மின்னாற்றலுக்குரிய காற்று : "கனவில் கூட நினைத்ததில்லை" விஞ்ஞானிகள் அதிர்ச்சி..!

Written By:

உருவம், சூழ்நிலை, நீர் ஆதாரம் என கிட்டத்தட்ட பூமி போன்றே இருக்கும் கிரகங்களை 'எர்த்-லைக் பிளான்ட்' (Earth-like) எனப்படும். அப்படியான கிரகங்கள் விண்வெளியில், பூமியில் இருந்து எவ்வளவு தொலைவில் இருந்தாலும் சரி அருகாமையில் இருந்தாலும் சரி அதற்கொரு இயற்கையான அழிவு ஏற்படுகிறது என்றால் அதே போன்றதொரு அழிவு நாம் வாழும் பூமி கிரகத்திற்கும் சாத்தியமான ஒரு அழிவு தான்..!

அப்படியான ஒரு அழிவு அதுவும் விஞ்ஞானிகள் கனவில் கூட நினைத்து பார்க்காதஒரு அழிவு அரங்கேறியுள்ளது..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

#1

வீனஸ் கிரகத்தில் மின் ஆற்றலுக்கு உரிய காற்று இருப்பதை நாசா - ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி நிதியுதவி ஆராய்ச்சியாளர்கள் கண்டனறிந்துள்ளனர்.

#2

ஒரு 'பூமி-போன்ற' கிரகத்தின் மேல் வளிமண்டலத்தில் உள்ள நீர் கூறுகளை நீக்க வல்ல போதுமான சசக்தியானது "மின்காற்றுக்கு" உள்ளது.

#3

மேலும் இதுபோன்ற "காற்று" தான் பூமியின் இரட்டை என்று அழைக்கப்படும் வீனஸ்-ன் கடல்களை காலி செய்து இருக்கலாம் என்றும் சந்தேகம் கிளம்பியுள்ளது.

#4

ஒரு மின்காற்று ஆனது விண்வெளியில் உள்ள பிராணவாயுவை உரிஞ்சுக்கொள்ளும் அளவு சக்தி வாய்ந்ததாக இருக்கும் என்று நாங்கள் கனவில் கூட கற்பனை செய்து பார்த்ததில்லை என்று விஞ்ஞானி கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.

#5

வீனஸ், பல வழிகளில் அளவு மற்றும் ஈர்ப்பு வகையில் மிகவும் பூமி போன்றே இருக்கும் ஒரு கிரகமாகும். மறுபக்கம் இந்த தொலைதூர கிரகத்தில் நீர் கடல் மதிப்பு இருந்ததற்கு ஒரு ஆதாரமும் இல்லை.

#6

அதன் 460 டிகிரி செல்சியஸ் மேற்பரப்பு வெப்பநிலையானது எந்த விதமான கடல்களையும் நீண்ட நாட்களாக விட்டு வைத்திருக்காது, நீராவியாக மாற்றி இருக்க வேண்டும் என்றும் நம்பப்படுகிறது, இப்போது வீனஸ் வசிக்கவே முடியாத ஒரு கிரகமாகும்.

#7

வீனஸின் அடர்த்தியான வளிமண்டலமானது பூமியை விட சுமார் 100 முறை அழுத்தமானது, ஆக பூமியின் வளிமண்டலத்தை விட 10,000 - 100,000 மடங்கு குறைவாக தண்ணீர் அங்கு இருக்க வேண்டும்.

#8

அந்த சிறிய நீர் ஆதாரத்தையும் துடைத்து விட்டிருப்பது மின்காற்று தான் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மின்காற்று ஒரு சிறிய விடயம் என்று இந்நாள் ஆராச்சியாளர்கள் நினைத்திருக்க அது வீனஸையே துடைத்தெறிந்த்து இருக்கிறது என்பது தான் அதிர்ச்சி.

#9

சர்ச்சை : கிஸா பிரமிட் சரியாக கட்டப்படவில்லை..!?


கிடைத்தது பூமியில் தான், ஆனால் அர்த்தம் தான் எங்கு தேடியும் கிடைக்கவில்லை..!


எட்டு மைல் சுரங்கம் : மறைந்திருந்த வரலாறு வெளிச்சத்திற்கு வந்தது.!!

#10

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Read more about:
English summary
'Electric winds' strip Earth-like planets of oceans and atmospheres. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்