ஒன்று கூடும் இஸ்ரோ - நாசா, எதற்கு என்று தெரியுமா.?!

|

இஸ்ரோ - நாசா என்றதும், மறுபடியும் ''ஸ்பேஸ் வார்' (Space War) அதாவது, விண்வெளி வளர்ச்சி யுத்தம் நிகழ்வு ஏதேனும் நடக்கிறதா என்று நினைக்க ஆரம்பித்து விட வேண்டாம். ஒரு நல்ல ஆய்விற்காக இஸ்ரோவும், நாசாவும் கைகோர்த்து செயல்பட உள்ளன.

இந்தியாவின் இஸ்ரோ, அமெரிக்காவின் நாசா மட்டுமின்றி பிரான்ஸின் சிஎன்இஎஸ் (CNES), ஜப்பானின் ஜாக்ஷா (JAXA) மற்றும் பல உலக நாடுகளின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களும் கைகோர்த்து செயல்பட உள்ளன..!

#1

#1

விண்வெளி பயணங்களில் ஈடுபட கூடிய உலக நாடுகளின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் ஒன்றிணைந்து பருவ நிலை மாற்றம் சார்ந்த ஆய்வு ஒன்றிற்காக செயற்கைகோள் ஒன்றை பகிர்ந்து கொள்ள இருக்கிறது.

#2

#2

இந்த செயற்கைகோள் ஆனது தரவு ஆய்வு மற்றும் பைங்குடில் வாயுக்கள் எப்படியெல்லாம் காலநிலை மாற்றத்தை தூண்டுகிறது போன்றவைகளை கண்காணிக்க இருக்கிறது.

#3

#3

கடந்த வெள்ளிகிழமை அன்று டெல்லியில் இஸ்ரோ மற்றும் பிரான்ஸின் சிஎன்இஎஸ் சார்பில் நடைபெற்ற கலந்துரையாடலில் பூமியை செயற்கைக்கோள்கள் வழியாக கவனித்துக் கொண்டிருக்கும் 60 நாடுகள் இந்த கூட்டு ஆய்விற்கு ஒப்புக்கொண்டுள்ளன.

#4

#4

முதல் முறையாக, சேகரிக்கப்பட இருக்கும் தரவுகள் - ஆய்வு மற்றும் மனித இனம் தூண்டும் மனித இனம் தூண்டும் பைங்குடில் வாயுக்கள் மற்றும் அதனால் ஏற்படும் சூழல் விளைவுகள் ஆகியவைகளை ஆராய - அனைவராலும் பகிர்ந்துகொள்ளப்பட இருக்கிறது.

#5

#5

பூமி கிரகத்தை சுற்றி கொண்டிருக்கும் தங்களின் செயற்கைகோளை கண்காணிக்கும் வகையில் புதுதில்லியில் ஒரு சுதந்திரமான மற்றும் சர்வதேச அமைப்பு ஒன்றை நிறுவவும் உலகின் விண்வெளி முகவர்கள் முடிவு செய்துள்ளனர்.

#6

#6

கடந்த டிசம்பர் மாதம் பாரிசில் நடைபெற்ற சிஒபி21 (COP21)காலநிலை மாநாட்டின் அறிக்கைதான், இந்த கூட்டு முயற்சிக்கு வழிவகுத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

#7

#7

உடன் செயற்கைக்கோள்கள் இல்லாமல், உலக வெப்பமயமாதலின் உண்மையை நம்மால் கண்டறியவே முடியாது என்றும், காலநிலை பற்றிய ஆய்வில் ஈடுபடும் 50 காலநிலை மாற்ற குறிகாட்டிகளில் 26 மட்டுமே விண்வெளியில் இருந்து செயல் படுகின்றன என்றும் காலநிலை மாநாட்டில் விளக்கம் அளிக்கப்பட்டது.

#8

#8

அந்த 26 குறிகாட்டிகள், கடல் மட்டங்கள், கடல் பனி, வளிமண்டலத்தில் பல்வேறு அடுக்குகளை முழுவதும் உள்ள பைங்குடில் வாயுக்களின் செறிவினை ஆகிய ஆய்வுகளின் கீழ் இயங்குகிறது.

#9

#9

தற்போது நிகழ்த்தப்பட இருக்கும் ஆய்வு தான் இதுவரையிலாக நடத்தப்பட்ட காலநிலை மாற்ற ஆய்வுகளிலேயே மிகப்பெரிய அளவிலான தரவுகளை சேகரிக்கபோகும் ஆய்வாகும்..!

#10

#10

இனி சியாச்சினில் ஒரு உயிர் கூட பலியாகாது : களத்தில் குதிக்கும் இஸ்ரோ..!


ஆதாரங்கள் : 1975-லேயே எதிர்கால விண்வெளி காலனிகளை திட்டமிட்ட நாசா..!

#11

#11

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
ISRO, NASA and other space agencies of other nations to fight climate change together. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X