சீறும் இந்தியா, இத்தனை வேகமா..!? - வாய்பிளக்கும் ஜி7 நாடுகள்..!

Written By:

சமீபத்தில் இந்தியா தனது நாட்டின் பாதுகாப்பை மிகவும் பலப்படுத்தும் நோக்கத்தில் ஒரு முழு நீள, பல-அடுக்கு பல்லிஸ்டிக் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை (Ballistic Missile Defence system) உருவாக்கும் நோக்கத்தில் வெற்றி அடைந்ததை நாம் அறிவோம் - அந்த வெற்றியானது அதிநவீன இந்திய ஏவுகணை தொழில்நுட்பத்தின் ஒரு சிறு பகுதி மட்டுமே.

தற்போது இந்தியா உலக நாடுகளுக்கு மத்தியில் தன்னுடைய அடுத்த கட்டத்திற்கு செல்கிறது..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

#1

மிசைல் டெக்னாலஜி கன்ட்ரோல் ரீஜீம் (Missile Technology Control Regime - MTCR) அதாவது, ஏவுகணை தொழில்நுட்ப கட்டுப்பாடு அமைப்பு என்பது 34 நாடுகளின் முறைசாரா மற்றும் தன்னார்வ கூட்டு அமைப்பாகும்.

#2

குறைந்தபட்சம் 300 கி.மீ தொலைவிற்கு தாக்குதல் திறன் கொண்ட உடன் 500 கிலோ பேலோடு ஏற்றி செல்லும் திறன் கொண்ட ஏவுகணை மற்றும் ஆளில்லாத வான்வழி வாகனங்களின் பெருக்கத்தை தடுப்பதே இந்த அமைப்பின் முக்கிய வேலையாகும்.

#3

ஏவுகணை தொழில்நுட்ப கட்டுப்பாடு அமைப்பானது ஏப்ரல் 1987-ல் ஜி 7 நாடுகளின் (கனடா , பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன், மற்றும் அமெரிக்கா) மூலம் நிறுவப்பட்டது.

#4

தற்போது இந்த அமைப்பில் மிக விரைவில் இந்தியா இணைந்து கொள்ள இருக்கிறது. இந்தியாவின் அதிவிரைவான ஏவுகணை தொழில்நுட்ப வளர்ச்சியை கண்டு ஜி7 நாடுகள் வியப்பில் ஆழ்ந்துள்ளன.

#5

இந்த அமைப்பில் இணைந்து கொள்வதின் மூலமாக இந்தியாவினால் அமெரிக்காவிடம் இருந்து ப்ரடேட்டர் டிரோன்களை வாங்கவும், நட்பு நாடுகளுக்கு உயர் தொழில்நுட்ப ஏவுகணைகளை ஏற்றுமதி செய்யவும் முடியும்.

#6

திருப்புமுனை ஏற்படும் வகையில் சமீபத்தில், கண்டம் விட்டு கண்டம் தாண்டி தாக்கி அழிக்கும் பல்லிஸ்டிக் ஏவுகணை பெருக்கத்தை தடுக்கும் 'ஹாக் கோட் ஆப் காண்டாக்ட்' திட்டத்தை இந்தியா அறிவித்திருந்ததே இந்த முன்னேற்றத்திற்கு காரணமாகும்.

#7

மிசைல் டெக்னாலஜி கன்ட்ரோல் அமைப்பில் இணைந்து கொள்ள கடந்த ஆண்டே இந்தியா விண்ணப்பித்து இருந்தது என்பதும் அமைப்பின் நாடுகள் சில தங்களின் வலுவான எதிர்ப்பை அளித்ததின் விளைவாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

#8

கடந்த 2008-ஆம் ஆண்டில் இருந்து இந்தியா, ஏவுகணை தொழில்நுட்ப கட்டுப்பாடு அமைப்பின் ஒருதலைபட்சமான ஆதரவாளராக திகழ்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

#9

தற்போது, அமெரிக்கா மற்றும் ஒபாமா நிர்வாகம் இந்தியாவை ஏவுகணை தொழில்நுட்ப கட்டுப்பாடு அமைப்பின் உறுப்பினராக்க கடுமையான மற்றும் முழுமையான ஆதரவை அளித்துள்ளது.

#10

ஏவுகணை தொழில்நுட்ப கட்டுப்பாடு அமைப்பின் அறிவிப்பின்படி, அமெரிக்க வேட்டையாடி பறக்கும் ட்ரோன்களை இந்திய ராணுவத்திற்கு வழங்கும் ஆலோசனையில் இந்தியாவும் அமெரிக்காவும் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.

#11

ப்ரடேட்டர் ட்ரோன்கள், அமெரிக்காவின் சிஐஏ-வின் விருப்பமான ஆயுதம் என்பதும், சமீபத்தில் இதை பயன்படுத்தி ஆப்கானிஸ்தான் தலிபான் தலைவரை கொன்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

#13

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
India likely to enter missile technology control regime this week. Read more about this in Tamil Gizbot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்