உலகின் உண்மையான 'ஐயன் மேன்' (இரும்பு மனிதன்) : எலான் மஸ்க்.!!

Written By:

எலான் மஸ்க் ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் ஓபன் ஏஐ, சிப்2, பே பால் போன்ற நிறுவனங்களின் இணை நிறுவனர் போன்று பல்வேறு பதவிகளை வகிக்கின்றார். இவர் தென் ஆப்பிரிக்காவில் பிறந்த கனேடிய அமெரிக்க தொழிலதிபர், கண்டுபிடிப்பாளர் மற்றும் முதலீட்டாளர் ஆவார்.

ஹாலிவுட் திரைப்படமான ஐயன் மேன் கதாநாயகன் போன்று உலகம் வியக்கும் கண்டுபிடிப்புகளை உருவாக்குவதில் பெயர் பெற்ற எலான் மஸ்க் குறித்த சில வியப்பூட்டும் தகவல்கள் ஸ்லைடர்களில்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

01

சிறு வயது முதலே கோடிங் செய்வதில் ஆர்வம் கொண்ட எலான் மஸ்க் தனது முதல் கேமினை 12 வயதில் கோடிங் செய்து முடித்ததோடு அதனினை $500 இந்திய மதிப்பில் ரூ.33,894.98க்கு விற்பனை செய்தார்.

02

1995 ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார், இருப்பினும் இரண்டாவது நாளே கல்லூரியை விட்டு வெளியேறிய எலான் மஸ்க் சிப்2 கார்பரேஷன் என்ற பெயரில் தனது சொந்த நிறுவனத்தைத் துவங்கினார்.

03

தனது 28 வயதில் சிப் 2 கார்பரேஷன் நிறுவனத்தை விற்பனை செய்து கோடீசுவரர் ஆனார் எலான் மஸ்க்.

04

ஐயன் மேன் 2 படப்பிடிப்புக்காக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பயன்படுத்தப்பட்டதோடு அதே திரைப்படத்தில் எலான் காட்சியளித்தார். ஐயன் மேன் திரைப்படம் உருவாக அகத் தூண்டுதலாக எலான் மஸ்க் இருந்ததாக இத்திரைப்படத்தின் இயக்குனர் ஜான் ஃபேவரியு தெரிவித்துள்ளார்.

05

வேலை செய்வதில் அதிக ஆர்வம் கொண்ட எலான் மஸ்க் ஒரு வாரத்திற்கு சுமார் 100 மணி நேரம் பணியாற்றி வருகின்றார். தன் நேரத்தினை ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா மோட்டார் போன்ற நிறுவனங்களுக்கு ஒதுக்கி வேலை செய்து வருகின்றார்.

06

மனிதர்களைச் செவ்வாய் கிரகத்திற்கு அழைத்துச் செல்ல ஸ்பேஸ் எக்ஸ் உதவியாக இருக்க வேண்டும் என்பதைத் தனது நீண்ட நாள் லட்சியமாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

07

தனது கல்லூரி நாட்களில் உணவிற்காகச் சிறிய தொகையை மட்டும் செலவு செய்யும் பழக்கம் கொண்ட எலான் மஸ்க் தான் எடுத்துக் கொள்ளும் நூடுல்ஸ் உடன் சிவப்பு மிளகு தூள் சேர்த்துக் கொள்வதை தன் உடல் ஆரோக்கியத்தின் ரகசியமாகக் கருதுகின்றார்.

08

1977 ஆம் ஆண்டு வெளியான "The Spy Who Loved Me" என்ற ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட மகிழுந்து ஒன்றை எலான் மஸ்க் ஏலத்தில் வாங்கினார். இதோடு அந்த மகிழுந்தினை டெஸ்லா எலக்ட்ரிக் பவர்டிரெயின் மூலம் இயங்கும் படி மாற்றியமைக்க இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

09

பூமியில் இருந்து ஒரு முறை சர்வதேச விண்வெளி மையத்திற்குச் செல்லும் செலவை $1 பில்லியினில் இருந்து சுமார் $60 மில்லியன் வரை எலான் மஸ்க் குறைத்திருக்கின்றார்.

10

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலமானது பூமியின் சுற்றுப்பாதையைக் கடந்து சர்வதேச விண்வெளி மையத்தில் இணைந்த முதல் வணிக ரீதியான விண்கலம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

11

டெஸ்லா மோட்டார் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் பல தோல்விகளை கடந்து வெற்றி பெற்றுள்ளன. டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் மின்சார கார் தயாரிப்பு பணிகளில் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தது, ஸ்பேஸ் எக்ஸ் விண்கலங்கள் மூன்று முறை தோல்வியை சந்தித்து அதன் பின் நான்காவது முயற்சியில் தான் வெற்றி பெற்றது.

12

அதிகளவு பணம் கொண்ட தொழில் அதிபர்கள் தங்களது அறிவியல் கனவுகளை நிஜமாக்க முயற்சி செய்வதை குறிக்கும் த்ரில்லியனேர் என எலான் மஸ்க் குறிப்பிடப்படுகின்றார்.

13

உலக வெப்பமயமாதலை தடுக்கும் பணிகளில் எலான் மஸ்க் தொடர்ந்து பணியாற்றி வருகின்றார். இதன் அடித்தளமாகவே டெஸ்லா மோட்டார்ஸ் மற்றும் சோலார்சிட்டி போன்ற நிறுவனங்களை அவர் துவங்கினார்.

14

பெரும் செல்வந்தர்கள் தங்களது அதிப்படியான சொத்துக்களை அறப்பணிகள் சார்ந்த முயற்சிகளுக்கு வழங்கும் கிவிங் பிளெட்ஜ் திட்டத்தில் எலான் மஸ்க் கையெழுத்திட்டுள்ளார். இதே திட்டத்தில் பில் கேட்ஸ், சர் ரிச்சார்டு பிரான்சன், வாரென் பஃப்பெட், மார்க் சூக்கர்பர்க் போன்றோரும் கையெழுத்திட்டுள்ளனர்.

15

இ ஸ்கோயர் (Esquire) பத்திரிகையின் படி 21ஆம் நூற்றாண்டின் மிகவும் செல்வாக்கு மிகுந்த 75 பேர் கொண்ட பட்டியலில் எலான் மஸ்க் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

16

2013 ஆம் ஆண்டு ஃபார்ச்யூன் நிறுவனத்தின் மிகச்சிறந்த தொழில் அதிபராக எலான் மஸ்க் என்ற தேர்வு செய்யப்பட்டார்.

17

2015 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதி தி சிம்ப்சன்ஸ் என்ற நிகழ்ச்சியில் எலான் எஸ்க் கலந்து கொண்டிருந்தார்.

18

தனியார் நிறுவனமாக இருந்து விண்வெளிக்குச் சென்ற ராக்கெட் தயாரித்ததால், தி பெடரபேஷன் ஏரோநாடிக் இன்டர்நேஷனல் 2010 ஆம் ஆண்டு எலான் மஸ்கிற்க்கு தங்கப் பதக்கம் வழங்கியது. இதே விருது நீல் ஆம்ஸ்ட்ராங் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

19

உலகளவில் அதிவேகமாக மக்களைப் பயணிக்க செய்யும் எலான் மஸ்க் திட்டமான ஹைப்பர்லூப் இந்த ஆண்டின் துவக்கத்தில் வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டது.

20

ஐ மேன் திரைப்படத்தில் எலான் மஸ்க் தோன்றிய காட்சியின் வீடியோ.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
Interesting Facts about Elon Musk Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்