ஜூலை 29 : பூமி அழியவில்லையே ஏன்..? அப்போது கிளம்பிய பீதிகள்..!?

Written By:

கடந்த செப்டம்பர் மாதம் ஒரு அரிய 'சூப்பர் இரத்த சந்திரன் கிரகணம்' இரவு வானத்தில் ஏற்பட்டப்போது, உலக பேரழிவு நாள் நெருங்கி விட்டது என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக அப்படி ஏதும் நேராமல் உலகம் தொடர்ந்து, வழக்கம்போல இயங்கி கொண்டே தான் இருக்கிறது. எனினும் சமீபத்தில் வெளியாகிய யூட்யூப் வீடியோ ஒன்று 2016 ஆம் ஆண்டின் ஜூலை 29-ஆம் தேதி அன்று உலகம் அதன் பேரழிவு மூலம் முடிவுக்கு வரும் என்ற பகீர் காரணங்கள் அடங்கிய தகவல்களை வெளியிட்டது..!

ஜூலை 29 டூம்ஸ்டே (அதாவது உலகின் கடைசி நாள்) என்று மிகப்பெரிய அளவிலான பீதிகள் கிளம்பின, ஆனால் மிக வழக்கமாக பூமிக்கு பேரழிவு ஒன்று நேரவில்லை. ஏன்..?

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

டூம்ஸ்டே :

எண்ட் டைம்ஸ் தீர்க்கதரிசனங்களின் (End Times Prophecies) படி, இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை மற்றும் ஒரு காந்த துருவ புரட்டல் ஆகியவைகள் இணைய டூம்ஸ்டே எனப்படும் இறுதிநாள் நிகழும்.

வைரல் :

அது சார்ந்து அவர்கள் வெளியிட்ட வீடியோ ஒன்று ஐந்து மில்லியன் காட்சிகளை தாண்டி, வைரல் ஆனது.

உலகளாவிய பூகம்பங்கள் :

அதில் ஒரு காந்த துருவ புரட்டல் அதனை தொடர்ந்து உலகளாவிய பூகம்பங்கள் ஏற்பட்டு 'உருளும் மேகம்' உலகின் முடிவை பூர்த்தி செய்யும் என்று விளக்கப்பட்டது.

கடுமையான உருகிய மையப்பகுதி :

புவியினுள் ஆழத்தில் உள்ள ஒரு கடுமையான உருகிய மையப்பகுதியானது ஆபத்து உண்டாக்கும் சூரிய காற்றுக்கு எதிராக செயல்பட்டு பூமி கிரகத்தை பாதுகாக்கும் திறன் வாய்ந்த காந்தப்புலத்தை உருவாக்கி வைத்துள்ளது.

ஆயிரக்கணக்கான மைல்கள் :

அந்த பாதுகாப்பு புலம் ஆனது விண்வெளி ஆயிரக்கணக்கான மைல்கள் பரவியுள்ளது, மற்றும் அதன் காந்த சக்தியானது சர்வதேச தொடர்பாடல் தொடங்கி விலங்கு இடம்பெயர்வு, காலநிலை அமைப்பு வரை அனைத்தையும் பாதிக்கிறது.

200 ஆண்டுகளில் 15 சதவீதம் :

பூமியில் உயிர்வாழ மிகவும் முக்கியமான இந்த காந்தப்புலம், கடந்த 200 ஆண்டுகளில் 15 சதவீதம் பலவீனமாகிவிட்டது.

காந்தப்புல புரட்டல் :

காந்தப்புலத்தின் பலவீனம் ஒருபக்கமிருக்க, சதி கோட்பாட்டாளர்களோ ஒரு காந்தப்புல புரட்டல் நிகழும் என்றும் அந்த நிகழ்வு 'இயேசுவின் இரண்டாவது வருகை'யோடு சேர்த்து மேலெழுகிறது என்றும் தெரிவித்திருந்தனர்.

ஓசோன் படல சேதம் :

அதுபோன்ற ஒரு நிகழ்வு நேர்ந்தால் திறன் சூரிய காற்றானது ஓசோன் படலத்தை சேதம் செய்து ஓட்டைகளை உண்டாக்கும்.

பூமியின் சக்தி கட்டமைப்புகள் :

அந்த தாக்கமானது, பூமியின் சக்தி கட்டமைப்புகள் தாக்கி, பூமி காலநிலையை தீவிரமாக மாற்றும் மற்றும் புற்றுநோய் விகிதங்களை அதிகப்படுத்தி மனித இனத்துக்கு பேரழிவை உண்டாக்கும்.

விரிசல் விழும் :

"பூமியில் விரிசல் விழும், இடிந்து பிளக்கும், பூமி ஒரு குடிகாரனை போன்று தடுமாறும், புயலில் சிக்கிய ஒரு குடிசை போன்று திசைதிரும்பும்" என்று ஏசாயா 24:20-ல் குறிப்பிட்டுள்ளதையும் சதியாலோசனை கோட்டபாட்டாளர்கள் சுட்டிக்காட்டினர்.

நாசா :

இப்படியெல்லாம் பீதிகள் கிளம்ப மறுபக்கம் நாசாவோ ஒரு துருவ புரட்டல் மூலம் உலகம் முடிவுக்கு வருவது சாத்தியமில்லை என்று கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

எதிர்க் கொள்கைகள் கொண்ட நிலை:

2011-ல் வெளியான நாசாவின் அறிக்கை ஒன்றின் படி, நூற்றாண்டுகளுக்கும் மேலாக பூமியின் காந்தப்புலமானது அதன் எதிர் எதிர்க் கொள்கைகள் கொண்ட நிலையை பல முறை மாற்றிக் கொண்டுள்ளது.

தெற்கு :

இன்னும் தெளிவாக 800,000 ஆண்டுகளுக்கு முன்பு நாம் உயிருடன் இருந்து, நம் கையில் ஒரு காந்த திசைகாட்டி இருந்தியிருந்தால் அது 'வடக்கு' என்று நாம் அழைக்கும் திசையை "தெற்கு" என்று சுட்டிக்காட்டி இருக்குமாம்.

காந்தப்புல முனை :

ஏனெனில் ஒரு காந்த திசைகாட்டியானது பூமியின் துருவங்களின் அடிப்படையில் சரிசெய்து கொள்ளக்கூடியதாக இருக்கும், காந்தப்புல முனைகளை எதிர்மறையாக இருந்து திசைகாட்டியில் வடக்கு தெற்கு என்ற அடையாளங்கள் இருந்தால் திசைகள் தவறாகிவிடும்.

இயற்கையான புவியியல் நிகழ்வு :

இயற்கையான புவியியல் நிகழ்வுதனை தொடர்ந்து பூமியின் அழிவு வழிவகுக்கப்படும் என்று பல டூம்ஸ்டே கோட்பாட்டாளர்கள் பரிந்துரைத்துக் கொண்டே தான் இருக்கின்றனர், ஆனால் எதுவும் நிகழ்ந்தப்பாடில்லை.

கணிப்பு :

இதே எண்ட் டைம்ஸ் தீர்க்கதரிசனமானது (End Times Prophecies) மே மாதத்தில் ஒரு மாபெரும் சிறுகோள் மோதல் நிகழ்த்தும் என்று கணிப்பு கூறியிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க :

உலகம், இந்தியர்களுக்கு நன்றி சொல்லிக்கொண்டே இருக்கும்..!


'அழிக்கப்பட்ட' புகைப்பட ரோல்கள் : கிழிகிறது நாசாவின் முகத்திரை..!?


இதுநாள் வரை உண்மை என்று நாம் அனைவரும் நம்பிய 13 பிரமைகள்..!

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
Doomsday caused by a magnetic polar flip and second coming of Jesus Christ. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்