சூரியனுக்கு அருகிலேயே ஒரு வாழத்தகுந்த கிரகம், ஏலியன் கிரகமா..?

Written By:

இந்நாள் வரையிலாக நாம் கேள்விப்பட்ட, கண்டுபிடித்த வெளி கோள்களிலேயே மிக முக்கியமான எக்ஸோபிளான்ட் இதுவாகத்தான் இருக்கும். நமது அருகாமை நட்சத்திரதில், பிரக்ஸிம செண்டவுரியை சுற்றிவரும் ஒரு முக்கியமான வாழத்தக்க சாத்தியமுள்ள பூமி போன்ற கிரக கண்டுபிடிப்பை அறிவிக்க ஆராய்ச்சியாளர்கள் தயாராகி தயாராகி வருகின்றனர்.

இதுவொன்றும் முதன்முதலில் சூரிய மண்டலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட எக்ஸோ பிளான்ட் இல்லை தான், என்றாலும் கூட இதுவரை இந்த அளவு நெருங்கிய பூமி போன்ற கிரகம் கண்டுபிடிக்கப் பட்டதே இல்லை.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

4.24 ஒளி ஆண்டுகள் :

பிரக்ஸிம செண்டவுரி (Proxima Centauri) ஆனது வெறும் 4.24 ஒளி ஆண்டுகள் தூரத்தில் தான் உள்ளது.

கடினம் :

இருப்பினும் கூட தற்போதைய தொழில்நுட்பத்தை ஒப்பிட்டு பார்க்கும் போது ஒரு மனிதர் இந்த தூரத்தை அடைவது என்பது சற்று கடினம் தான், அண்டை கிரகமாக இருந்தாலும் கூட விண்வெளி என்பது மிகப்பெரியது.

உந்துவிசை முறை :

ஆனால் இந்த திட்டத்தின் நோக்கத்தை பொறுத்து சோதனை உந்துவிசை முறைகள் மூலம் சாத்தியமான 100 ஆண்டுகள் 20 ஆண்டுகள் வரை எங்கும் உள்ள நட்சத்திர அமைப்பிற்கு பயணம் செய்ய முடியும் முடியும்.

அடுத்த தலைமுறை :

நம் வாழ்நாள் முடிவதற்குள் பூமி போன்ற வாழத்தக்க கிரகத்தை அடைய முடியவில்லை என்றாலும் கூட நம் அடுத்த தலைமுறை வாழ்நாளில் சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள கிரகத்தை அடைய சாத்தியப்படுத்தி வைக்கலாம் என்பதே ஆராய்ச்சியாளர்களின் எண்ணம்.

திரவ நீர் :

இன்னும் பெயர் வைக்கப்படாத அந்த கிரகத்ன் மேற்பரப்பில் வாழ்க்கை தோன்றுவதற்கான ஒரு முக்கிய தேவையான திரவ நீர் இருக்க முடியும் என்றும் பிரக்ஸிம செண்டவுரியை பூமி போன்றே உள்ள வட்டப்பாதையில் சுழல்கிறது என்றும் நம்பப்படுகிறது.

எல்லைகள் :

பிரக்ஸிம செண்டவுரி பூமிக்கு நெக்கமாக இருந்தாலும் அது ஒன்றும் மிக பிரகாசமான நட்சத்திரம் அல்ல, உடன் கண்டுபிடிக்கப்பட்ட கிரகம் மிகவும் மங்கலான வெளிச்சத்தில் உள்ளது, அதை கண்டறிந்து ஆராய தற்போதைய தொழில்நுட்பங்கள் சற்று எல்லைகள் மீற வேண்டும்.

ஆல்பா சென்டாவுரி ஏ :

ஒரு மூன்று நட்சத்திர அமைப்பின் ஒரு பகுதியான பிரக்ஸிம செண்டவுரி ஆனது ஆல்பா சென்டாவுரி ஏ ஆகிய வின்மீன்களுடன் அடங்கும் மற்றும் இவைகள் தென் துருவத்தில் பெரும்பாலும் காணக்கூடிய ஒரு எம் வகை சிவப்பு குள்ள நடச்சத்திர அமைப்பாகும்.

கல்லெறி தூரம் :

ஒருவேளை இந்த நட்சத்திரத்தைச் சுற்றி வாழ்வாதாரம் இருந்தால் விண்வெளியை பொறுத்தமட்டில் இதுவொரு கல்லெறி தூரம் தான்,அதை அடைவதற்காகவே ஒரு தொழில்நுட்பம் உருவாக்க வேண்டும் அவ்வளவு தான்.

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Does an Earth-Like Alien Planet Orbit the Sun's Closest Neighbor? Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்