பூமி கிரக வாசிகளுக்கு ஒரு 'மினி சர்ப்ரைஸ்'..!

Written By:

பூமியில் இருந்து கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு தொலைவில் ஒரு 'மினி மூன்' (Mini Moon)அதாவது பூமியின் இரண்டாவது குட்டி சந்திரன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மினி மூன் சமீபத்தில் தான் நாசா விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பூமி கிரக வாசிகளுக்கு ஒரு 'மினி சர்ப்ரைஸ்'..!

இந்த மிகச்சிறுகோள் ஆனது பல ஆண்டுகளாக பூமியை சுற்றி வருகிறது என்பதும் உடன் இது பல நூற்றாண்டுகளாக பூமியை பின்பற்றி தொடர வாய்ப்புள்ளது என்பதும் கண்டறியபட்டுள்ளது. இதுவொருபாறை வகையிலான, மிக தொலைவில் உள்ள ஒரு கோள் என்றாலும் கூட உண்மையில் இதுவொரு புதிய நிலவு தான். அது பூமி சுற்றுப்பாதையில் போதுமான நிலையாக உள்ள "கிட்டத்தட்ட பூமியின் ஒரு துணை " அல்லது ஒரு "அரை- செயற்கைக்கோள் " என்று நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

பூமி கிரக வாசிகளுக்கு ஒரு 'மினி சர்ப்ரைஸ்'..!

அது கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டின் பெயரோடு இணைக்கப்பட்டு அந்த சிறுகோளுக்கு 2016 HO3 என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. பூமி கிரகத்தை சுற்றியே தான் சுழல்கிறது மற்றும் ஒருபோதும் சூரியனை விட்டு மிகத்தொலைவாக செல்ல முயற்சிக்கவில்லை, சூரியனைச் சுற்றிவரும் கோளாக இருப்பினும் பூமியின் ஒரு நிலையான கூட்டாளியாக தான் அது நிலைக்கிறது.

பூமி கிரக வாசிகளுக்கு ஒரு 'மினி சர்ப்ரைஸ்'..!

இந்த மினி மூன் ஆனது முதன் முதலில் ஹவாயை அடிப்படையாக கொண்ட ஒரு தொலைநோக்கி மூலம் இந்தாண்டு ஏப்ரல் இறுதியில் கண்டறியப்பட்டது எனபதும் அப்போது அதன் அளவு உறுதி செய்யப்படவில்லை, ஆனால் இப்போது அது 40 மீட்டர் மற்றும் 100 மீட்டர் அளவிலான இருக்கலாம் என்று நாசா அறிவித்துள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Earth has a second, 'mini' moon, says NASA. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்