இனி சூப்பர் பவர் நாடுகள், இந்தியாவை கண்டு அச்சம் கொள்ளட்டும்..!

Written By:

அமைதியான நாடு என்பதால் எந்த விதமான வீண் வம்புக்கும், உலக நாட்டு பஞ்சாயத்துகளுக்கும் செல்லாமல் இருக்கலாம், அதற்காக எந்த விதத்திலும் நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தாமல், எந்த விதமான அதிநவீன ஆயுதங்களையும் தயாரிக்காமல், பரிசோதிக்காமல் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை..!

ஏனெனில், பஞ்சம் நிறைந்த உலக நாடுகளில் கூட ஒருபக்கம் ஆயுத உற்பத்தி என்பது சதா நடந்துக்கொண்டே தான் இருக்கிறது. அதற்காக வாள் செய்பவன் எல்லாம் சண்டைக்காரன் என்றாகி விடாது, போராளிகளுக்கும் வாள் தேவைப்படுகிறது தான்..!

அமைதி என்ற பெயரில் நம் நாட்டு பாதுக்கப்பில் ஓட்டை விழ விட்டால், சூப்பர் பவர் நிறைந்த நாடுகள் நம் கோட்டையை பிடித்து விடுவார்கள். ஆனால், இந்தியாவை பொருத்த வரைக்கும் - அது கனவிலும் நடக்காத காரியம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

#1

இந்திய பாதுக்கப்பை மிகவும் பல படுத்தும் நோக்கத்தில் ஒரு முழு நீள, பல அடுக்கு பல்லிஸ்டிக் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு (Ballistic Missile Defence system) தயார் செய்ய வேண்டும் என்ற முயற்சியில் இந்தியா வெற்றி அடைந்துள்ளது.

#2

சமீபத்தில், முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்தியாவின் சூப்பர்சோனிக் ரக ஏவுகணை ( supersonic interceptor missile) சோதனை ஒன்றை வெற்றிகரமாக நிகழ்த்தி முடிக்கப்பெற்றுள்ளது.

#3

இந்தியாவின் இந்த ஏவுகணை, விரோதமாக உள்வரும் எந்த விதமான கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையையும் (incoming hostile ballistic missile) அழிக்கும் திறன் கொண்டது.

#4

இந்த சோதனையானது ஒடிசா கடலோரப் பகுதியின் டெஸ்ட் ரேன்ஜ்-ல் நிகழ்த்தப்பட்டது.

#5

பல்வேறு ப்ளைட் மோட்களில் (various parameters of the interceptor in flight mode) இருந்து தாக்க வரும் ஏவுகணைக்கு ஏற்ப இந்த ஏவுகணை பரிசோதிக்கப் பட்டு வெற்றி பெற்றுள்ளது.

#6

சூப்பர்சோனிக் ஏவுகணையானது, வங்காள விரிகுடா உள்ளே இந்திய கப்பலில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட பிருத்வி ரக ஏவுகணை (version of Prithvi) ஒன்றை இலக்காக எதிர் கொண்டது.

#7

மேற்கண்ட தகவல்களை வழங்கியது பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு (Defence Research Development Organisation) என்பது குறிப்பிடத்தக்கது.

#8

பரிசோதனை செய்யப்பட்ட ஏவுகணையில் எதிர்வரும் விரோத ஏவுகணை மீது தானியங்கியாக தாக்குதல் நடத்துதல், இடைமறிப்பு, சுயாதீன கண்காணிப்பு, அதிநவீன ரேடார்கள் பாதுகாப்பான தரவு இணைப்பு போன்ற திறன்களும் உள்ளடக்கம் என்பது குறிபிடத்தக்கது.

#9

அமெரிக்காவை 'மீண்டும் மீண்டும்' பல்லிஸ்டிக் ஏவுகணை மூலம் வடகொரியா கலங்கடிகிறது என்பதை பற்றி படிக்க இங்கே கிளிக் செய்யவும்..!

#11

மேலும் இதுபோன்ற அறிவியல் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
India successfully test-fires supersonic interceptor missile. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்