சூரியனில் ஓட்டை, வெளிப்பட்ட கரும்புள்ளி, பூமி மீது மண்ணியல் புயல்..?

Written By:

சூரிய மண்டலத்தின் ஒட்டுமொத்த ஆற்றலுக்கும் ஆதாரமான - மஞ்சள் குறுமீன் வகையை சேர்ந்த - விண்மீன் தான், சூரியன். பூமி கிரகம் உட்பட பல கோள்களும், கோடிக்கணக்கான விண்கற்களும், வால்வெள்ளிகளும், அண்டத்தூசிகளும் பல்வேறு கோளப்பாதைகளில் சூரியனை சுற்றி வருகின்றன, ஒட்டுமொத்த சூரிய மண்டலத்தின் எடையில் 98.6 சதவிகிதத்தைக் சூரியன் மட்டுமே கொண்டுள்ளது..!

நொடிக்கு நொடி ஆராயப்பட்டுக்கொண்டே இருக்கும், ஆற்றலின் ஒட்டுமொத்த ஆதாரமாய் திகழும் சூரியன், அவ்வப்போது, பூமி கிரதிற்கு விளைவுகளையும், பூமி கிரகவாசிகளுக்கு பீதியையும் கிளப்புவது உண்டு, அப்படியான ஒரு சமீபத்திய பீதி தான் - சூரிய துளை !

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

#1

சூரியனில் ஓட்டை ஒன்று இருப்பதாகவும், அது நமது நட்சத்திரத்திர வளிமண்டலத்தில் ஒரு பெரும் கரும்புள்ளியாக வெளிப்பட்டது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

#2

சூரியனின் மையப்பகுதி அருகே ஒரு பெரிய குறுக்கு துளை (coronal hole) காணப்பட்டுள்ளது.

#3

உடன் அந்த சூரிய துளையானது, பூமி மீதான ஒரு மண்ணியல் புயலுக்கு ( geomagnetic storm) வழிவகுக்கலாம் என்றும் பீதிகள் கிளம்பியுள்ளன.

#4

சூரியனில் வெளிப்பட்ட இந்த துளையானது, நாசாவின் சூரிய டைனமிக்ஸ் ஆய்வகத்தினால் (Nasa's Solar Dynamics Observatory) இம்மாதம் (மே 17-19 , 2016) பதிவு செய்யப்பட்டுள்ளது.

#5

வழக்கமான சூரியனின் மாபெரும் கரும்புள்ளிக்கு மாறாக சூரியனில் சூடான சூழ்நிலையை கொண்ட ஒளி வளைய இடைவெளி வெளியாவது தெளிவாக பதிவாகியுள்ளது.

#6

இந்த துளை மூலம் சூரியானை சுற்றி உள்ள பிளாஸ்மாக்கள் விண்வெளிக்குள் நுழைவதற்கு பதிலாக மீண்டும் சூரிய மேற்பரப்பின் மீதே பின்வாங்கும்.

#7

அதன் விளைவாக, சூரிய காற்றானது (Solar storm) மிக அதிவேகத்தில் சூரிய பொருட்களை (Solat materials) வெளியேற்றும்.

#8

அந்த மிக அதிவேக சூரிய காற்றானது, பூமி கிரகத்தின் காந்தப்புலத்தை (magnetic field) தொடர்பு கொள்ளும் போது சாத்தியமான மண்ணியல் புயல் தூண்டப்படலாம்.

#9

மண்ணியல் புயல் என்பது - சூரிய காற்றின் அதிர்ச்சி அலையோ அல்லது, காந்தபுலம் கொண்ட சூரிய மேகமோ பூமியின் காந்தப்புலத்தை தொடர்பு கொள்ளும்போது ஏற்படும் ஒரு தற்காலிகமான இடையூறாகும்.

#10

சூரிய புயல் தாக்கினால் இதுதான் உலகின் கதி என்ன என்பதை பற்றி படிக்க இங்கே கிளிக் செய்யவும்..!

#12

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Is there a hole in the SUN? Enormous black spot detected in our star's atmosphere. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்