ஐஎஸ்எஸ்-ல் இருந்து பூமி நோக்கி செலுத்தப்பட்டது ஏவுகணையா..?

Written By:

மூன்றாம் உலக யுத்தம் மூண்டால், யார் விண்வெளியில் பலம் வாய்ந்தவர்களாக திகழ்கிறார்களோ அவர்கள் தான் சக்தி வாய்ந்தவர்களாக முன் நிற்பர். அதை மனதிற்கொண்டு சூப்பர் பவர் நாடுகளும், வளரும் நாடுகளும் செய்லபட்டு கொண்டிருந்தாலும் வெளிப்படையாக யாரும் அதை ஒற்றுக்கொள்ள மாட்டார்கள்.

சமீபத்தில், யாரைவிடவும் விண்வெளியை அதிகம் கண்காணிக்கும் ஆராயும் ஏலியன் தேடலாளர்கள் மற்றும் சதியாலோசனை கோட்பாட்டாளர்களின் கண்களில் ஒரு சர்ச்சைக்குரிய விடயம் சிக்கியுள்ளது..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

#1

இந்நிலையில் சர்வதேச விண்வெளி நிலையங்களில் ரகசிய ஆயுதங்கள் வைப்பில் உள்ளது என்றும் அவைகள் தேவையான தருணங்களில் பூமியை நோக்கி செலுத்தப்படுகிறது என்றும் சதியாலோசனை கோட்பாட்டாளர்கள் மற்றும் ஏலியன் தேடலாளர்கள் கூறியுள்ளனர்..!

#2

மேலும், அப்படியான ஒரு ஏவுகணை விண்வெளி நிலையத்தில் இருந்து செலுத்தப்பட்டது பதிவாகியுள்ளது என்றும் ஆதாரங்கள் வெளியாகியுள்ளன..!

#3

நாசாவின் லைவ் பீட்-ல் பதிவாகியுள்ள அந்த காட்சியில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து வெளியேற்றப்படுவது ரகசியமான ஏவுகணை போலவும், சுவாரசியமான பறக்கும் தட்டு போலவும் தோன்றுகிறது.

#4

மறுபக்கம், பதிவாகியுள்ள உருவமானது கிரகத்தின் சுற்றுப்பாதைக்குள் செலுத்தப்படும் க்யூப்சாட்ஸ் (Cubesats) போன்ற சிறியவகை செயற்கைக்கோள்களாக இருக்கலாம் என்ற விளக்கமும் கூறப்பட்டுள்ளது.

#5

மே 18-ஆம் தேதி, நாசாவின் விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து 17 க்யூப் சாட்ஸ்களை செலுத்தியுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகினாலும் சந்தேகம் நீடித்தது.

#6

அதாவது சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து வெளியிடப்படும் க்யூப்சாட்ஸ்'கள் 4 இன்ச் அளவில்., 1.33 கிலோ கிராம் எடைகுள்ளாக தான் இருக்கும்.

#7

ஆனால் நாசாவின் லைவ் பீட்-ல் பதிவாகியுள்ள உருவத்தை பார்க்கும் போது அது ஒரு க்யூப்சாட் லான்ச் போல் தெரியவில்லை, அது ஒரு ஏவுகணை லான்ச் அல்லது சர்வதேச விண்வெளி நிலையத்தை கடந்து செல்லும் அடையாளம் காணப்படாத பறக்கும் பொருள் போல் தெரிகிறது என்று சதியாலோசனை கோட்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

#8

நெருப்பில்லாமல் புகையாது, சர்வதேச விண்வெளி நிலையத்தை சுற்றி நிகழும் ஏலியன் நடமாட்டங்களை நாசா தொடர்ந்து மறைத்துக்கொண்டே தான் இருக்கிறது சதியாலோசனை கோட்பாட்டாளர்கள் மற்றும் ஏலியன் தேடலாளர்கள் நாசா மீது குற்றம் சாட்டுகின்றனர்.

#9

மறுபக்கம், சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து செலுத்தப்பட்டது நிச்சயமாக ஒரு ஏவுகணை தான் என்றால் கூடிய விரைவில் பூமியின் எதோ ஒரு பகுதியில் அது மோதும் என்றும் சதியாலோசனை கோட்பாட்டாளர்கள் எச்சரித்துள்ளனர்.

#10

சர்வதேச விண்வெளி நிலையமானது பூமியின் மேற்பரப்பில் இருந்து சுமார் 250 மைல் அதாவது 400 கிலோமீட்டர்கள் உயரத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

#12

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Is there a secret weapon on board the ISS..? Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்