டே போகும் கூட்டணி..!

'கிண்டலடித்த' நாடுகளுக்கு, இதோ இந்தியாவின் 'பதிலடி'..!!

17

17

இது போன்ற தொழில்நுட்பம் மற்றும் உலகின் வினோத தகவல்களை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
ISRO's Five achievements that India is Proud of Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X