ஆண்களையும் பெண்களையும் வித்தியாசமாக பாதிக்கும் விண்வெளி, எப்படி..?

Written By:

விண்வெளி பயணத்தில் ஈடுபடும் ஆண்கள் மற்றும் பெண்கள் சந்திக்கும் உளவியல், நடத்தை பிரச்சனைகள் போன்றவைகளுக்கு இடையே எந்த விதமான வேறுபாடும் இல்லை என்பது ஒருபக்கம் இருக்க, ஸீரோ கிராவிட்டியானது மனித உடல்களில் ஆண்களுக்கு ஒரு வகையான பாதிப்பையும் பெண்களுக்கு ஒரு வகையான பாதிப்பையும் ஏற்படுத்துகிறது என்பதை நாசா கண்டறிந்துள்ளது..!

நாசாவின் தரவுகளின் அடிப்படையில், நாசா நீண்ட கால விண்வெளிப்பயண அடிப்படையில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையிலேயேயான சாத்தியமான விளைவுகள் வெளியிடப்பட்டுள்ளது..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

மூன்று வகை :

கீழ் வரும் பாதிப்புகள் ஆனது விண்வெளியில் கவனிக்கப்பட்ட பாதிப்பு, பூமியில் கவனிக்கப்பட்ட பாதிப்பு மற்றும் விண்வெளி மற்றும் பூமியில் கவனிக்கப்பட்ட பாதிப்புகள் என மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.

விண்வெளியில் கவனிக்கப்பட்ட பாதிப்பு :

ஆண்கள் : சிலருக்கு குறிப்பிடத்தக்க பார்வைக் கோளாறுகள் ஏற்பட்டன.

விண்வெளியில் கவனிக்கப்பட்ட பாதிப்பு :

பெண்கள் : பார்வைக் கோளாறுகள் ஏற்படவே இல்லை.

விண்வெளி மற்றும் பூமியில் கவனிக்கப்பட்ட பாதிப்பு :

ஆண்கள் : உஷார்நிலை தேர்வில் துல்லியம் மீது வேகத்தை காட்டினர்.

விண்வெளி மற்றும் பூமியில் கவனிக்கப்பட்ட பாதிப்பு :

பெண்கள் : உஷார்நிலை தேர்வில் வேகம் மீதான துல்லியத்தை காட்டினர்.

பூமியில் கவனிக்கப்பட்ட பாதிப்பு :

ஆண்கள் : குறைவான நோயெதிர்ப்பு சக்தி.

பூமியில் கவனிக்கப்பட்ட பாதிப்பு :

பெண்கள் : அதிகமான நோயெதிர்ப்பு சக்தி.

விண்வெளி மற்றும் பூமியில் கவனிக்கப்பட்ட பாதிப்பு :

ஆண்கள் : முதுமை ஏற்படுகையில் காது கேளாமை ஏற்பட்டது முக்கியமாக இடது காதில்.

விண்வெளி மற்றும் பூமியில் கவனிக்கப்பட்ட பாதிப்பு :

பெண்கள் : இரண்டு காதுகளிலுமே காது கேளாமை சிக்கல்கள் ஏற்படவில்லை.

விண்வெளியில் கவனிக்கப்பட்ட பாதிப்பு :

ஆண்கள் : தனிப்பட்ட முறையில் தசை மற்றும் எலும்பு இழப்பு வேறுபடுகிறது.

விண்வெளியில் கவனிக்கப்பட்ட பாதிப்பு :

பெண்கள் : (வேறுபாடு இன்றி) தனிப்பட்ட முறையில் தசை மற்றும் எலும்பு இழப்பு வேறுபடுகிறது.

பூமியில் கவனிக்கப்பட்ட பாதிப்பு :

ஆண்கள் : சிறுநீரக கற்கள் அதிகமாக காணப்படுகின்றன.

பூமியில் கவனிக்கப்பட்ட பாதிப்பு :

பெண்கள் : கதிர்வீச்சு தூண்டுதலால் புற்றுநோய் ஏற்பட அதிக வாய்ப்பு.

விண்வெளியில் கவனிக்கப்பட்ட பாதிப்பு :

ஆண்கள் : சிறுநீர் பாதை நோய் தொற்றில் குறைவாக காணப்படுகின்றன.

விண்வெளியில் கவனிக்கப்பட்ட பாதிப்பு :

பெண்கள் : சிறுநீர் பாதை நோய் தொற்று அதிகமாக காணப்படுகின்றன.

விண்வெளியில் கவனிக்கப்பட்ட பாதிப்பு :

ஆண்கள் : தலைசுற்றல் பாதிப்புகள் குறைவாகவே ஏற்படுகின்றன.

விண்வெளியில் கவனிக்கப்பட்ட பாதிப்பு :

பெண்கள் : தலைசுற்றல் பாதிப்புகள் அதிகமாக ஏற்படுகின்றன.

மேலும் படிக்க :

பிளாக் நைட்டை கண்காணிக்க கிளம்பிய செயற்கைகோள்..? சர்ச்சையான லோகோ..!


செயற்கை பிரளயம் உருவாக்கும் அதிபயங்கர ஆய்வு : சுவாரஸ்ய தகவல்கள்.!!

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Read more about:
English summary
Here's how space affects men and women differently. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்