அப்துல் கலாம் தீவில் இருந்து கிளம்பிய எதிரி நாடுகளின் வில்லன்..!

|

பிற உலக நாடுகள் தங்கள் பாதுகாப்பின் நலம் கருதி பல்லிஸ்டிக் மிசைல் (கண்டம் விட்டு கண்டம் தாண்டி தாக்கும் ஏவுகணை) மற்றும் ஆன்ட்டி பல்லிஸ்டிக் மிசைல் (கண்டம் விட்டு கண்டம் தாண்டி தாக்க வரும் ஏவுகணையை அழிக்கும் ஏவுகணை) ஆகியவைகளின் வளர்ச்சியில் அசுரத்தனமாக வளர்ந்து கொண்டே போக, இந்தியா ஒரு முழு நீள மற்றும் பல அடுக்கு பாலிஸ்டிக் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு வேண்டும் என்ற முயற்சியில் குதித்தது.

அந்த முயற்சிக்கு கிடைத்த வெற்றி தான் நேற்று விண்ணில் சீறிப் பாய்ந்த இந்தியாவின் அதிநவீன மற்றும் மேம்பட்ட ரக இடைமறிப்பு ஏவுகணை (advanced interceptor missile )..!

#1

#1

வெற்றிகரமாக பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்ட இது முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே உருவாக்கம் பெற்ற சூப்பர்சோனிக் ஏவுகணையாகும்.

#2

#2

மேலும் இந்தியாவின் உள்வரும் எந்த விதமான எதிரி நாடுகளின் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையையும் அழிக்கும் திறன் கொண்டது.

#3

#3

உடன் நிகழ்த்தப்பட்ட விமான முறை இடைமறிப்பு போன்ற பல்வேறு சோதனைகளும் வெற்றி அடைந்துள்ளதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு (Defence Research Development Organisation) தகவல் தெரிவித்துள்ளது.

#4

#4

பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட இடைமறிப்பு ஏவுகணையானது வங்காள விரிகுடாவில் நங்கூரமிடப்பட்டு இருக்கும் இந்திய கடற்படையின் ஒரு கப்பலில் இருந்து ஏவப்பட்ட ப்ரிதீவ் ஏவுகணையின் ஒரு பதிப்புக்கு எதிராக ஏவப்பட்டு சோதனை செய்யப்பட்டது.

#5

#5

உள்வரும் இலக்கு ஏவுகணையானது 11.15 மணிக்கு ஏவப்பட்டது, அதை ரேடார் மூலம் கண்டறிந்து கண்காணித்து அப்துல் கலாம் தீவில் (Wheeler Island) இருந்து கிளம்பிய இடைமறிப்பு ஏவுகணை நடு வானில், எண்டோ- வளிமண்டல உயரத்தில் தாக்கி அழித்தது.

#6

#6

இந்த இடைமறிப்பு ஏவுகணையின் கில் எப்பெக்ட் (Kill effect) ஆனது பல கண்காணிப்பு ஆதாரங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட தரவு மூல பகுப்பாய்வு செய்யப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

#7

#7

இந்த இடைமறிப்பு ஏவுகணை - 7.5 மீட்டர் நீளமுள்ள ஒற்றை நிலை திட ராக்கெட் மூலம் வழிநடத்தப்படும் ஒரு ஊடுருவல் முறை பொருத்தப்பட்ட ஏவுகணை என்பது குறிப்பிடத்தக்கது.

#8

#8

மேலும் இது ஒரு ஹை-டெக் கணினி மற்றும் மின்னியக்க ஏவி (hi-tech computer and an electro-mechanical activator) மூலம் இயக்கப்பட்டது.

#9

#9

மேலும் இந்த ஏவுகணையில் சொந்தமான மொபைல் லான்சர், சுயாதீன மற்றும் இயற்கைத் தன்மை கொண்ட கண்காணிப்பு திறன், அதிநவீன ரேடார்கள் மற்றும் பாதுகாப்பான தரவு இணைப்பு போன்றவைகளும் உள்ளடக்கம்..!

#10

#10

ஆள் பார்த்து மோதனும், ஆழம் பார்த்து கால் விடனும். இல்லனா..?


மூன்றாம் உலக போர் : கடைசி நொடியில் உங்களுக்கு வரும் 'அந்த' மெசேஜ்..??

#11

#11

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
India successfully test-fires advanced interceptor missile. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X